Published:Updated:

வங்கிகள் வெள்ளிக்கிழமை செயல்படும்: புதன், வியாழன் மட்டுமே விடுமுறை!

Vikatan Correspondent
வங்கிகள் வெள்ளிக்கிழமை செயல்படும்: புதன், வியாழன் மட்டுமே விடுமுறை!
வங்கிகள் வெள்ளிக்கிழமை செயல்படும்: புதன், வியாழன் மட்டுமே விடுமுறை!
வங்கிகள் வெள்ளிக்கிழமை செயல்படும்: புதன், வியாழன் மட்டுமே விடுமுறை!

சென்னை: வங்கிகள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை. 21-ம் தேதி ஆயுத பூஜை, 22-ம் தேதி விஜயதசமி, 23-ம் தேதி மொஹரம், 24-ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இந்த தொடர் விடுமுறை காரணமாக நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சரஸ்வதி  பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.-21), வியாழக்கிழமை (அக்.-22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையில் இருந்து (அக்.-23) சனிக்கிழமைக்கு (அக்.-24) மாற்றி தமிழக அரசு கடந்த திங்கட்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக்.-23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

இதேபோல், வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.-23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் சனிக்கிழமை (அக்.-24) 4-வது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாளாகும்.