₹5.85 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி... வசூல் வெறும் ₹68,000 கோடிதான்... என்ன காரணம்?

இந்தக் கடன்களை வாங்கியவர்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மற்றவர்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
இனி வரவே வராது என்கிற கணக்கில் இந்திய வங்கிகள் ரூ. 5.85 லட்சம் கோடியை வாராக் கடன் கணக்கில் தள்ளுபடி செய்திருக்கின்றன. அதாவது, இந்தக் கடன்கள் வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையாகும்.

2018-2019 நிதியாண்டில் 2.36 லட்சம் கோடி ரூபாய், 2019-2020 நிதியாண்டில் 2.34 லட்சம் கோடி ரூபாய், 2020-2021 நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 1.15 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தக் கடன்களில் 68,000 கோடி ரூபாய் தான் இதுவரை கடன் வாங்கியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறது. மீதி கடனை வசூலிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.

இந்தக் கடன்களை வாங்கியவர்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மற்றவர்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் அதிக தொகையை வசூலிக்க முடியாமல் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்தத் தகவலை நிதி அமைச்சகம் மக்களவைவில் தெரிவித்துள்ளது.