Published:Updated:

சாதனையா... சோதனையா? - பெரும் வீழ்ச்சிக்கான கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்!

எலான்  மஸ்க்
News
எலான் மஸ்க்

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 182 பில்லியன் டாலர் வரை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும், பல்வேறு தகவல்கள் இதனை 200 பில்லியன் டாலர்கள் எனக்கூறுகின்றன.

உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், சொத்து மதிப்பு வீழ்ச்சி காரணமாக இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார். அது மட்டுமின்றி வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 பணக்காரர் நிலையை அடைந்த பிறகும் அவரிடம் குறும்புத்தனம் மேலோங்கி இருந்தது என்பதற்கு அவரது ட்வீட்களே சாட்சி. அப்படியாக அவருக்குப் பிடித்தமான சமூக வலைதளமான ட்விட்டரை அவர் வாங்கியது பெரும் வீழ்ச்சிக்குள் அவரைத் தள்ளியிருக்கிறது.

பிட்காயின், டெஸ்லா | Bitcoin, Tesla
பிட்காயின், டெஸ்லா | Bitcoin, Tesla

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக ஒப்பந்தம் போட்டு, போலிக்கணக்குகள் இருப்பதாகக்கூறி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதிலிருந்து எதிர்மறையான செய்திகள் அவரைப்பற்றி வெளியாகின. பின்னர் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்விட்டரில் வெரிஃபைட் கணக்குக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்குக்கு பணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்ததால், பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 182 பில்லியன் டாலர் வரை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும், பல்வேறு தகவல்கள் இதனை 200 பில்லியன் டாலர்கள் எனக்கூறுகின்றன.

எவ்வளவு இழந்தார் என்று துல்லியமாக தெரியாவிட்டாலும், அவர் இழந்ததாக கூறப்படும் தொகையானது, இதுவரை யாரும் இந்தளவுக்கு இழக்க வில்லை என்பதை உறுதி செய்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயோசி ``மிகப்பெரும் வீழ்ச்சிக்கான கின்னஸ் சாதனை" என்ற இடத்தை 2000 -ம் ஆண்டில் பிடித்திருந்தார். அதற்காக அவர் இழந்தது 58.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பானது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 320 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 137 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க, 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனப் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தார். இப்படி படிப்படியாக அவர் 23 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து, இன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது சாதனை அல்ல சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எலான் மஸ்க் மிகப்பெரும் சரிவினைச் சந்தித்திருக்கிறார்.