அவள் விகடன் - வாசகிகள் பக்கம்
''நான் ஐ.டி கம்பெனியில வேலை பாத்துட்டிருந்தேன். இப்ப கன்ஸீவ்வா இருக்கறதால வேலைக்குப் போகல. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இருந்து அவள் விகடன் படிச்சிட்டிருக்கேன்.

ஆனா, படிக்கறதோட சரி... எந்தப் போட்டிலயும் பங்கெடுத்ததில்லை. என்னோட காதல் கணவர்தான், என் போட்டோவை அனுப்பினார். வாசகிகள் பக்கத்துக்காக என் படம் செலக்ட் ஆனதுல என்னைவிட, அவர்தான் ரொம்ப ஹேப்பியா இருக்காரு. சார் இப்ப ஃபுல் டைம் போன்ல பிஸி. எல்லாருக்கும் போன் போட்டு 'அவள் விகடன் வாங்கிப் பாருங்க’ன்னு சொல்லிட்டிருக்காரு...'' என்று கூறி சிரிக்கிறார்,
இங்கே இடம் பிடித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த மம்தா பரத்வாஜ்.