Published:Updated:

சென்னையில் காவலாளியை கட்டிப்போட்டு ஏ.டி.எம் எந்திரம் உடைப்பு: ரூ.25 லட்சம் தப்பியது

சென்னையில் காவலாளியை கட்டிப்போட்டு ஏ.டி.எம் எந்திரம் உடைப்பு: ரூ.25 லட்சம் தப்பியது
சென்னையில் காவலாளியை கட்டிப்போட்டு ஏ.டி.எம் எந்திரம் உடைப்பு: ரூ.25 லட்சம் தப்பியது

சென்னை: சென்னையில் காவலாளியை கட்டிப்போட்டு எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை  உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏ.டி.எம்.மில் இருந்த 25 லட்ச ரூபாய்  தப்பியது.

சென்னை ஆவடி - அயப்பாக்கம் சாலையில் தனியார் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் கோபால் என்பவர் 2 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு பணம் எடுப்பதுபோல் கொள்ளையர்கள் ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளனர். நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த காவலாளி கோபால் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

##~~##
அப்போது, காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் அறையை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் சென்று விட்டனர்.
இன்று காலை மற்றொரு காவலாளி சுப்பிரமணி ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளார். அப்போது, காவலாளி கோபாலை கட்டிப்போட்டிருப்பதை பார்த்து சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவலாளி சுப்பிரமணி, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த அதிகாரிகள் ஏ.டி.எம் எந்திரத்தை சோதனை செய்தனர். அப்போது, ஏ.டி.எம்.மில் இருந்த 25 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்படாமல் இருந்ததால் தப்பியது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் ஆவடி காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஏ.டி.எம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.