Published:Updated:

"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

விடுவேனா... பாலுமகேந்திரா சாரிடம் குருகுலவாசம் ஆரம்பிச்சது. சினிமாவில் இதோ இதோன்னு பல கதவுகளைத் திறந்துட்டே இருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''தாத்தா, தாய் மாமாவெல்லாம் எம்.எல்.ஏ-வா இருந்தவங்க. அப்பா சித்ரவேல், கால்நடைத் துறையில் விஞ்ஞானி. விருதெல்லாம் வாங்கி, அவர் தீஸிஸ் செய்த பேப்பரை எடின்பர்க் யூனிவர்சிட்டிவரைக்கும் வெச்சிருக்காங்க. அம்மா மேகலா, டீச்சர். அக்கா டாக்டர். என்னை இன்ஜினீயரா பார்க்கணும்னு அப்பாவுக்கு ஆசை. எல்லா பிள்ளைகளும் மாதிரி அப்பா பேச்சைக் கேட்காம, சென்னைக்கு வந்தவன் நான்!'' - சிரிக்கிறார் வெற்றிமாறன். 'பொல்லாதவன்' தந்த உற்சாகம் தலைக்கு ஏறாமல் பணிவின் வாசலில் நின்று பேசுகிறார்.

''எப்பவும் புத்தகங்கள்தான் என்னை வழிநடத்தி வந்திருக்கு. நிறைய ஆங்கில நாவல்கள். அப்பாதான் நிறைய கவலைப்பட்டார். அம்மா எப்பவும் என் கட்சி. புத்தகம் படிக்கிறதும் படம் பார்க்கிறதுமா இருந்ததில் படிப்பில் கவனம் குறைஞ்சுபோச்சு. ப்ளஸ் டூ பாஸ் பண்ணினதே அப்பாவுக்காகத்தான்னு சொல்றதுதான் நியாயம். வீட்டில் யுத்தம் உச்சத்துக்கு வந்து லயோலாவில் ஆங்கில இலக்கியம் படிக்கச் சேர்ந்தேன். 'லாடம்'னு குறும்படம் செய்தேன். பாலுமகேந்திரா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மூணு பேரும் ஜட்ஜா வந்தாங்க. 'உன்கிட்டே விஷயம் இருக்கு'ன்னு சொல்லிட்டுப் போனார் பாலுமகேந்திரா சார்.

"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

விடுவேனா... பாலுமகேந்திரா சாரிடம் குருகுலவாசம் ஆரம்பிச்சது. சினிமாவில் இதோ இதோன்னு பல கதவுகளைத் திறந்துட்டே இருந்தார். ஒரு தகப்பன் மாதிரியே அவரிடம் சண்டை போடுவேன். கோபிச்சுட்டுப் போயிடுவேன். 'அவனை வரச் சொல்லு'ன்னு ஆள் விட்டு அனுப்புவார். 'கதை நேரம்'ல எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார். 'அது ஒரு கனாக்காலம்' முடியும்போதும் சண்டை. அப்புறமும் கூப்பிடுவார். இன்னிக்கும் பாலுமகேந்திரா மாதிரி திருப்தியோ, அதிருப்தியோ இல்லாமல், நுரைத்தோடும் மனசு வேணும்னு நினைப்பேன். இடையில் இருந்த மௌனத்தை அறுத்தெறிஞ்சுட்டு, 'இன்னிக்கு எந்த ஸீன் எடுக்கிறோம்'னு ஆரம்பிப்பார்.

'அது ஒரு கனாக்காலம்' டைம்ல தனுஷோடு நல்ல பழக்கம் இருந்தது. கால்ஷீட் பேசுகிற வரைக்கும் என்னை அனுமதித்து இருந்தார் பாலு சார். தனுஷிடம் சொன்ன கதை 'தேசிய நெடுஞ்சாலை'. 'ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் செய்வோம்'னார். அப்புறம் பல மாற்றங்கள். அடுத்து உருவானதுதான் 'TNR - 04 5059'. அதுதான் 'பொல்லாதவன்' படத்துக்கு முதலில் வந்த பெயர். இன்னும் அதிரடியா பெயர் மாத்தலாம்னு நினைச்சப்போ வந்த பெயர் 'பொல்லாதவன்.' 'ஒரு வார்த்தை ரஜினி சாரிடம் கேட்டுட்டு வந்திடுறேன்'னு சொல்லிட்டுப் போனார் தனுஷ். ரஜினி சார் பச்சைக் கொடி காட்டினார்.

"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

உலகத்திலேயே பெரிய வலி நிராகரிப்புதான். எதுக்கும் லாயக்கில்லைன்னு சொல்லப்படுற பையன், ஒரு இடத்துக்கு வந்து நல்லபடியா நிக்கிறதைக் கொஞ்சம் அதிரடியாகச் சொல்லிக்காட்டணும்னு செய்த படம்.

படத்தை முடிச்சுட்டு ரஜினி சாருக்குக் காட்டினோம். ஒற்றை ஆளாய் உட்கார்ந்து பார்த்தவர், 'சூப்பர்'னு வெளியே வந்து சொன்னார். ஷங்கர் சார் பார்த்துட்டு, 'ரொம்பப் புதுசு. நல்ல ஸ்டைல் இருக்கு'ன்னு சொன்னார். 'ஹீரோ மேலே டைரக்டர் கவனம் போறது பெரிய விஷயமில்லை. ஆனால், சின்னச் சின்ன கேரக்டர்களிலும் உங்கள் பார்வை போயிருக்கு'ன்னு பாராட்டினார் விக்ரம்.

எல்லாம் சரி, சந்தோஷம். ஆனா, 'பி.இ., படிக்காம சினிமாவுக்குப் போறியேடா'ன்னு அத்தனை ஆதங்கமாக் கேட்ட என் அப்பா இப்போ இல்லை. அவர் இன்னும் இருந்து என் படம் பார்த்திருந்தா, நிச்சயமா ஜெயிச்சதா உணர்ந்திருப்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!''

- நா.கதிர்வேலன்

"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

| ஆனந்த விகடன் நவ.28, 2007 இதழில் இருந்து. |

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு