Published:Updated:

சில நிமிடங்களில் கடன்கொடுக்கும் `டிஜிட்டல் லெண்டிங்' - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன? - 45

வங்கியின் தலைமை அலுவலகம், கிளை அலுவலகம் என்றெல்லாம் அலையாமல், இருந்த இடத்திலிருந்தே செயலிகள் மூலம் கடன் பெறுவதுதான் இந்த டிஜிட்டல் லெண்டிங். கடன் தரும் வலைதளங்களில் விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை அப்லோட் செய்தால் போதும்.

கொரோனாவின் கோர தாண்டவத்தால், வேலை இழந்தவர்களும், சம்பளக் குறைப்பை சந்தித்தவர்களும் கடனுக்கு ஏங்கிய பொழுது அவர்கள் நாடியது 2014-ல் அறிமுகமான டிஜிட்டல் லெண்டிங் சேவைகளை. முகமற்ற சாதாரண மனிதனுக்குத் தேவைப்படும் சிறிய / பெரிய கடன்களைத் தர வங்கிகளும், என்.பி.எஃப்.சி-களும் தயங்கிய நிலையில் டிஜிட்டல் லெண்டிங் வேகமெடுத்தது.

டிஜிட்டல் லெண்டிங் (Digital Lending)

வங்கியின் தலைமை அலுவலகம், கிளை அலுவலகம் என்றெல்லாம் அலையாமல், இருந்த இடத்திலிருந்தே செயலிகள் மூலம் கடன் பெறுவதுதான் இந்த டிஜிட்டல் லெண்டிங். கடன் தரும் வலைதளங்களில் விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை அப்லோட் செய்தால் போதும்.

Loan (Representational Image)
Loan (Representational Image)
எந்தெந்த கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 44

விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் தடுமாற்றம், பரிசீலனை செய்வதில் குழப்பம், ஒப்புதல் தருவதில் தாமதம் என்று எந்தப் பிரச்னையும் கிடையாது. பரிசீலனையும் ஒப்புதலும் ஆட்டோமேட் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பாலான விண்ணப்பங்கள் எந்த வித தடை, தாமதமும் இன்றி செயலாக்கப்படுகின்றன. இதற்காகப் பல்வேறு தனியார் சேவைகள் இயங்கி வருகின்றன.

இவை தவிர டிஜிட்டல் லெண்டிங்கின் புதிய வடிவங்களான பி2பி லெண்டிங்கும், க்ரௌடு ஃபண்டிங்கும்கூட கடன் பெறுவதற்குப் புதிய வழிகளைத் திறந்திருக்கின்றன. இதில் கடன் தருவோர், பெறுவோர் என்ற இரண்டு தரப்புமே பொருளாதார ரீதியாக நன்மை அடைகின்றனர்.

பி2பி லெண்டிங் (P2P Lending)

இது, ஒரு தனி நபர் இன்னொரு தனி நபருக்கு வலைதளங்கள் மூலம் கடன் தரும் முறை. கடன் தருவோரும், கடன் வேண்டுவோரும் வலைதளம் வழியாக விவரங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஃபேர்சென்ட், லெண்ட்பாக்ஸ், அப்ஸ்டார்ட் போன்ற வலைதளங்கள் இதற்குத் தளம் அமைத்துத் தருகின்றன. இந்தத் தளங்களுக்கு ஒரு சிறு தொகை கமிஷனாகத் தர வேண்டும். பெரும்பாலும் இந்தக் கமிஷன் கடன் வேண்டுவோரிடம் இருந்தே பெறப்படுகிறது.

Loan (Representational Image)
Loan (Representational Image)
இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43

கடன் வேண்டுபவர் தன் கிரெடிட் ஹிஸ்டரியை இங்கு பகிர வேண்டும். அதன் அடிப்படையில் வலைதளங்கள் அவருக்கு ஒரு கிரெடிட் ஸ்கோர் கொடுக்கின்றன. இதன் மூலம் அவரின் நம்பகத்தன்மையைக் கடன் தருவோர் உறுதி செய்துகொள்ள முடியும். அதன் பின் கடன் வேண்டுபவர் தனக்கு வேண்டிய தொகை, அதற்கு அவர் தர விழையும் வட்டி விகிதம், கடனைத் திருப்பி அளிக்கும் கால அளவு போன்றவற்றைத் தளத்தில் தெரிவித்தால் அவருக்குக் கடன் தர விரும்புபவர்கள் அவரைத் தொடர்பு கொண்டு கடன் தருவர்.

இங்கு ஒருவர் இன்னொருவருக்குக் கடன் தரலாம்; அல்லது ஒருவரே பலருக்குக் கடன் தரலாம். இங்கு கிடைக்கும் வட்டி விகிதமான 14%, வங்கி வட்டி விகிதத்தைவிட மிக அதிகம் என்பதால் இத்தளங்களில் கடன் தர பலர் தயாராக இருக்கிறார்கள். அதே சமயம், பர்சனல் லோன், கிரெடிட் கார்ட் போன்றவற்றின் வட்டி விகிதத்தைவிட இங்கு வட்டி குறைவு என்பது கடன் வேண்டுவோருக்கும் வசதியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரௌடு ஃபண்டிங் (Crowd Funding)

இது நிறைய முதலீட்டாளர்கள் வலைதளங்கள் மூலம் கூட்டு சேர்ந்து ஒரு பிசினஸ் அல்லது தனி நபருக்குக் கடன் தரும் முறை. கிக்ஸ்டார்டர் போன்ற கிரௌடு ஃபண்டிங் தளங்கள் சினிமா எடுப்பதற்கு, ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆரம்பிக்க என்று பல விஷயங்களுக்குக் கடன் ஏற்பாடு செய்கின்றன.

Loan (Representational Image)
Loan (Representational Image)
கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42

டிஜிட்டல் லெண்டிங்கில் இறங்கலாமா?

``ஆஹா, வங்கிகளில் கடனுக்காகக் கால் கடுக்கக் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை; இருந்த இடத்தில் இருந்தே பணம் புரட்டலாம்” என்று மகிழ்ந்து விட வேண்டாம். மோசடி நபர்கள் மற்றும் கம்பெனிகள் இங்கு அதிகம். மேலும் வங்கிகள் தரும் குறைந்த வட்டி விகிதம் இங்கு மிஸ்ஸிங் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

அதே போல் இங்கு கடன் தர விரும்புவோரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், அடமானமாக எதுவும் இங்கு தரப்படுவதில்லை என்பதால், உங்கள் பணத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஒருவர் கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்ற முனைந்தால், அந்த வலைதளம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர, கடன் தந்தவர் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஆகவே டிஜிட்டல் லெண்டிங் மூலம் பயன்பெற விரும்பும் முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது.

- இனி அடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு