அலசல்
Published:Updated:

அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!

அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!

வங்கி டெபாசிட்க்கு ரூ. 5 லட்சம் வரை (அசல் மற்றும் வட்டி) உத்தரவாதம் இருக்கிறது. தபால் அலுவலக எஃப்.டிக்கு முழுத் தொகைக்கும் மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு.

நம்மவர்கள் எப்போதும் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) என்கிற வைப்பு நிதி திட்டத்தில் தொடர்ந்து ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கு காரணம், அதன் மூலம் கிடைக்கும் நிலையான வருமானம் ஆகும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் மிகவும் பிரபலம். இதனை விட சற்று கூடுதல் வட்டி வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் இருக்கின்றன. பலருக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். அதனை அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பவர்களுக்கு இந்த கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் ஏற்றதாக இருக்கும்.

அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!

வட்டி வருமானம்..!

கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்க்கான வட்டி, முதிர்வு காலத்தை பொருத்து இருக்கிறது. தற்போதைய நிலையில் வங்கிகளில் மூன்றாண்டுக்கான டெபாசிட்க்கு 5.65-6% வட்டி வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்களில் 7.25-8 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. தற்போது முதலீடு செய்ய கிடைக்கும் கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்களின் விவரத்தை அட்டவணையில் கொடுத்திருக்கிறோம்.

கம்பெனி எஃப்டி மூலம் மாதம் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை தொடர் வட்டி வருமானம் பெற முடியும். ஒருவர் தனது மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 20-25 சதவிகிதத்தை மட்டுமே இது போன்ற கொஞ்சம் ரிஸ்க்கான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

யார் முதலீடு செய்யலாம்?

குறிப்பிட்ட இடைவெளியில் மொத்த முதலீடு மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற முதலீடாகும். இந்தியக் குடிமக்கள் அனைவரும் கம்பெனி எஃப்.டியில் முதலீடு செய்யலாம். சில குறிப்பிட்ட கம்பெனிகளின் டெபாசிட்களில் மட்டுமே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐகள்) முதலீடு செய்ய முடியும்.

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனிநபர், இருவர் சேர்ந்து, இந்துக்கூட்டுக் குடும்பத்தினர் என பலரும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!

வருமான வரி..!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும்.

பொதுவாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் என்கிறபோது வட்டி வருமானம் நிதி ஆண்டில் ரூ. 40,000-ஐ தாண்டும் போதுதான் 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினருக்கு மூலத்தில் வரி (டி.டி.எஸ்) பிடிக்கப்படும். இந்த வரம்பு மூத்தக் குடிமக்களுக்கு ரூ. 50,000 ஆக இருக்கிறது.

அதேநேரத்தில் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் என்கிற போது நிதி ஆண்டில் வட்டி வருமானம் ரூ.5,000-க்கு மேற்படும் போது டி.டி.எஸ் பிடித்தம் செய்வார்கள். இது 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர் மற்றும் மூத்தக் குடிமக்கள் அனைவருக்குமான விதிமுறையாகும்.

அடிப்படை வரி வரம்புக்கு கீழே இருப்பவர்கள் டி.டி.எஸ் பிடிப்பதை தவிர்க்க அதற்குரிய படிவத்தை முதலீடு செய்யும் போதே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

அதிக வட்டி வருமானத்துக்கு கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்..!

ரிஸ்க் ஏதுவும் இருக்கிறதா?

வங்கி டெபாசிட்க்கு ரூ. 5 லட்சம் வரை (அசல் மற்றும் வட்டி) உத்தரவாதம் இருக்கிறது. தபால் அலுவலக எஃப்.டிக்கு முழுத் தொகைக்கும் மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு. கம்பெனி எஃப்.டி-க்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால் ரிஸ்க் அதிகம்.

எனவே, கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு அனைத்து கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களிலும் முதலீடு செய்யக் கூடாது. பாரம்பரியமான கம்பெனிகள் மற்றும் நல்ல தரக்குறியீடு பெற்றிருக்கும் நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களை தேர்வு செய்துதான் முதலீடு செய்ய வேண்டும்.