Published:Updated:

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, `ஹே ராம்' என்று சொன்னாரா? #VikatanOriginals #VikatanClassics

Gandhi's death
News
Gandhi's death

காந்தி சுடப்பட்டபோது மிகவும் அருகிலிருந்து பார்த்தவர், ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அந்தச் செய்தியையும் உலகுக்குச் சொன்னவர் அவர். இந்த 'ஹே ராம்' குழப்பத்துக்கு அவரைத் தவிர வேறு யாரால் விடை கொடுத்துவிட முடியும்?

30 ஜனவரி 1948. மாலை 5.17 மணி. அப்போதைய பிர்லா மாளிகையில் ஒரு கூட்டத்துக்காகச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. மிக அருகில் நின்று 'பாயின்ட் பிளாங்க்' எனப்படும் தூரத்திலிருந்து மூன்று குண்டுகள் காந்தியின் உடலில் பாய்ந்தன. ஒரு சிலர், காந்தி அதே இடத்தில் இறந்தார் என்றும் மேலும் சிலர், அவர் படுக்கையறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து இறந்தார் என்றும் தெரிவிக்கின்றனர். இப்படி காந்தியின் இறப்பு குறித்து முரண்பாடான சில தகவல்கள் இன்னமும் விவாதத்தில் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் 'ஹே ராம்' பிரச்னை.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டபோது அவர், 'ஹே ராம்' என்று சொல்லிவிட்டு இறந்துபோனதாக ஒரு சாரார் இன்றும் விவாதம் செய்கின்றனர். இதை அடிப்படையாகவைத்தே கமல்ஹாசன், 'ஹே ராம்' என்று தன் படத்துக்கு தலைப்பு வைத்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காந்தி இறந்தபோது, அதை உலகம் முழுக்கவே ஃப்ளாஷ் செய்த நிருபர், ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அதன்பிறகு, 1997ல் புகழ்பெற்ற 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் ஆசிரியராக ஜேம்ஸ் இருந்தபோது, மும்பையில் நடந்த ஒரு லெக்சரின்போது, இந்த 'ஹே ராம்' சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். காந்தி சுடப்பட்டபோது மிகவும் அருகிலிருந்து பார்த்தவர் அவர். அந்தச் செய்தியையும் உலகுக்குச் சொன்னவர் அவர். இந்த 'ஹே ராம்' குழப்பத்துக்கு அவரைத் தவிர வேறு யாரால் விடை கொடுத்துவிட முடியும்?

18-05-1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஜேம்ஸின் மும்பை லெக்சர் மற்றும் அவரின் விளக்கம் குறித்துக் கட்டுரை ஒன்று வெளியானது. அது, உங்களின் பார்வைக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, `ஹே ராம்' என்று சொன்னாரா? #VikatanOriginals #VikatanClassics

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட கண்ணீர்ச் செய்தியை உலகம் முழுக்க ஃப்ளாஷ் செய்த நிருபர், ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அப்போது, யு.பி.ஐ (United Press International) என்கிற செய்தி நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்தார் ஜேம்ஸ். 75 வயதாகும் ஜேம்ஸ், இப்போது 'ஃபோர்ப்ஸ்' என்கிற புகழ்பெற்ற பிஸினஸ் பத்திரிகையில் ஆசிரியர்.

மகாத்மா காந்தி இறப்பு
மகாத்மா காந்தி இறப்பு

போன வாரம் ஒரு லெக்சர் கொடுப்பதற்காக மும்பைக்கு வந்திருந்தார் அவர். "காந்திஜியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றபோது, டெல்லி பிர்லா ஹவுஸில் நீங்களும் இருந்தீர்கள். காந்திஜி இறப்பதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார்கள் அவரிடம்.

"அதிகாரபூர்வமான செய்திகள், 'ஹே ராம்' என்று காந்தி மகான் சொன்னதாக வந்தது. ஆனால், அவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை! இறப்பதற்கு முன் அவர் எந்த வார்த்தையும் சொல்லவில்லை என்பதே எனக்கு ஞாபகம்!" என்று பதில் சொல்லியிருக்கிறார், ஜேம்ஸ் மைக்கேல்ஸ்.

காந்தி இறப்பு பற்றி ஜேம்ஸ் மைக்கேல்ஸ்
காந்தி இறப்பு பற்றி ஜேம்ஸ் மைக்கேல்ஸ்

"காந்திஜி சுடப்படும்போது, ரொம்பப் பக்கத்தில் இருந்தேன். அவர் சுடப்பட்டவுடன், டியூட்டியில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் செய்யத் தேவையில்லாத ஒரு காரியத்தைச் செய்தேன். ஆம். வாய்விட்டுக் கதற ஆரம்பித்துவிட்டேன்!" என்று மும்பை பிரஸ்மீட்டில் சொல்லியிருக்கிறார்.

காந்தி இறப்பு குறித்த செய்தியிலிருந்து...
காந்தி இறப்பு குறித்த செய்தியிலிருந்து...

காந்திஜி படுகொலைச் செய்தி வெளியான பேப்பர் கட்டிங்கை இன்னமும் தனது நியூயார்க் அலுவலகத்தில் ஃபிரேம் போட்டு மாட்டிவைத்திருக்கிறார் ஜேம்ஸ். 'காந்தி கொல்லப்பட்டார். இந்தியாவின் ஆன்மா ஒரு மத வெறியனால் சுட்டுத் தள்ளப்பட்டது' என்ற தலைப்புடன் தொடங்குகிறது அந்த நியூஸ்!