பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

என்.டி டிவி பங்குகளைக் கைப்பற்றும் அதானி... ஊடகத் துறையில் கால்பதிக்கும் பின்னணி!

அதானி
பிரீமியம் ஸ்டோரி
News
அதானி

போட்டி

அதானி குழுமத்தின் அங்கமான ஏ.எம்.ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தற்போது ஊடகத் துறை சார்ந்த முன்னணிக் குழும மான என்.டி டிவி (ND TV) நிறுவனத்தின் 29.18% பங்கு களைக் கையகப்படுத்த உள்ளது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

மேலும் இந்த நிறுவனத்தின் 26% பங்குகளை ஓப்பன் மார்க்கெட்டில் அதானி குழுமம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு 26% பங்குகளை அதானி குழுமம் வாங்கும்பட்சத்தில், என்.டி டிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் அதானி குழுமத்திடம் சென்றுவிடும். அதிக அளவில் பங்கு வைத்திருப்பவர் என்கிற முறையில் அந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத் தும் தனிநபராக அதானி மாறுவார்.

என்.டி டிவி நிறுவனமானது என்.டி டிவி இந்தியா, என்.டி டிவி 24/7 மற்றும் என்.டி டிவி புராஃபிட் ஆகிய மூன்று முன்னணி செய்தி நிறுவனங் களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்.டி டிவி நிறுவனத்தின் இந்தப் பங்குகள் ரதி மற்றும் பிரணாய் ராய் ஆகியோரின் ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங் நிறுவனத் தின் வசம் உள்ளன. இந்த நிறுவனம் 2009-ம் ஆண்டு தனது கைவசமுள்ள என்.டி டிவி பங்குகளை விஷ்வ பிரதான் கமர்ஷியல் லிமிடெட் (VPCL) நிறுவனத் திடம் அடமானம் வைத்து, ரூ.403 கோடி கடன் பெற்று இருந்தது. இந்தக் கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்தத் தவணை காலம் 2019-ம் ஆண்டு முடிந்து விட்டது. வாங்கிய கடனை ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தால் தற்போது விஷ்வ பிரதான் கமர்சியல் லிமிடெட் நிறுவனம் அந்தப் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. அந்தப் பங்குகளை தான் அதானி குழுமம் வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதானி
அதானி

இவ்வாறு அந்த நிறுவனம் பங்குகளை விற்றது என்.டி டிவி நிறுவனத்தின் தலைவ ரான ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகிய இருவருக்கும் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளதாக என்.டி டிவி தரப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு தொழில்களில் பெரும் வெற்றி கண்ட அதானி நிறுவனம், ஊடகத் துறையில் காலடி எடுத்து வைக்காமலே இருந்தது. இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் பிரபல ஊடகமான ப்ளூம்பர்க் கொயின்ட் (Bloomberg Quint) என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கியதன் மூலம் மீடியா துறையில் வலுவான காலடியை அதானி குழுமம் பதித்தது. தற்போது என்.டி டிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்கு களைக் கையகப்படுத்தினால் ஊடகத் துறையில் முக்கிய அங்கமாக அதானி குழுமம் மாறும்.

தற்போது 32% பங்குகள் என்.டி டிவி குழுமத்தின் உரிமையாளர்களிடம் உள்ளது. அதனால் தற்போது வரை என்.டி டிவி நிறுவனத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதன் நிறுவனர்களே உள்ளனர். சிறு முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 40% பங்குகள் உள்ளன. அவர்களிடமிருந்து அதானி குழுமம் எளிதாக 26% பங்குகளைத் தற்போதைய நிலையில் வாங்க முடியும்.

அதானி குழுமம் நமது நாட்டில் பல்வேறு துறை களில் தமது வணிகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சென்ற மாதம் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைபா துறைமுகத்தை 1.2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. ஸ்விட்சர்லாந்தைத் தலைமையிட மாகக்கொண்ட ஹொல்சிம் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி நிறுவனத்தின் பங்குகளை 10.5 பில்லியன் டாலருக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது.

என்.டி டிவி பங்குகளைக் கைப்பற்றும் அதானி... ஊடகத் துறையில் கால்பதிக்கும் பின்னணி!

மேலும், மூன்று டஜனுக்கும் மேல் சிறிய நிறுவனங் களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மீடியா, ஹெல்த்கேர், சிமென்ட் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ்கள் சார்ந்த துறைகளில் தமது கிளைகளை வேகமாக அந்த நிறுவனம் பரப்பி வருகிறது. மேலும், 5ஜி சேவைகளுக்கான ஏலத்தில் பங்கேற்று நமது நாட்டின் முதன்மையான நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனதந்துக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், அந்த நிறுவனம் விரைவாக வளர்வதற்கு அதிக அளவில் கடன்களை வாங்குவதாக பிரபல கிரெடிட் ஏஜென்சியான ஃபிச் குரூப்பின் அங்கமான கிரெடிட் சைட்டின் ரிசர்ச் ரிப்போட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதானி குழுமம் வங்கிகளிடம் உள்ள தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அதிக அளவு கடன்களை வாங்குவதாகவும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியிடம் கௌதம் அதானிக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அதிக கடன்களை அந்த நிறுவனம் பெறுவதாக அந்த ரிப்போர்ட் தெரிவித் துள்ளது.

மிக அதிகமான கடன் அந்த நிறுவனத்தைக் கடன் சுமையில் தள்ளிவிடும் என்றும், அதைச் சரியாகக் கையாளவில்லை எனில், கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நிறுவனம் தள்ளப்படும் என்றும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

இந்த ரிப்போர்ட் பற்றிய செய்திகளை என்.டி டிவி தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. இந்த நிலையில்தான் அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது ஊடகங்களில் குறிப்பாக, செய்திகளை ஒளி பரப்பும் ஊடகங்களில் அரசியல் கட்சி சார்பு என்பது ஒரு நியதியாக மாறிவிட்டது. நம் நாட்டில் பெரும்பாலான செய்தி ஒளிபரப்பு செய்யும் தொலைக் காட்சி நிறுவனங்கள் கட்சி சார்பு உடையதாகவே உள்ளன. அந்த வகையில் தற்போது வரை என்.டி டிவி தொலைக்காட்சி காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் ஊடகமாக அறியப் பட்டுள்ளது.

என்.டி டிவி பங்குகளைக் கைப்பற்றும் அதானி... ஊடகத் துறையில் கால்பதிக்கும் பின்னணி!

இந்த நிலையில், அந்த ஊடகத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது பெரிய அளவில் அந்தத் தொலைக் காட்சியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த என்.டி டிவி நிறுவனத்தின் தலைவர் பிரணாய் ராய், தமது நிறுவனம் தொடர்ந்து கட்சி சார்பின்றி பொதுவான ஊடக மாகத் தமது பணிகளைத் தொடரும் என்று தெரிவித்து உள்ளார்.

என்றாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதானி குழுமம் என்.டி டிவி நிறுவனத் தின் பெரும்பாலான பங்குகளைக் கையகப்படுத்தினால் அரசியல் சதுரங்கத்தில் முக்கிய திருப்பமாகவே அது பார்க்கப்படும்.

இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த 2-ம் தேதி முதல் 22 வரையிலான 20 நாள்களில் 35 சதவிகிதத்துக்குமேல் ஏற்றம் கண்டிருக்கிறது!