நீங்கள் ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், அந்த அலுவலகத்தின் சம்பளக் கணக்கு நிர்வகிக்கப்படும் வங்கியில் உங்களுக்கும் ஒரு வங்கிக் கணக்கு திறப்பார்கள். அப்போது உங்களால் நிரப்பப்படும் வங்கிக் கணக்குப் படிவத்தில், ப்ரீஅப்ரூவ்டு கிரெடிட் கார்டுக்கும் கையெழுத்து பெறப்படும். அதேபோல, நீங்கள் ஏதேனும் வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் பெற்றிருந்தால், நீங்கள் வங்கிக் கடனை அடைக்கும் தன்மையைப் பொறுத்து ப்ரீ கிரெடிட் கார்டு சலுகை உங்களுக்கு வழங்கப்படும்.

இப்படியாக, ஒரு வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வருமானம், பணியாற்றும் நிறுவனம் போன்ற பல்வேறு காரணிகளைக் கணக்கில்கொண்டு தாமாகவே முன்வந்து வழங்கும் கிரெடிட் கார்டுகளே `ப்ரீஅப்ரூவ்டு கிரெடிட் கார்டு’களாகும். இதை, வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம்; வேண்டாமென்றால் மறுக்கவும் செய்யலாம். ஒரு வங்கி, தனது வாடிக்கையாளருக்குத் தரும் கூடுதல் அங்கீகாரமாகவும் இதைக் கருதலாம்.

நீங்களாக ஒரு வங்கியில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தால், உங்களுடைய பணி, வருமானம், கிரெடிட் ஸ்கோர், வயது உள்ளிட்ட பல்வேறு காரணிகளைத் தீர ஆராய்ந்து, திருப்தியாக இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள். அதுவும்கூட கிரெடிட் கார்டின் கிரெடிட் மதிப்பு குறைவாக இருக்கும்.

கிரெடிட் கார்டுக்கு நாமாக விண்ணப்பிக்கும் போது, நமது கிரெடிட் ஸ்கோர் (வாங்கிய கடன்களைச் சரியாகத் திரும்பத் தந்திருக்கிறாரா என்பதைச் சொல்லும் அளவு) தோராயமாக 700-ஆக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆனால், ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டு, கிரெடிட் ஸ்கோர் சற்றுக் குறைவாக (தோராயமாக 600) இருந்தாலும் தரப்படும். அதேபோல், ஒருவர் பணியாற்றும் நிறுவனம் அரசு நிறுவனமா, கார்ப்பரேட் நிறுவனமா, சிறுதொழில் நிறுவனமா என்பதைப் பொறுத்து ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டு மதிப்பு நிர்ணயிக்கப் படும். கிரெடிட் கார்டிலுள்ள பர்ச்சேஸ் லிமிட், கேஷ் லிமிட் போன்றவற்றையும் ஒருவரது வருமானம், நிறுவனம், பதவி போன்றவை தீர்மானிக்கின்றன. ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகளில் கேஷ் லிமிட் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகளில் ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் இல்லாமல் இருக்கும். அப்படியிருந்தால், பயன்பாட்டாளர்களுக்கு லாபமே. கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை, ஒருவரின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதே அதிலுள்ள சூட்சுமம். அதன் அடிப்படையில், ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டுகள் அதிகம் கிடைக்கும்படி இருக்கும். குறிப்பாக, ஆண்டுக் கட்டணத்தில் சலுகை, பணப் பரிமாற்றத்துக்கான கட்டணச் சலுகை போன்று பல சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகளை வாங்கி விட்டால், நிறைய சலுகைகள் குறித்த மெயில்களும் குறுஞ்செய்திகளும் அடிக்கடி வரும். அவை அனைத்தும் மீனுக்குப் போடும் தூண்டிலாக இருப்பதால், கவனத்தோடு செயல்படாவிட்டால் கடன் தொல்லையில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது குறித்து நிதி ஆலோசகர் த.முத்துகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``கிரெடிட் கார்டுகளைப் பொறுத்த வரை, ஒரு நபருக்கு ஒரு கிரெடிட் கார்டே போதுமானது. ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன என்பதற்காக, ஒன்றுக்குமேல் வாங்கி அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்குவதும், செலவு செய்வதுமாக இருந்தால், இறுதியில் பணச்சிக்கலில்தான் முடியும். பணத்தைக் கவனமாகச் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே இதைப் பக்குவமாகப் பயன்படுத்தத் தெரியும். எனவே, கிரெடிட் கார்டே இல்லாத வர்கள் மட்டும் ஒரு ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டு வாங்கினால் போதுமானது.

கிரெடிட் கார்டில், வெறுமனே குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்திவிட்டு, மிச்சத்தைச் சுழற்சி முறையில் அடுத்த மாதத்தில் கட்டிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டால், வட்டிக்காக அதிகத் தொகையை இழக்க நேரிடும். அதேபோல, கிரெடிட் கார்டுகளைப் பொருள்களை வாங்கு வதற்குப் பயன்படுத்தினால், அதன்மூலம் ரிவார்டு பாயின்ட்டுகள் கிடைக்கும். அந்த பாயின்டுகள், அடுத்த முறை ஏதேனும் பொருள் வாங்கினால் விலைச்சலுகை கிடைக்க உதவக்கூடும். ஆக, ப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது, கத்தியைப் பயன்படுத்துவது மாதிரிதான். கத்தியைக் காய்கறி நறுக்க மட்டும் பயன்படுத்தினால் நல்லது” என்றார்.

திட்டமிட்டு முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் இந்த ப்ரீ அப்ரூவ்டு கார்டினை ஏற்றுக்கொள்ளலாம்.

- தெ.சு.கவுதமன்