Published:Updated:

``அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?" - பிரச்னை பகிரும் சிம்பு #VikatanVintage

பொதுவா அறிமுக ஹீரோக்கள் எல்லோரும் 'மினிமம் கேரன்டியா' காதல் படங்களில்தான் நடிப்பாங்க. ஆனா, நான் அப்பவே கமர்ஷியல் படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன்

சிம்பு
சிம்பு

- ஆனந்த விகடன் ஆக.04, 2010 இதழிலிருந்து.

சிம்புவின் வழக்கமான விறுவிறு சுறுசுறு பேட்டி இது. ஆனால், ஒரு நிருபர் எடுத்த பேட்டி அல்ல. இந்த வருடம் 'விகடன் மாணவப் பத்திரிகையாளரா'க தேர்வான 52 மாணவப் பத்திரிகையாளர்கள் இணைந்து சிம்புவை மிரட்டிய பேட்டி.

" 'வானம்' படத்தில் ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுல நடிக்க எப்படி ஓ.கே சொன்னீங்க?"

"நான் 'சிங்கிள் ஹீரோ', 'டபுள் ஹீரோ'ன்னு வித்தியாசப்படுத்திப் பார்க்குறது இல்லை. 'கோவா' படத்தில் ஒரே ஒரு ஸீன்தான் வந்தேன். ஏன்னா, அதை நான் மட்டும்தான் பண்ண முடியும். ஒரு கதையில் என் கேரக்டர் எப்படி இருக்குன்னுமட்டும் தான் பார்ப்பேன். வேற எதுவும் கிடையாது!"

"நீங்க ரிஜெக்ட் பண்ணிய கதைகள், சமயங்களில் ஹிட் படமாகி இருக்கலாம். அப்படி 'நாம மிஸ் பண்ணிட்டோமே'ன்னு நீங்க நினைச்ச படம் ஏதாவது இருக்கா?"

"அப்படி எதையும் மிஸ் பண்ணதா நான் நினைக்கலை. சில படங்கள், 'நல்லவேளை மிஸ் பண்ணோம்'னுதான் நினைக்க வெச்சிருக்கு!"

``அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?" - பிரச்னை பகிரும் சிம்பு #VikatanVintage

"பலமான சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்துதான் நீங்க சினிமாவுக்கு வந்தீங்க. ஆனாலும், உங்க ஆரம்ப காலப் படங்கள் நிறைய தோல்வியைச் சந்தித்தன. ஏன் அப்படி?"

"பொதுவா அறிமுக ஹீரோக்கள் எல்லோரும் 'மினிமம் கேரன்டியா' காதல் படங்களில்தான் நடிப்பாங்க. ஆனா, நான் அப்பவே கமர்ஷியல் படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன். 'தொட்டி ஜெயா', 'மன்மதன்' மாதிரியான வித்தியாசமான படங்களும் பண்ணேன். கொஞ்சம், கொஞ்சமா தான் எனக்கு ஸ்டார் வேல்யூ வந்துச்சு. தமிழ் சினிமாவில் மற்ற ஹீரோக்களின் கிராஃப் உடன் என்னை நீங்க ஒப்பிட முடியாது. என் கிராஃப் வித்தியாசமானது!"

"காதல் பத்தி இப்ப உங்க கருத்து என்ன?"

"காதல் அழகான மெலடி பாட்டு மாதிரி. காதலர்கள் அதில் வர்ற பாடல் வரிகள். பாடல் வரிகள் தப்பா இருக்கலாம். பாட்டு எப்பவும் தப்பா இருக்காது!"

"நீங்க ஹீரோவா படம் பண்ணிட்டு இருக்குறப்பவே உங்க அப்பாவும் ஹீரோவா நடிக்கிறார். ஏன் இப்படி?"

"ஒவ்வொருத்தருக்கும் ஒரு மார்க்கெட் இருக்குங்க. நான்தான் தமிழ் சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் நானும் ஒருத்தன். அப்பாவுக்கு உள்ள மார்க்கெட்டுக்கு அவர் பண்றார். அவரோட வயசுல என்னால சத்தியமா இவ்வளவு வேலை பார்க்க முடியாது. அவர் இன்னிக்கும் ஆக்டிவ்வா இருக்கார். ஒருவேளை நாளைக்கு என் பையன் நடிக்க வந்தா அவனுக்கும் பாட்டுப் பாடி டான்ஸ் பண்ணுவார்!"

``அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?" - பிரச்னை பகிரும் சிம்பு #VikatanVintage

"உங்களுக்குப் பிடிச்ச நடிகைகள் யார்?"

"முன்னாடி குஷ்பு, அப்புறம் ஜோதிகா, இப்போ அனுஷ்கா!"

"உங்க ட்ரீம் புராஜெக்ட் என்ன?"

"பண்ணலாங்க, நிறைய பண்ணலாம். ஆனா, அன்னிக்கு 'இன்செப்ஷன்' படம் பார்க்கப் போயிருந்தேன். நாலு ஸீன் புரியலைன்னதும் முக்கால்வாசிப் பேர் தூங்கிட்டாங்க. இதுதான் நம்மகிட்ட உள்ள பிரச்னை. கொஞ்சம் கவனிச்சுப் புரிஞ்சுக்க முயற்சியே பண்றது இல்லை. அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?"

"தமிழ் சினிமாவில் இப்போ உங்களுக்கு யார் போட்டி?"

"நான் யாரையும் போட்டியா நினைக்கலை. என் படம் ஓடுதா, கலெக்‌ஷன் வருதான்னு மட்டும்தான் பார்ப்பேன்!"

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo