Published:Updated:

சாதாரண மக்களிடம் சாட்டை வீசும் வங்கிகள்..! நிலையை மாற்றிக்கொள்ளும் காலம் வருமா..?

வங்கிகள்
பிரீமியம் ஸ்டோரி
வங்கிகள்

B A N K I N G S E R V I C E S

சாதாரண மக்களிடம் சாட்டை வீசும் வங்கிகள்..! நிலையை மாற்றிக்கொள்ளும் காலம் வருமா..?

B A N K I N G S E R V I C E S

Published:Updated:
வங்கிகள்
பிரீமியம் ஸ்டோரி
வங்கிகள்

ஹர்ஷத் மேத்தா ஊழலை உலகறியச் செய்த பத்திரிகை யாளர் சுசேதா தலால், வங்கிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். கோடிக் கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றும் கம்பெனிகளை விட்டு விட்டு, அப்பாவி ஏழைகளையும், மத்தியதர மக்களையும் வங்கிகள் சுரண்டுவதாக அவர் குற்றம் சாட்டி யிருக்கிறார். ‘சேஞ்ச்.ஆர்க்’ என்னும் வெப்சைட் மூலம் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் மனு செய்திருக்கும் அவர், அதிகரித்திருக்கும் சர்வீஸ் கட்டணங்களைக் குறிப்பிட்டு, வங்கிகளின் இந்தப் போக்குக்கு காரணம், ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் மெத்தனமே என்று சொல்லி யிருக்கிறார்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

வாடிக்கையாளரை வதைக்கலாமா?

வங்கிகளின் முதுகெலும்பே, நம்பி தங்கள் பணத்தை ஒப்படைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்தாம். அந்தப் பணத்தை அதிக வட்டிக்குக் கடன் தந்து தங்கள் சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கும் வங்கிகள், அதே மக்களை பலவித கட்டணங்களை விதித்து வாட்டி வதைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பது அவர் வாதம்.

நம்முடைய வங்கிக் கணக்கில் அவ்வப்போது ரூ.15 அல்லது ரூ.20 வங்கிகளால் பிடிக்கப்படுவதை நம்மில் பலர் கவனிப்பதுமில்லை; பொருட்படுத்துவதும் இல்லை. கேள்வி கேட்க எண்ணுவதுமில்லை. ஆனால், அடித்தட்டு மக்களுக்கு அது ஒரு பேரிழப்பு.

பத்து வருடங்களுக்குமுன் மினிமம் பேலன்ஸ் பற்றி நாம் யாரும் கவலை கொண்டதில்லை. நாம் விரும்பாத கிரெடிட் / டெபிட் கார்டுகளைத் திணித்து, அதற்குத் தனியாக வருடாந்தரக் கட்டணம் வசூலிக்கப் பட்டதில்லை.

பணம் கையாளும் கட்டணம் பற்றி நாம் கேள்விப்பட்டதேயில்லை. வங்கிகள் இருப்பதே பணம் கையாள்வதற்குத்தானே? செக் புத்தகங்கள், டூப்ளிகேட் பாஸ் புத்தகம், ஸ்டேட்மென்ட் - எல்லாமே இலவசமாகத்தான் தந்தார்கள்.

வங்கிகள்
வங்கிகள்

அபராதம் ரூ.4,990 கோடி...

அரசு வங்கிகள் இலவசமாகத் தந்த இத்தகைய சேவைகளுக்குத் தனியார் வங்கிகள் கட்டணம் விதித்தன. தனியார் வங்கிகள் சற்று மேன்மை யான சேவைகள் தந்ததாலும், வசதி குறைந்தவர்கள் அரசு வங்கிகளையே நாடியதாலும் இதன் தாக்கம் அதிகம் உணரப்படவில்லை. ஆனால், தங்கள் லாபம் குறைவதைக் காரணம் காட்டி, அரசு வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கியபோது சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

2018-ல் 21 அரசு வங்கிகளும், மூன்று தனியார் வங்கிகளும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக அபராதமாக வசூலித்த தொகை மட்டும் ரூ.4,990 கோடி. இது முழுவதுமே வங்கி நடைமுறைகள் பற்றி எந்தவித விழிப்புணர்வும் அற்ற ஏழைகளின் பணம்.

வங்கிக் கிளைகளில் கூட்டத்தைக் குறைக்க ஏ.டி.எம் மையங்கள் திறக்கப் பட்டன. அதை முறையாகப் பயன்படுத்தவே நம் மக்களுக்கு வெகு காலம் பிடித்தது. ஏ.டி.எம்மில் பணமும், வங்கிகளில் பொறுப்பான பதிலும் சரிவர வராத நிலையில் “என் பணம் எங்கு சென்றது, எப்போது திரும்பி வரும்?” என்று தூக்கமின்றித் தவித்தவர்கள் ஏராளம்.

அபராதத்துக்கும் ஜி.எஸ்.டி...

வங்கிக் கிளை மற்றும் ஏ.டி.எம் என்ற இரு இடங்களிலும் நமக்கு சேவை கிடைப்பது நல்லதுதானே என்று எண்ணி அனைத்தையும் பொறுத்துக்கொண்டோம். இன்று நான்கு ஐந்து முறைக்கு மேல் இந்தச் சேவையைப் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் ரூ.100 (ஜி.எஸ்.டி ரூ.18) பிடித்தம் செய்யப்படுகிறது.

இதில் வங்கிகளுக்கு உள்ள வசதி என்னவென்றால், நம் அக்கவுன்ட் அவர்களிடம் இருப்பதால், நம் சம்மதம் இன்றியே பிடித்தம் செய்ய முடிவது. இதிலும் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. எப்போது பணம் வரும், எவ்வளவு வரும் என்று தெரியாத நிலையில், ஓரிரண்டு முறைகள் மட்டுமே பணத்தை எடுப்பது என்பது அவர்களுக்கு சாத்தியமில்லை.

சுசேதா தலால்
சுசேதா தலால்
வெங்கடாசலம்
வெங்கடாசலம்

சலுகைக் கணக்குகளையும் கட்டணக் கணக்குகளாக மாற்றும் வங்கிகள்...

அரசு தரும் மானியங்கள் வங்கி அக்கவுன்ட்டுக்கே வரும் என்ற நிலையில், அடித்தட்டு மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அரசு இதை உணர்ந்து பி.எஸ்.பி.டி.ஏ (Basic Savings Bank Deposit Account), பி.எம்.ஜே.டி.ஒய் (Pradhan Mantri Jan Dhan Yojana) போன்ற அக்கவுன்ட்டுகளை அறிமுகம் செய்தது.

இந்த அக்கவுன்ட்டுகளுக்கு எந்தவிதமான அபராதமும் பிடித்தமும் இருப்பதில்லை என்பதால், கீழ்த்தட்டு மக்களுக்கு இவை வசதியாக இருந்தது. ஆனால், ஐ.ஐ.டி மும்பை பேராசிரியர் ஆஷிஷ் தாஸ், வங்கிகள் இந்த அக்கவுன்ட்டுகளைப் பலவித காரணங்கள் சொல்லி, சாதாரண அக்கவுன்ட்டுகளாக மாற்றி அபராதங்கள் விதிப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறார்.

தலையில் கட்டப்பட்ட கடன் ஃபண்ட் திட்டம்...

வங்கிச் சேவைகளை மட்டும் வங்கிகள் வழங்கிய காலம் மலையேறிவிட்டது. இன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் போன்ற வற்றையும் வங்கிக் கிளைகள் விநியோகிக்க வேண்டிய நிலை. சமீபத்தில் வங்கி வைப்பு நிதி (FD) வைப்பதற்காகச் சென்ற ஒரு முதியவருக்குக் கடன் ஃபண்ட் (Debt Fund) திட்டம் ஒன்றை வழங்கியுள்ளது ஒரு முன்னணி அரசு வங்கி.

இலக்கையும் அடைந்தாயிற்று, போனஸும் கிடைக்கிறது என்றால், வாடிக்கையாளருக்கு கடன் ஃபண்ட் பற்றி புரிந்தா லென்ன, புரியாவிட்டால் என்ன என்ற ஒரு மனநிலை உருவாகி யிருப்பது வருந்தத்தக்கது.

ஏ.ஐ.பி.ஏ (AIBEA) அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் “வங்கிகள் தாங்கள் ஒரு சேவை நிறுவனம் என்பதை மறந்து விட்டன. ஏற்கெனவே எஸ்.பி மற்றும் எஃப்.டி-யில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானம் குறைந்த தால் வாடும் வாடிக்கையாளர்கள் மீது வங்கிகள் பலவித கட்டணங்கள் விதிப்பது சரியல்ல” என்கிறார்.

10 லட்சம் கோடி வாராக்கடனில் 40% அளவுக்கும் மேல் தள்ளுபடி செய்யத் தயாராக இருக்கும் வங்கிகள், சாதாரண மக்களிடம் இவ்வளவு கடுமை காட்டுவதும், சாட்டை சுழற்றுவதும் தவறு என்று பல மன்றங்களிலும் புகார் எழுந்தபின், கடந்த நவம்பர் மாதம் “இனி அரசு வங்கிகள் கட்டண உயர்வை மேற் கொள்ளக்கூடாது” என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் வேண்டுகோளை வங்கிகள் கேட்கிற மாதிரி இல்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை!

பிட்ஸ்

தானி குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்து உள்ளது. டாடா, ஹெச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ் அடுத்து, அதானி 100 பில்லியனை அடைந்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism