தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மெனோபாஸ் பெண்களுக்கான உணவுகள்

மெனோபாஸ் பெண்களுக்கான உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மெனோபாஸ் பெண்களுக்கான உணவுகள்

உணவே மருந்துவி.எஸ்.சரவணன்

 “எனக்கு 40 வயதாகிறது. மெனோபாஸ் ஆரம்பித்தால் எலும்புகள் வலுவிழக்கக்கூடும் என்பதால், முன் எச்சரிக்கையோடு இருக்க விரும்புகிறேன். எலும்புகளை வலிமைப்படுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைவிட, சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள ஆலோசனைகள் கூறுங்களேன்...”

கே.ஹேமலேகா, மகப்பேறு மருத்துவர், சென்னை

மெனோபாஸ் பெண்களுக்கான உணவுகள்

“பொதுவாகவே 40 வயதானதும் நம்முடைய லைஃப் ஸ்டைல் மாறிவிடும். அதிகரிக்கும் எடையானது எலும்புத் தேய்மானத்தை விரைவுபடுத்தும். மெனோபாஸ் தொடங்கும் பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து தேவைப்படும். அதனால், கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சீத்தா, சப்போட்டா பழங்களை அதிகம் சாப்பிட லாம். வைட்டமின்-சி உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடலாம். சோயா, கொண்டைக்கடலை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ராகி போன்ற சிறுதானிய வகைகளை உணவுகளாக எடுத்து க்கொள்வது நல்லது. பால் சாப்பிடலாம் என்றாலும், ஒருநாளைக்கு 300 மில்லி போதும். எவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வதைவிட, எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும் கறார் தன்மை வேண்டும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், ஃபாஸ்ட் புட், ரெடிமேட் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளில் சர்க்கரைச் சத்துதான் இருக் கும். அவை பருமனையும் அதிகரிக்கும்.

 மெனோபாஸ் நேரத்தில் பெண்களுக்கான அதிமுக்கிய உணவு, சோயா. சோய் ஐசோஃப்ளேவோன்ஸ் (Soy Isoflavones) என்ற இயற்கையான பைட்டோ-ஈஸ்ட்ரோஜன் சோயாவில் அதிகம் காணப்படுகிறது. கொண்டைக்கடலை, பீன்ஸ், மஞ்சள் மற்றும் உலர்பழங்களிலும் இந்த பைட்டோ-ஈஸ்ட்ரோஜனைப் பெற முடியும். இது எலும்பு களின் வலிமையை அதிகரிப்பதுடன், இதய நோய் மற்றும் சில புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான உணவுகளைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வதைப் போலவே உடற்பயிற்சியும் அவசியம். சுறுசுறுப்பான பெண்களாக இருந்தாலும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.