Published:Updated:

வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்!

இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்
News
இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்

சொத்து வாங்குபவர்கள் அந்தச் சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்தச் சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும்.

வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்!

சொத்து வாங்குபவர்கள் அந்தச் சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்தச் சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும்.

Published:Updated:
இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்
News
இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்

தமிழ்நிலம் (https://tamilnilam.tn.gov.in) எனும் இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்களுக்கு வீட்டிலிருந்தே இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 

இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல் | முதல்வர் தொடங்கி வைத்தார்.
இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல் | முதல்வர் தொடங்கி வைத்தார்.

சொத்து வாங்குபவர்கள் அந்தச் சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்தச் சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும். சொத்து பதிவின்போதே பட்டா மாறுதலுக்கு பணமும் கட்டப்பட்டு விடுகிறது. ஆனால், பல நேரங்களில் பட்டா கிடைப்பதில்லை.

இந்த நிலையில், பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்து எந்தத் தாலுகா எல்லைக்கு உட்பட்டது, என்பதை அறிந்து, அந்தப் பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான விண்ணப் பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது அதை எளிமைப்படுத்த புதியதாக தமிழ்நிலம் எனும் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நிலம் tamilnilam.tn.gov.in/citizen இணையதளத்தில்

பெயர், செல்போன், இமெயில், பெயர் பதிவு (https://tamilnilam.tn.gov.in/citizen/register.html) செய்து உள்ளே  செல்ல வேண்டும்.

பட்டா மாறுதல்
பட்டா மாறுதல்

யார் விண்ணப்பிக்கலாம் ?

பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்.

பட்டா மாறுதல் வகைகள் யாவை?

1. உட்பிரிவுள்ள இனங்கள்
2. உட்பிரிவு அல்லாத இனங்கள்

தேவைப்படும் ஆவணங்களின் விவரம் : (இணைப்பின் அளவு 3 MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.)
1. கிரயப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6. விடுதலைப் பத்திரம்

இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு, செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.

இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எளிது. ஆனால், சாதாரண மக்கள் நெட் சென்டர்களைத்தான் நாட வேண்டி இருக்கும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

 இப்போதும் இ-சேவை மூலம் ஆன்லைனில்தான் பட்டாவுக்கு  விண்ணப்பம் செய்யப்படுகிறது. அதன் பிறகு அதிகாரிகளை `கவனித்தால்’தான் பட்டா கிடைக்கும் என்றால் அரசின் இந்த நல்ல முயற்சி வீணாகத்தான் முடியும்.

 பத்திரப் பதிவு செய்யும்போது பட்டாவுக்கு விண்ணப்பித்தால் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், இத்தனை நாள்களுக்குள் மேற்கொண்டு `எதுவும்' கேட்காமல் பட்டா கிடைக்க அரசு ஏற்பாடு செய்தால் அனைவரும் பாராட்டுவார்கள். தமிழக அரசு செய்யுமா?