Published:Updated:

`எம்மதமும் சம்மதமே!' - விவேகானந்தர் காட்டிய இந்து தர்மம் வழி நடக்கிறதா பா.ஜ.க? #VikatanOriginals

விவேகானந்தர்
விவேகானந்தர்

எது இந்து தர்மம். மற்ற மதங்களைக் கீழே இறக்கி, இந்து மதத்தை நிறுவுவதா அதன் ஒற்றை லட்சியம்? இந்து மதம் பெற்றுள்ள இன்றைய வடிவின் தந்தை என்று அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தரே அதைத் தீர்க்கமாக மறுக்கிறார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தம்

'மதத்தின் அடிப்படையில் இந்தியர்களைத் தேர்வு செய்யும் முறை ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல மனித நேயத்துக்கே எதிரானது!'

என்று எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலிக்கின்றன. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு சட்டத் திருத்தங்களை முன்வைத்து வரும் ஆளும் பா.ஜ.க அரசு, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி இருக்கிறது. உலக அரங்கிலிருந்தே இந்தக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

இந்நிலையில், எது இந்து தர்மம் என்ற விவாதம் சமுக தளங்களில் அனலடிக்கிறது. சான்றோர்கள் சொன்னது என்ன. மற்ற மதங்களைக் கீழே இறக்கி, இந்து மதத்தை நிறுவுவதா அதன் ஒற்றை லட்சியம். இந்து மதம் பெற்றுள்ள இன்றைய வடிவின் தந்தை என்று அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தரே அதைத் தீர்க்கமாக மறுக்கிறார். மேலும், தீவிர ஆன்மிகவாதியான அவரின் செயல்பாடுகளே எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் பண்புடனே திகழ்ந்தன.

20.1.1963-ம் ஆண்டில் விவேகானந்தருக்கென தலையங்கம் உட்பட 10-க்கும் மேற்பட்ட பக்கங்களை ஒதுக்கி, அவர் குறித்து விரிவாக எழுதியிருக்கிறது ஆனந்த விகடன். அதில், இந்து மத தர்மத்தின் சாராம்சத்தையும் இந்தியாவின் பன்முகத்தன்மையின் தனிச்சிறப்பு மற்றும் விவேகானந்தர் கூறியவை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் வழியை நேரு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தும் கார்ட்டூனும் தலையங்கம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் விவேகானந்தர் கூறும் சில கருத்துகள்...

Swami Vivekananda #VikatanOriginals
Swami Vivekananda #VikatanOriginals

"உலக மதங்கள் என்பனவெல்லாம் ஆடவரும் பெண்டிரும் தம் தம் வெவ்வேறு இயல்புகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வருவதும், போவதும், யாத்திரை செய்வதுமே யாகும்" என்றவர், மதம் குறித்தான தன்னுடைய நிலைப்பாட்டை இவ்வாறு விளக்குகிறார்.

"சென்ற கால மதங்களையெல்லாம் நான் ஏற்கிறேன்; வணங்குகிறேன். மசூதிக்குச் செல்வேன்; மாதா கோயிலுக்குச் செல்வேன். சிலுவை முன் மண்டியிடுவேன். புத்தவிகாரம் செல்வேன். புத்தரைச் சரண் புகுவேன்; வனம் புகுவேன்; ஒளி காணத் தவம் செய்யும் இந்துவுடன் அமர்ந்து தவம் செய்வேன்!
ஆன்மா ஒவ்வொன்றும் தெய்விகமானதே! உள்ளும் புறமும் இயற்கையைக் கட்டுப்படுத்தி இத் தெய்விக சக்தி பரிணமிக்கச் செய்வதே லட்சியம். பணி செய்வதன் மூலமோ, வழிபாட்டின் மூலமோ, தத்துவ விசாரத்தின் மூலமோ, எவ்வழியிலோ, அன்றி எல்லா வழியிலுமோ இதைச் செய்து விடுதலை பெறுக!'' என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.
Swami Vivekananda #VikatanOriginals
Swami Vivekananda #VikatanOriginals

இது மட்டுமன்றி, குமரியில் அமர்ந்து சிந்தனை செய்யும் அவர், "இமயத்திலிருந்து 2,000 மைலுக்கு அப்பால் உள்ள குமரி வரையில் பாரத மாதாவின் திருமேனி அழகைப் பார்க்கிறேன்! எத்தனை வேறுபாடுகள்? இத்தனைக்கும் இடையே ஒற்றுமைச் சரடு ஒன்று ஊடுருவிச் செல்கிறது. அதுதான் இந்து தர்மம். ஒப்பற்ற அந்தத் தர்மம்தான் இந்தப் புண்ணிய பூமியின் உயிர்நாடி. காலத்தின் கோலத்தால் நலிவுற்றிருக்கும் அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற பேராவல் பிறக்கிறது" என்கிறார். அதாவது, சாதி, மதம், மொழி என எத்தனை வேறுபாடுகள் இருப்பினும் அவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் நம் நாடு என்று உறுதிப்படத் தெரிவிக்கிறார்.

மதங்கள் குறித்துப் பேசுகையில்,

"மதம் என்பது என்ன? உலகப் பந்தங்களிலிருந்து விடுதலை வேண்டி நடைபெறும் ஆன்ம சோதனையே! இயற்கைச் சக்திகள் எல்லாம் மனித வாழ்வை வலிவுடன் பற்றின. இவற்றுடன் சமரசமாக வாழ்வதன் பொருட்டு பல்வேறு உருவில் இவற்றை மனிதன் சில சமயங்களில் வணங்கினான்; மற்றும் சில சமயங்களில் இவற்றை மீறினான்" என்பவர் மதத்தின் வழி இறைவனை அடைவது இந்து மதத்துக்கானது மட்டுமல்ல என்பதை இப்படி விளக்குகிறார்...

Swami Vivekananda #VikatanOriginals
Swami Vivekananda #VikatanOriginals
Swami Vivekananda #VikatanOriginals
Swami Vivekananda #VikatanOriginals

"இந்த இயற்கை வணக்கம் இந்துக்களிடம் மட்டுமே காணப்படுவதன்று. உலக மக்கள் எல்லாரிடமும் காணப்படுவது. இஸ்ரேல் மக்களின் இலோஹிம் வணக்கம், கிரேக்க மக்களின் ஏதீன் அப்போலோ வணக்கம் முதலியன எடுத்துக்காட்டாகும்" என்கிறார்.

இதைப் படிக்கையில் தற்போது, உண்மையான இந்து தர்மத்துக்கு எதிராகவே இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மோடி - அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு, அதன் ‘பிரியமான’ திட்டங்களில் ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது எனில், தோற்றுப்போனது எது? வேறு எதுவுமல்ல, நமது அரசியல் சட்டம்தான்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்தியா, பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமல்ல. எனினும், இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்னும் கருத்தை, இந்தச் சட்டத்தை யூத இனவாத அரசான இஸ்ரேலிலிருந்து பா.ஜ.க எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது என்ன சட்டம். மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் குறைகள் என்னென்ன? ஜூனியர் விகடனின் 'குடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!' கட்டுரையில் விளக்கமாகப் படிக்கலாம்.

குடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!
அடுத்த கட்டுரைக்கு