Published:Updated:

எஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

எஸ்ஸார்  ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

சுமதி மோகனப் பிரபு

எஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

சுமதி மோகனப் பிரபு

Published:Updated:
எஸ்ஸார்  ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

டந்த சில காலமாகவே பொதுத்துறை வங்கிகளின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து வெளிவந்த, தனியார் வங்கி தலைவர்களின் மீதான பெரும் மோசடி குற்றச்சாட்டுகள், ஊழலில் தனியார், பொதுத்துறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு வங்கியில் கடன் பெறும் நிறுவனம், பல்வேறு காரணங்களால் சரிவரச் செயல்பட இயலாமல் போகும்போது, வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும், பல லட்சக்கணக்கான கோடி வாராக் கடன் சுமைக்கு முக்கியக் காரணங்களாக, பொருளாதார மந்த நிலை, கடன் வழங்குவதில் அரசியல் தலையீடு அல்லது ஊழல், கடன் முன்மொழிவுகள் வங்கியினால் முறையாக ஆய்வு செய்யப்படாதது மற்றும் நீரவ் மோடி, முகுல் சோக்சி, மல்லையா போன்றவர்களின் கடன் மோசடிகள் போன்றவைதான் என்று இதுவரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ சாந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் தொடர்பான சர்ச்சைகள் குறித்து ஊடகங்களில் வெளிவரும் புதிய தகவல்கள், வாராக் கடன் முறைகேடுகள் பற்றிய புதிய கோணத்தினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

எஸ்ஸார்  ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

இது ஒருபுறமிருக்க, எஸ்ஸார் நிறுவனத்தின் கடன் திவால் நடைமுறை, வாராக் கடன் வசூலிப்பு முறைமீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திவால் சட்ட விதிமுறைகளின் நோக்கத்தை, ஆளும் தரப்பில் தொடர்ந்து நியாயப்படுத்தி வந்தாலும், வாராக் கடன் வேண்டுமென்றே உருவாக்கப் படுகிறதோ என்பதுபோன்ற தோற்றம், தள்ளுபடி மற்றும் வசூல் ஆகிய நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை போன்றவை சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் உள்ள நேர்மைத்தன்மை குறித்த வலுவான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

பொதுவாக, ஒரு நிறுவனம் பெற்ற கடனை முறையாகத் திரும்பச் செலுத்தாதபோது, கடனுக்குப் பிணையாக வழங்கப் பட்ட சொத்துகள் வங்கிக்குச் சட்டப்படி சொந்தமாகின்றன. அந்தச் சொத்துகள் வெளிப்படை யாக ஏலம் விடப்பட்டு, ஏலத் தொகை வங்கிக் கடனில் சரிக் கட்டப்படும். திவால் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சில புரமோட்டர்கள் ஏலத்தில் வரும் சொத்துகளை அடிமாட்டு விலையில் வாங்கிக்கொள்வதுடன், கடனில் இருந்தும் முற்றிலுமாக விடுபடுகிறார்கள். இதனால், நஷ்டப்படுவது வங்கிகளும் வரி செலுத்தும் மக்களும்தான்.

இந்த மோசடியைத் தடுக்க மத்திய அரசு, நிறுவனத்தின் முதன்மை பங்கு முதலீட்டாளர்கள் ஏலத்தில் பங்கு பெறக்கூடாது என்று திவால் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தாலும், பெரு முதலாளிகள் பல்வேறு வகைகளில் மோசடி செய்ய முயற்சி செய்கிறார்கள்.  சமீபத்திய உதாரணம், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் பெற்றிருந்த சுமார் ரூ.43,000 கோடி கடன் தொகை யானது, கடந்த ஆண்டு வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்டது. கடன் பிணையாக உள்ள எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின்  சொத்துகளை ஏலம்விட, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில், முடிவு எடுக்கப் பட்டது. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன சொத்துகளின் குறைந்தபட்ச ஏலத்தொகை சுமார் ரூ.20,000 கோடியாக நிர்ணயிக்கப்படலாம்.

முழுக் கடன் தொகையை முறையாகத் திருப்பி செலுத்தாம லேயே, தமது சொத்துகளை மீட்டெடுக்க, எஸ்ஸார் ஸ்டீல் முதலாளிகள் மறைமுகமாக முயற்சி செய்தனர். எஸ்ஸார் நிறுவன புரமோட்டர்கள் ஆசியுடன் நியூமெட்டல் மொரிசி யஸ் என்ற பெயரில், ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத் தின் பெருவாரியான முதலீடு ரஷ்யாவைச் சார்ந்த இரண்டு வங்கிகளால் செய்யப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எஸ்ஸார் நிறுவனத்தின் முதன்மை புரமோட் டர்களில் ஒருவரான ரவி ரூயியா வின் மகன் ரேவந்த் ரூயியா ஒரு மைனாரிட்டி முதலீட்டா ளராகச் சேர்த்துக் கொள்ளப்பட் டுள்ளார். இந்த நிறுவனத்திற்கான எஸ்ஸார் முதலீடு, சிங்கப்பூரில் அமைக்கப் பட்ட அறக்கட்டளை ஒன்றின் மூலமாகச் செய்யப் பட்டது.

இதே குழுமத்தைச் சார்ந்த எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் சொத்துகள் சுமார் ரூ. 83,000 கோடி ரூபாய்  விலைக்கு சமீபத்தில் ரஷ்ய நிதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனைக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு, கையெழுத்தானது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அந்நிய முதலீடு இது என்று இந்தியப் பிரதமரால் வர்ணிக்கப் பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, எஸ்ஸார் ஸ்டீல் கடன் அடைக்கப்படும் என்ற இந்திய வங்கிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, எந்தவொரு தொகையும் வங்கிகளுக்குச் செலுத்தப்படவில்லை. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், எஸ்ஸார் நிறுவனத்தின் புரமோட்டர்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவல்களும் வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்ஸார்  ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

வெளிப்படையற்ற எஸ்ஸார் ஆயில் விற்பனையைத் தொடர்ந்து நியூமெட்டல் நிறுவனம், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன ஏல விற்பனையில் பங்கு பெற முயன்றபோது, வாராக் கடன் பெற்ற நிறுவனத்தின் புரமோட்டர்கள் அந்த நிறுவனத்தின் சொத்துகளின் விற்பனை ஏலத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு பெறக்கூடாது என்ற சட்ட விதிமுறையின் அடிப்படையில் நியூமெட்டல் நிறுவனத்தின் ஏல விண்ணப்பம் மார்ச் 2018 -ல் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், எஸ்ஸார் குடும்ப உறுப்பினர்கள் மைனாரிட்டி முதலீட்டாளராக மட்டுமே இருப்பதால், நியூ மெட்டல் நிறுவனத்தை ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனத் தற்போது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் அஹமதாபாத் பெஞ்சில் வாத-பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வேடிக்கையான, அதே சமயம் வேதனையான விஷயம் என்னவென்றால், எஸ்ஸார் குடும்பத்தின் முக்கியப் போட்டியாளரான ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் மீதும் இதேபோன்று வாராக்கடன் பின்னணி (கே.எஸ்.எஸ் பெட்ரோன்) உள்ளது. இரண்டு தரப்பினரும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவது, வாராக்கடன் வசூல் நடைமுறைகளைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

கடன் பெற்ற நிறுவனத்தின் புரமோட்டர்கள் நேரடியாக ஏலத்தில் பங்கு பெற முடியாது என்ற சட்டவிதி திருத்தத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே, மைனாரிட்டி முதலீட்டாளர் என்ற போர்வையில், இவர்களைப் போன்ற கம்பெனி புரமொட்டர்கள், சட்டத்தையும் வங்கிகளையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் ஏமாற்ற முனைவது மேற்சொன்ன உதாரணங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்ற பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் வெளிப்படையாக நடைபெற்று வருவது, வெகுஜன கவனத்தை ஏற்காமல் இருப்பது கவலைக்குரியது.

ஒரு நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் போதுமான பணவசதி இருக்கும்போது, அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ கூடாது என்பது எந்தவொரு வாராக் கடன் வசூல் சட்டத்திற்கும் அடிப்படையாக இருக்கவேண்டிய நிலையில், சில புரமோட்டர்களின் தனிப்பட்ட விருப்பத்தின்படி, வங்கிகளும் சட்டமும் வளைந்து கொடுகின்றனவோ என்பது போன்ற சமீபத்திய தோற்றம், இந்தியாவில் குரோணி கேபிடலிசம் எனப்படும் குள்ளநரி முதலாளித்துவம் தலை விரித்தாடுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.

எந்தவொரு நாட்டிலும், குள்ள நரி முதலாளித்துவம், நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைத்து, சுரண்டல் பொருளாதாரத்திற்கு இட்டு சென்றுவிடும் என்பதாலும், தற்போதைய வங்கி ஊழல்களுக்கான ஊற்றுக்கண் இந்த குள்ளநரி முதலாளித்துவமாகவே தென்படுவதாலும், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

எஸ்ஸார்  ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

மரபுசாரா எரிசக்தியில் ஆப்பிள் நிறுவனம்!

ப்பிள் நிறுவனம், கலிஃபோர்னியாவிலுள்ள தலைமையகத்திலும், அதன் கிளைகளிலும் 100 சதவிகிதம் மரபுசாரா எரிசக்தியில் இயங்கி வருவதாகத் தெரிவித்து உள்ளது. சிறப்பான ஓர் உலகத்தை எதிர்காலச் சந்ததிக்குக் கொடுக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்தத் திட்டத்தைச் சாத்தியப் படுத்தி இருக்கிறோம் என ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். நாங்களும் எங்கள் பங்குதாரர்களும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism