Published:Updated:

பாகிஸ்தான் தடையால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பேரிழப்பு! - மத்திய அரசு

ஏர் இந்தியா
News
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கெனவே சுமார் 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்நிலையில் இந்த இழப்பு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும்...

Published:Updated:

பாகிஸ்தான் தடையால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பேரிழப்பு! - மத்திய அரசு

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கெனவே சுமார் 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்நிலையில் இந்த இழப்பு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும்...

ஏர் இந்தியா
News
ஏர் இந்தியா

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பால்கோட்டில் விமானத் தாக்குதலை, கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடத்தியது. இதனை அடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்தது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வான் பகுதியில் மொத்தம் 11 பாதைகளை இந்திய விமானங்கள் பயன்படுத்திவந்தன. தடை காரணமாக, அந்தப் பாதை வழியாக இந்திய விமானங்கள் பயணிக்க முடியாத நிலை உருவானது.

ஹர்தீப் சிங் புரி
ஹர்தீப் சிங் புரி

இதனிடையே, பாகிஸ்தான் வான் பகுதியில் 2 பாதைகளை மட்டும் பாகிஸ்தான் அரசு அண்மையில் திறந்துவிட்டிருக்கிறது. இவை இரண்டும் தெற்குப் பகுதியில் இருப்பவை என்பதால், இன்னமும் விமானத்தை இயக்குவதில் இந்திய விமானங்கள் சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல தற்காலிகமாக வேறு பாதையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. சிக்கலைச் சமாளிக்க முடியாமல், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, சில சர்வதேச விமானங்களை ரத்துசெய்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "பாகிஸ்தான் வான் பகுதிகளில் தடை நீடித்துவருவதால், பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துவருகின்றன. அதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஜூலை 2-ம் தேதி வரை 491 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

இந்தத் தடைகுறித்த முடிவை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாகவே எடுத்தது. அதனால், அதன்மீது அடுத்தகட்ட முடிவையும் அந்நாட்டு அரசாங்கம்தான் எடுக்க வேண்டும்
ஹர்தீப் சிங் புரி

இந்நிலையில், இந்த இழப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய நிறுவனங்கள், முறையே 30.73 கோடி ரூபாய், 25.1 கோடி ரூபாய், 2.1 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கின்றன. இந்தத் தடைகுறித்த முடிவை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாகவே எடுத்தது. அதனால், அதன்மீது அடுத்தகட்ட முடிவையும் அந்நாட்டு அரசாங்கம்தான் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.