Published:Updated:

வங்கியாக மாறும் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம்

வங்கியாக மாறும் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம்
வங்கியாக மாறும் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம்

மதுரை: மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகமாக செயல்பட்ட கட்டடத்தை வங்கி ஒன்றிற்கு வாடகைக்கு விட முடிவெடுத்திருக்கிறது மதுரை மாநகராட்சி.

வங்கியாக மாறும் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம்

கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரை மேல மாரட் வீதியில், மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது, அதன் கீழ் தளம் மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாறியதும் அழகிரிக்கு டார்ச்சர் கொடுக்க நினைத்த அ.தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம்,. அந்த அலுவலகத்தை அழகிரி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறார் என்று கூறி, அந்த அலுவலகத்தை காலி பண்ண வைத்தது.

##~~##
அந்த கட்டடத்தில், பொதுமக்களின் நலன் கருதி சர்க்கரை நோய்க்கான 'டயாலிசிஸ்' மையம் அமைக்கப்போவதாக சொன்னது மாநகராட்சி. இதற்காக கடந்த 2012 ஏப்ரல் 25 ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி, அலுவலகத்தை கைப்பற்றினார்கள்.
ஆனால், ஓராண்டாகியும் இதுவரையில் அவர்கள் சொன்னபடி அங்கே டயாலிசிஸ் மையம் அமைக்கவில்லை. ஆக, ஓராண்டாக அந்த கட்டிடம் பயன்பாடின்றி சும்மா கிடக்கிறது. சொன்னபடி டயாலிசிஸ் மையம் அமைக்க முடியாததற்குக் காரணங்களை அடுக்கியுள்ள மாநகராட்சி நிர்வாகம், இப்போது, அந்தக் கட்டடத்தை வங்கி ஒன்றிற்கு வாடகைக்கு விடும் முடிவுக்கு வந்திருக்கிறது.
 
அழகிரியின் அலுவலகத்தை மாநகராட்சி கைப்பற்றிய போது, 'இது பழிவாங்கும் நடவடிக்கை" என்று சொன்ன தி.மு.க வினர்,  ''நாங்க சொன்னது உண்மையா போச்சுல்ல" என்று இப்போது ஆதங்கப்படுகிறார்கள்.
கே.கே.மகேஷ்

படம்:
பா.காளிமுத்து