Published:Updated:

ஏடிஎம் மூலம் வங்கி கடன் உள்பட பல்வேறு சேவைகள் விரைவில் அறிமுகம்!

Vikatan Correspondent
ஏடிஎம் மூலம் வங்கி கடன் உள்பட பல்வேறு சேவைகள் விரைவில் அறிமுகம்!
ஏடிஎம் மூலம் வங்கி கடன் உள்பட பல்வேறு சேவைகள் விரைவில் அறிமுகம்!
ஏடிஎம் மூலம் வங்கி கடன் உள்பட பல்வேறு சேவைகள் விரைவில் அறிமுகம்!

மும்பை: ஏ.டி.எம். மூலம் வங்கி கடனுக்கு விண்ணப்பித்தல் மற்றும் கடன் தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1.9 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பணம் எடுப்பது, பணம் செலுத்துவது, ரகசிய எண் மாற்றுவது, செக்புக்குக்கு விண்ணப்பித்தல், பண பரிமாற்றம் செய்வது, ரயில்வே டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட சேவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (14-ம் தேதி) நடைபெற்றது. இதில், தனியார் வங்கிகள் ஏற்கனவே அளித்த கோரிக்கையான, ஏ.டி.எம். மையங்களை வங்கி கிளைகளாக செயல்பட வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கி, ஏ.டி.எம். மையங்கள் மூலம் பல்வேறு சேவைகளை விரைவில் வழங்க இருக்கிறது.

அதன் மூலம், வங்கி கடனுக்கு விண்ணப்பித்தல், கடன் தொகை பெறுதல், கிரெடிட் கார்டுகள்ல், இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு விண்ணப்பித்து, ஏ.டி.எம். மையங்கள் மூலமாகவே பெற முடியும். இருப்பினும், பண பரிவர்த்தனை இந்த மையங்கள் மூலம் செய்ய முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த சேவை மூலம் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்து நிற்கும் அவஸ்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விடுதலை கிடைக்கும்.