நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

நிதி சார்ந்த கல்வியானது பள்ளி, கல்லூரிப் பருவத்தி லிருந்தே தொடங்கப்பட வேண்டும். அனுபவப்பூர்வமாக அதைக் கற்றுக்கொள்வது நமது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்யாமல் இருக்க நிச்சயம் உதவும். இதற்குக் குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது, அவர்களின் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இதற்கு முதல்படியாக, உங்கள் வீட்டில் 10 - 18 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கினைத் தொடங்கியிருக்கிறீர்களா என நாணயம் ட்விட்டரில் கேட்டிருந்தோம்.  

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களில், 35% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி யிருக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஆரோக்கியமான விஷயமே. இன்றைக்குப் பல பொதுத் துறை வங்கிகளும் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது, பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்னவர்களில் 37% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கஷ்டப்படாமல் இருக்க, குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது நல்லது.

இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 28% பேர், இனி தொடங்கு வேன் என்று சொல்லியிருப்பதும் ஆரோக்கியமான விஷயமே. 

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

ஆக மொத்தத்தில், பெற்றோர்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில், 18 வயதுக்கும் குறைவானவர்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்கிற பெயரை நிச்சயம் பெற முடியும்.

- ஏ.ஆர்.கே