வாதூலன்

வங்கி லாக்கர்களைப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. லாக்கரைப் பயன்படுத்தும் போது முக்கியமான சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

டெபாசிட் பெறுவது, கடன் வழங்குவது, பற்று மற்றும் கடன் அட்டைகள் அளிப்பது போன்ற வங்கியுடன் தொடர்புடைய சேவைகளில் லாக்கர் எனப்படும் பாதுகாப்புப் பெட்டகம் வராது. குடித்தனக்காரர் - வீட்டு உரிமையாளர் போன்ற உறவுதான் இருவருக்கும் இருக்கும். வங்கிகள் - லாக்கர் வாடகை எடுத்தவர் லாக்கர் சாவி தருவதற்கு முன்பு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்; ‘எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வங்கி பொறுப்பல்ல’ என்ற ஓர் நிபந்தனை அதில் இருக்கும்.

சில சமயம் வங்கிக் கிளை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால், லாக்கர்களும் சேர்ந்து போகும். இடைவழியில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கும், வங்கியிலுள்ள பணத்துக்கும் மட்டுமே காப்பீடு உண்டு. பெட்டகத்துள் இருக்கும் பொருள்களுக்கு காப்பீடு கிடையாது. ஏனெனில், லாக்கரில் என்ன பொருள் வைக்கப்பட்டிருக்கிறது என்பது வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரியும்.

வாடிக்கையாளர்களும், தங்கள் பங்குக்கு லாக்கருக்குள் பொருள் வைக்கும்போதும், எடுக்கும் போதும் இரட்டிப்பு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் அவசரமாகக் கிளம்பும்போது ஏதாவது சின்ன மோதிரத்தை கவனக்குறைவாகத் தவறவிடும் வாய்ப்பு உண்டு.

லாக்கரைப் பூட்டிவிட்ட பிறகு, உங்களிடமுள்ள ஒற்றைச் சாவியால் திறக்க முயன்று பாருங்கள். திறக்கவில்லை எனில், மிகச் சரியாகப் பூட்டியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் மூன்றாம் நபருக்குப் பெட்டகத்தைத் திறக்க, மூட அங்கீகாரம் தந்திருந்தீர்கள் என்றால், கூடுதல் எச்சரிக்கை தேவை. அவர் நம்பகமானவரா என உறுதி செய்துகொள்ளுங்கள்.

வங்கி லாக்கர் ஒன்று மூன்றாண்டு தொடர்ந்து திறக்கப்படவில்லை என்றால், அதை வங்கி சார்பில் உடைப்பதற்கு வாய்ப்புண்டு. லாக்கரை உடைத்து, வேறு லாக்கரைப் பொருத்த ரூ.15,000 ஆகலாம். மேலும், அதற்கு இரண்டு சாட்சிகள் தேவை. அவர்கள் உள்ளூர் பிரமுகர்களாக இருக்க வேண்டும்.

லாக்கரை உடைக்கும் முன் வங்கி, வாடிக்கை யாளருக்குப் பதிவு அல்லது விரைவுத் தபாலில், ‘உங்கள் லாக்கர் ரத்து செய்யப்பட்டு, வேறு ஒருவருக்கு தரப்பட இருக்கிறது’ எனத் தகவல் அனுப்ப வேண்டும். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமும் தகவல் அனுப்ப வேண்டும். லாக்கர் எப்போது உடைக்கப்படும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். வருமான வரி, சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் அவர்கள் முன்னிலையில் வாடிக்கையாளர் பார்வையிலேயே பெட்டகத்தைத் திறக்கலாம். வாடிக்கையாளர் ஒத்துழைக்காதபட்சத்தில், அரசு அதிகாரிகளே உடைப்பார்கள்.

லாக்கர் வைத்திருப்பவர்கள் இந்த விவரங்களை யெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் டிஜிட்டல் லாக்கர்..!

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

காகிதமில்லாத ஆவணங்கள் என்ற கருத்தை இலக்காகக் கொண்டு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் உள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச் சகத்தின் ஒரு முயற்சி டிஜிட்டல் லாக்கர். டிஜிட்டல் லாக்கர் அமைப்பு, ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு தளமாகும். இது காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்த ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் டிஜிலாக்கர் கணக்கைத் தொடங்கவும்.

டிஜிலாக்கர் கணக்கில் பதிவுபெறும் இந்தியக் குடிமக்கள், பிரத்யேக கிளவுட் ஸ்டோரேஜ் முலம் ஒவ்வொருவரும் அதிக பட்சமாக 1 GB அளவுக்கு ஆவணங்களைப் பாதுகாக்க முடியும். டிஜிட்டல் லாக்கரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் மின்னணு நகல்களை நேரடியாக பாதுகாப்பாக வைக்கலாம். (எ.கா. ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள்). மக்கள் தங்கள் சொந்த ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் தங்கள் கணக்குகளில் பதிவேற்றலாம். உதாரணமாக, சொத்துப் பத்திரங்கள்.இதனால் காகிதத் பயன்பாடு குறைத்து அரசாங்கத் துறைகளின் நிர்வாகச் செயல்பாடு சிறப்பாகத் தாமதமின்றி கிடைக்க வழி செய்கிறது.

டிஜிட்டல் லாக்கர் மூலம் பதிவுசெய்த நிறுவனங்களால் நேரடியாக வழங்கப்படும் ஆவணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க எளிதாக்குகிறது. சுயமாகப் பதிவேற்றிய ஆவணங்களை இ-சைன் (eSign) வசதியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையொப்பமிடலாம். இது செல்ஃப் அட்டஸ்ட் (self attested) செயல்முறைக்கு ஒப்பானதாகும்.

டிஜிலாக்கர் வழியாக, டிஜிட்டல் காப்பீடு வழங்க அனைத்துக் காப்பீடு நிறுவனங்களுக்கும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆவணங்கள் மக்களுக்கு உண்மை யான நிறுவனங்கள் மூலம் உண்மையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும். இதனால் செலவுகள் குறையும். பாலிசி ஆவணங்கள் தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார்களைக் குறைத்து, காப்பீட்டு சேவைகளின் தரத்தை மேம்படுத்துதலாம். விரைவாக க்ளெய்ம் செய்தல் மற்றும் தீர்வு கிடைக்கும். மோசடிக் குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மேம்படுதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். இந்த வசதியை நீங்களும் பெறலாமே!