Published:Updated:

வங்கி டிஜிட்டல் சேவையில் குவியும் புகார்கள்! என்னதான் தீர்வு..?

டிஜிட்டல் சேவை
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் சேவை

BANK

வங்கி டிஜிட்டல் சேவையில் குவியும் புகார்கள்! என்னதான் தீர்வு..?

BANK

Published:Updated:
டிஜிட்டல் சேவை
பிரீமியம் ஸ்டோரி
டிஜிட்டல் சேவை

கடந்த வாரம் பத்திரிகை ஒன்று நடத்திய கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர், “இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கு ஒரு வங்கி அக்கவுன்ட் இருப்பது மட்டும் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் இல்லை; அதை எளிய முறையில் பயன்படுத்தி சேமிப்பு, கடன், இன்ஷூரன்ஸ் போன்ற பயன்களை அவன் பெறும்படி செய்வதுதான் உண்மையான ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன்; அதைத் தருவதற்கு வங்கிச் சேவைகளை மேலும் மேலும் டிஜிட்டல் மயமாக்குவது ஒன்றே வழி” என்று கூறியுள்ளார். அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை யெனினும், ஏற்கெனவே இருக்கும் டிஜிட்டல் சேவைகளே சரியாக நிலை நிறுத்தப்படாத நிலையில் இன்னும் அதிக டிஜிட்டலை சேஷனா?” என்ற கவலை தோன்றுகிறது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

2019-2020-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மீது மூன்று லட்சம் புகார் கள் வந்துள்ளன. இது கடந்த நிதி ஆண்டைவிட 50% அதிகம். மொத்தப் புகார்களில் 45% ஏ.டி.எம் / டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு / மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனை கள் போன்ற டிஜிட்டல் சேவைகள் பற்றியவை. அதனால் பொதுத்துறை வங்கிகளைவிட டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருக்கும் தனியார் வங்கிகள் குறித்த புகார்களே அதிகம்.

ரிசர்வ் வங்கி ஆம்புட்ஸ்மேனிடம் வந்த புகார்களில் 2,055 ஏ.டி.எம்-கள் குறித்தவை; 13.38% மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் பற்றியவை; ஒரு புகாரை சரி செய்ய சென்ற வருடம் 47 நாள்களே ஆன நிலையில் இந்த வருடம் 95 நாள்கள் ஆகின்றன. இதுபோன்ற தகவல்கள் டிஜிட்டல் சேவைகள் குறித்த எதிர்மறை எண்ணங்களை உருவாக்கு கின்றன.

வங்கிச் செயல்பாடுகளை வேகப் படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப் பட்ட டிஜிட்டலைசேஷன் மக்களை வங்கிகளிடமிருந்து தூரப்படுத்தி உள்ளது. தினம் தினம் புதிய ஆப்களும், அப்க்ரடேஷன்களும் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இவற்றில் பலவும் ஊழியர் களுக்கு சரிவர விவரிக்கப்பட வில்லையோ என்ற கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

உதாரணமாக, ஒரு ஆட்டோ பேமென்ட் சரியாக நடக்கவில்லை என்றோ, அதிகப்படியான சர்வீஸ் சார்ஜ் எடுக்கப்பட்டுள்ளது என்றோ கஸ்டமர் கேரில் / வங்கிக் கிளைகளில் புகார் தெரிவித்தால், அதைச் சரி செய்யும் வழி அவர்களுக்குத் தெரிவதில்லை. லோன் சாங்ஷனில் ஏற்படும் தாமதம், 26 ஏஎஸ்ஸில் தவறான தகவல் வருவது, 15 ஹெச் படிவம் தந்தும் வரிப் பிடித்தம் செய்யப்படுவது போன்ற நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்தால், டிஜிட்டலை சேஷன் குறித்து ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லையோ எனத் தோன்றுகிறது.

வங்கி டிஜிட்டல் சேவையில் குவியும் புகார்கள்! என்னதான் தீர்வு..?

சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் 60 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று அதிக வட்டி வழங்குவதால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. அதை வைத்திருக்கும் வாடிக்கையாளர் இறந்துபோனால், அவர் கட்டி யிருக்கும் தொகை எந்தவித அபராதமும் இன்றி, அவருடைய வாரிசுக்குத் தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மும்பையில், இறந்துபோன வாடிக்கையாளரின் வாரிசு ஒருவருக்கு ரூ.9,500 அபராத மாக விதிக்கப்பட்டுள்ளது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

இது லாபத்தைக் கூட்ட வங்கிகள் செய்யும் சதி போல் சமூக ஊடகங் களில் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், இது தனி மனிதத் தவறு மட்டுமே (Human Error). முன்கூட்டிய மூடல் (Premature Closure) வாடிக்கையாளர் இறந்ததாலா அல்லது வேறு ஏதோ காரணங்களாலா என்ற கணினியின் கேள்விக்கு வங்கி ஊழியர் சரியான பதிலைத் தேர்வு செய்யாததாலும், அதை மேலதிகாரி கவனிக்காததாலும் வந்த வினையே தவிர டிஜிட்டலைசேஷனில் தவறு இல்லை.

நண்பர் ஒருவர் முன்னணி தனியார் வங்கி மூலம் வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு அனுப்பிய பணத்துக்கு வரிப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணம் அரசுக்கு அனுப்பப்பட்ட விவரம் இன்று வரை 26 ஏஎஸ் படிவத்தில் காணப்படவில்லை. ஃபாரெக்ஸ் கன்வர்ஷன் ரேட் என்ன, வங்கிக் கமிஷன் என்ன, ஜி.எஸ்.டி எவ்வளவு, வரிப் பிடித்தம் எவ்வளவு, 26 ஏஎஸ்-ல் ஏற்றும் பொறுப்பு யாருக்கு என்பது போன்ற கேள்விகளுக்கு வங்கி ஊழியர்களுக்கே பதில் தெரியவில்லை. வங்கிக் கிளை ஊழியர்கள் ஃபாரெக்ஸ் டிபார்ட்மென்ட்டை அணுகும்படி கூறுகிறார்கள். ஃபாரெக்ஸ் டிபார்ட்மென்ட் ஊழியர்கள் வங்கிக் கிளைதான் பதிலளிக்க வேண்டும் என்று சாதிக்கிறார்கள். நண்பர் வருமான வரி கட்டுவதற்குத் தேவையான இந்தத் தகவல் கிடைக்காமல் திண்டாடுகிறார்.

மேற்கண்ட இரு நிகழ்வுகளிலிருந்தும் விளங்குவது என்னவென்றால் ஏற்கெனவே இருக்கும் டிஜிட்டலை சேஷன் பற்றிய பயிற்சி, வங்கி ஊழியர்களுக்கு சரியாக வழங்கப்பட வில்லை என்பதே. டிஜிட்டலைசேஷன் மேலும் அதிகரித்தால், டேட்டா கசிவு, சைபர் தாக்குதல் போன்றவற்றில் சிறிதும் பரிச்சயமற்ற சாதாரண மனிதனால் அதைச் சரியாகக் கையாள இயலுமா; அவனுக்கு உதவ வங்கி ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்படுமா என்பது போன்ற கவலைகள் தோன்று கின்றன. ஆனால் சாதாரண மனிதனும், வங்கி ஊழியரும் கற்றுத் தேறும் வரை அரசு இயந்திரம் தன் முன்னேற்ற வேலை களைத் தொடராமல் செயல்பாடின்றி இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, டிஜிடலைசேஷனால் வரக்கூடிய இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள நாம் தயாராவது நல்லது. பொதுவாக 90% வாடிக்கை யாளர்களுக்கு டிஜிடலை சேஷனால் இடர்ப்பாடு வருவ தில்லை. அப்படி துரதிர்ஷ்ட வசமாக இக்கட்டில் சிக்கிக் கொண்டவர்கள் பொறுமையை யும், சரியான வழிமுறைகளையும் கைக்கொள்வது ஒன்றே சிக்கலில் இருந்து விடுபட உதவும்.

உங்களுக்கு நேர்ந்த இக்கட்டு எதுவானாலும் முதலில் உங்கள் புகார் நியாயமானதுதானா என்பதை வங்கியின் வலைத் தளங்களில் சென்று உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கிளையில் பேசி பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்று விசாரியுங்கள். அவர்கள் காட்டும் வழியில் மேலதிகாரி களைத் தொடர்புகொண்டு உங்கள் பிரச்னையை விவரியுங்கள். இது எதற்கும் பலனில்லை என்றால் ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேனை அணுகலாம்.

இவை அனைத்துக்கும் உங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்க வேண்டும். தேதிகள், நேரங்கள், நீங்கள் உதவி நாடிச் சென்ற வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், கஸ்டமர்கேர் ஊழியர்கள் போன்றோரின் பெயர்கள், அவர்கள் தந்த பதில்கள் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பிரச்னையின் தாக்கம் என்னவென்பதை, அதிகாரிகள் உணரும் அளவுக்கு ஆதாரத்துடன் விவரிப்பது அவசியம். தாமதம் ஆனாலும், வங்கிகள் கண்டிப்பாக நம் பிரச்னைகளைத் தீர்க்கும்; ரிசர்வ் வங்கி அதை உறுதி செய்யும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism