நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

‘‘பிசினஸ்மேன்களை விடுத்து சினிமா, அரசியல்வாதிகளைக் கொண்டாடுகிறோம்..!’’

புத்தக அறிமுகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக அறிமுகம்...

புத்தக அறிமுகம்

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், கோவையின் பிரபல தொழிலதிபர் ஏ.வி.வரதராஜன் எழுதிய `கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா, இல்லையா’ என்கிற புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தொழிலதிபர் ‘இயகோகா’ சுப்ரமணியம், ``ஏ.வி.வரதராஜன் சிறந்த தொழில்முனைவோர்; இவர் 1987-ல் தொடங்கி பல தொழில்முனைவோர்களுக்கு முன்னோடி யாக இருந்து வருகிறார். தொழில்துறையில் வளர்ச்சி கண்டு வரும் நம்மிடம் வேலையில்லை என்பதற்கு இடமில்லை. ஏனென்றால், இந்தியர் களுக்கு தொழில்களில் அதிக நாட்டமும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தொழிலில் வளர்ச்சி பெறக்கூடிய நல்ல மூளையும் உள்ளது. வேலை இல்லை என்று நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம். வேலை என்பதை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

‘‘பிசினஸ்மேன்களை விடுத்து சினிமா, அரசியல்வாதிகளைக் கொண்டாடுகிறோம்..!’’

தொழில்முனைவோர்கள்தான் நாட்டின் உண்மையான தலைவர்கள் என்பதை மறந்து விட்டு அரசியல்வாதிகளையும், சினிமா துறையில் உள்ளவர்களையும் தலைவர்களாக நாம் போற்றி வருகிறோம். தொழில் செய்வது பாவம் போல் பேசப்படும் உலகில் அதை சேவையாகச் செய்துவரும் தொழிலதிபர்கள் பலர். பிசினஸ்மேன்கள் தொழில் செய்வது பற்றி மட்டும்தான் நினைக்கிறார்கள். தொழில் செய்ய வேண்டிய நேரத்தைவிட வரி தொடர் பான விஷயங்களைப் பார்க்க அதிக நேரம் செலவிடுகிறோம்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து புத்தக ஆசிரியர் ஏ.வி.வரதராஜன், ``நம் நாட்டில் தொழில் வளர்ச்சி பின்தங்கும் நிலை உருவாகி இருக் கிறது. சிறுதொழிலைவிட குறுந்தொழில்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்தியாவில் நிறைய பணம் உள்ளது. ஆனால், அந்தப் பணத்தைத் தொழில் வளர்ச்சிக்கு ஈடுபடுத்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை’’ என்றார்.

சிறுதொழில் நிறுவனங்களைச் சார்ந்த பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.