Published:Updated:

`டிரைவர் தேவையில்லை...' தானாகவே உழவு ஓட்டும் டிராக்டர்! புதிய கண்டுபிடிப்பு!

டிரைவர் இல்லாத டிராக்டர்

தெலங்கானாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர், பேராசியர்கள் இணைந்து விவசாயத்துக்கு உதவும் வகையில் டிரைவர் இல்லாத டிராக்டரை அறிமுகம் செய்துள்ளனர்.

Published:Updated:

`டிரைவர் தேவையில்லை...' தானாகவே உழவு ஓட்டும் டிராக்டர்! புதிய கண்டுபிடிப்பு!

தெலங்கானாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர், பேராசியர்கள் இணைந்து விவசாயத்துக்கு உதவும் வகையில் டிரைவர் இல்லாத டிராக்டரை அறிமுகம் செய்துள்ளனர்.

டிரைவர் இல்லாத டிராக்டர்

தெலங்கானாவின் ஹனம்கொண்டா மாவட்டத்தில் இயங்கி வரும் காகதீயா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்ஸ், வாரங்கல் (KITS-W) என்ற கல்வி நிறுவனம் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விவசாயத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் ஐந்தாவது முறையாக டிராக்டர் வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டுள்ளது.

டிரைவர் இல்லாத டிராக்டர்
டிரைவர் இல்லாத டிராக்டர்

ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டை பயன்படுத்தி ஸ்மார்ட் ஃபார்மிங்குக்கான விவசாய கருவிகளின் ஆட்டோமோஷன் (ஒரு கேமிங் அப்ரோச்) என்ற தலைப்பிலான திட்டத்தின் கீழ் இந்த தானியங்கி டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. KITS-W-ன் முதன்மை பேராசிரியர் அசோகா ரெட்டியின் வழிக்காட்டுதல்படி இதற்கென பிரத்யேக தொழில்நுட்பக் குழு இந்தப் புதுமையான தொழில்நுட்பத்தை உயிர்ப்பிக்க 40 லட்சம் ரூபாய் ஆராய்ச்சி மானியமாகப் பெற்று இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில ஐ.டி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தனது ட்விட்டரில், ``KITS-W குழுவால் உருவாக்கப்பட்டுள்ள டிரைவர் இல்லாத தானியங்கி டிராக்டரால் ஈர்க்கப்பட்டேன். இதுவே விவசாயத்தின் எதிர்காலம் மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும். இளம் கண்டுப்பிடிப் பாளர்கள் இதுபோன்ற யோசனையுடன் வெளியே வர வேண்டும். உங்களுக்கு அரசு நிச்சயம் உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

KITS-W, முதன்மை பேராசிரியர் கே அசோகா ரெட்டி இந்தத் திட்டம் பற்றிப் பேசும்போது, ``டிரைவர் இல்லாத தானியங்கி டிராக்டர் விவசாயிகளுக்கு நிலத்தை உழுவதற்கு எளிமையாக இருக்கும். அதே நேரத்தில் செலவும், ஆள் தேவையும் குறைந்து விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்கவும் செய்யும். இத்திட்டம் விவசாய நடவடிக்கைகளில் மனித உழைப்பை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

``கம்ப்யூட்டர் கேம் போன்று ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இதை இயக்க முடியும். உழும் நிலத்தின் தொலைவு, வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் போன்றவற்றை அறிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரம் நிகழ்நேர களத் தரவைச் சேகரித்து அதற்கேற்ப அதன் செயல்பாடுகளைச் சரி செய்துகொள்கிறது. தினசரி வானிலை மற்றும் வயலுக்கு தண்ணீர் வழங்கும் தரவுகளைப் பதிவு செய்யும் போது ஏற்படும் தடைகளை அடையாளம் காண உணரிகளைப் (சென்சார்) பயன்படுத்துகிறது இந்த டிராக்டர். இது தரவு பகுப்பாய்வு மூலம் துல்லியமான நீர் மேலாண்மை மற்றும் பயிர் விளைச்சலை முன்னறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார் அசோகா ரெட்டி.