Published:Updated:

`ஆஹா.. நீ என் போன ஜென்மத்து மனைவி அல்லவா!' - போலிச் சாமியார்களின் நிஜமுகம் #VikatanVintage

நாம் நமது சுயநலத்தால், பேராசையால், பலவீனத்தால், போலிச் சாமியார்களின் காலில் கிடக்கிறோம். மதத்தின் நன்மை கருதியும், மனிதனின் நன்மை கருதியும் இந்த விஷயத்தில் மறுபரிசீலனை மிக மிக அவசியம்

போலிச் சாமியார்
போலிச் சாமியார்

சுகி சிவம். 26.9.1999 தேதியிட்ட ஆனந்த விகடன்

கடவுள் வேறு... மனிதன் வேறு என்று நினைப்பது வழிபாட்டில் ஆரம்ப நிலை. கடவுளும் நானும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஆத்ம நிலை. இந்தப் புரிதல் நிகழ்ந்தவர்களை 'ஸ்வாமி' என்று கொண்டாடுவது நமது பண்பு.

பகவான் ரமணர், ராமகிருஷ்ணர், சிவானந்தர், வள்ளலார், மணிவாசகர், நூற்றாண்டு கண்ட காஞ்சி மகா ஸ்வாமிகள் ஆகியோர் நமது மரியாதைக்குரிய முன்னோடிகள். இந்த உயர்நிலை தொடமுடியாத ஞானக் குட்டைகள், எந்த உழைப்பும் இன்றி வசதி, மரியாதை, சுகபோகங்களை அடைய சாமியார்களாக வேஷம் போட்டனர்.

ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மருத்துவம், ஏவல், பில்லி சூனியம், தனவசியம், ஆவி யுலகத் தொடர்பு என்று பலப்பல தலைகளுடன் பவனி வரும் ராவண சாமியார்கள்... மெலிந்து நலிந்த ஜனங்களாகிய ஜானகிகள் விழுந்து விழுந்து இவர்களை வணங்கும் விபரீதம்... தன்னம்பிக்கையின் தலையில் இடி விழச் செய்து, முதுகெலும்பை முனை முறித்துப்போட்டு, மூச்சு விடுவதானாலும் சாமியைக் கேட்டுத்தான் விடவேண்டும் என்று பக்தர்களைப் பயமுறுத்தி வைத்திருக்கிற பயங்கரம்...

இறை வழிபாட்டால் சித்திகள் உண்டாகும். ஆனால், யாராவது சித்திகளுக்காக வழிபாடு செய்வார்களா?'' என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.

பலநூறு சாமியார்களோடு பழகிய நான் சொல்கிறேன்... இவர்களில் பலர் நம்மைப் போல சாதாரணமானவர்களே! நம்மைப் போல் ஆசாபாசங்கள் உள்ள சராசரிகள். சிலசமயம் நம்மைவிட ஆசாபாசம்மிக்கவர்கள்!

தன் சங்கீதத்தால் ஜனங்களை வைகுந்தம் கூட்டிச் செல்லவல்ல ஒரு சாமியாரின் காலை நேரப் பணி - ஆர்வமாக ப்ளூ ஃபிலிம் பார்ப்பது!

''மந்திரங்களை முறையாக ஜெபித்தால் சித்திகள் தாமே வரும். ஆனால், இதனால் எந்தப் பயனும் இல்லை. முக்திக்கு இவை தடை! உணவு சாப்பிட்டால் மலம் உண்டாகும். யாராவது மலம் உண்டாகவேண்டும் என்று உணவு கொள்வார்களா? அப்படித்தான்... இறை வழிபாட்டால் சித்திகள் உண்டாகும். ஆனால், யாராவது சித்திகளுக்காக வழிபாடு செய்வார்களா?'' என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.

நாம் நமது சுயநலத்தால், பேராசையால், பலவீனத்தால், போலிச் சாமியார்களின் காலில் கிடக்கிறோம். மதத்தின் நன்மை கருதியும், மனிதனின் நன்மை கருதியும் இந்த விஷயத்தில் மறுபரிசீலனை மிக மிக அவசியம் என்று பணிவோடு, ஆனால் உறுதியோடும் திடமான பக்தியோடும் சொல்கிறேன்.

`ஆஹா.. நீ என் போன ஜென்மத்து மனைவி அல்லவா!' - போலிச் சாமியார்களின் நிஜமுகம் #VikatanVintage

இந்த அவலங்கள் கடல் கடந்தும் நடக்கின்றன. சிங்கப்பூரில் ஒரு குருக்களை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள். ஏன் தெரியுமா? பெண் பக்தர்களுக்கு அவர் மந் திரித்துக் கயிறு கட்டிவிடுவார். இதில் என்ன தப்பு? பெண்கள் இடுப்பில் அவரே கட்டிவிடுவார். இதுதான் திரிசமம்! இவர்கள் குருமார்களா... குரூரமானவர் களா? யோசியுங்கள்.

தன்னைப் பார்க்க வந்த திருமணமான பெண்ணை உற்றுப் பார்த்த காமச் சாமியார், ''ஆஹா.. நீ என் போன ஜென்மத்து மனைவி அல்லவா! இந்த ஜென்மத்திலும் நீ என்னுடன் இருக்கக்கடவாய்'' என்று திருவாய் மலர்ந்தார். உறவும் பிறப்பும் அர்த்தம் அற்றது என்று இந்த ஜென்மத்து உறவுகளையே உதறவேண்டிய ஞானிகள் போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்துக்கொள்வது நியாயம் தானா?

- தன் அனுபவத்தில் கண்ட போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கிறார் சுகி சிவம். 26.9.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய கட்டுரையை முழுமையாக வாசிக்க > சாமியார்களைத் தேடி ஓடும் சாமானியர்களே..! https://www.vikatan.com/arts/nostalgia/38722--2

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9