லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்!

இதமான இட்லி... பதமான பானகம்!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

ஹெல்தி பானகம்

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: எலுமிச்சைப் பழம் - ஒன்று, சுக்கு, கடுக்காய், லவங்கம், ஏலக்காய் - மிகவும் சிறிதளவு, கருப்பட்டி கரைசல் - 50 மில்லி, புதினா இலை - சிறிதளவு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, கடுக்காய், லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதனுடன் கருப்பட்டிக் கரைசல், வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும் (ஒரு ஸ்பூன் போதும்). இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குடிக்கும் முன் புதினா இலைகளைத் தூவவும்.

இந்தப் பானம் கோடைக்காலத்தில் பருகுவதற்கு மிகவும் ஏற்றது.

- பி.சுமதி, சேலம்

லெமன் தொன்னை இட்லி

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், உளுந்து - அரை கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, முந்திரிப்பருப்பு - 10, எண்ணெய், உப்பு, வாழை இலை - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். இஞ்சியை தோல் சீவி  துருவவும். அரிசி, உளுந்தை தனித்தனியே இரண்டு மணி நேரம் ஊறவைத்து... அரிசியை கொரகொரவெனவும், உளுந்தை நைஸாகவும் அரைக்கவும்.

உப்பு, எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு - சீரகப்பொடி ஆகியவற்றை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். முந்திரியை வறுத்து சேர்க்கவும். வாழை இலையில் தொன்னைகள் செய்து, உள்ளே எண்ணெய் தடவி மாவை ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

பூசணித் தொக்கு

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: பூசணிக் கீற்று - 4, பொடித்த வெல்லம் - கால் கப், காய்ந்த மிளகாய் (குண்டு மிளகாய்) - 3, பச்சை மிளகாய் - 4, புளிக்கரைசல் - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - சிறிதளவு,  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணியைத் துருவிக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் காயவைத்து உப்பு போட்டு அதில் பூசணித் துருவலை சேர்த்து கொஞ்சம் கெட்டியாக வரும் வரை வேகவிடவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், வெல்லம், புளிக்கரைசல் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் வெந்த பூசணித் துருவலை சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் இறக்கவும். ஈரம் இல்லாத ஜாடியில் சேமிக்கவும்.

- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

படங்கள்:எம்.உசேன்