Published:Updated:

ஆட்டோ டெபிட் புதிய விதிமுறை... கடன் இ.எம்.ஐ & எஸ்.ஐ.பி-க்கு பொருந்துமா?

ஆட்டோ டெபிட்

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு மாதமும் பல்வேறு சேவைகளைப் பெற மாதாந்தர கட்டணம் செலுத்தும் அவசியம் அனைவருக்கும் இருக்கும். ஒருவேளை செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்தச் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இ.எம்.ஐ மற்றும் எஸ்.ஐ.பி முதலீடுகள் தடைபடும். அதனால், `ஆட்டோ டெபிட்’ அனுமதியை சேவை வழங்கும் நிறுவனங்களுக்குக் கொடுத்திருப்போம். ஆனால், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆட்டோ டெபிட் முறையில் சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில், வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக ஆர்.பி.ஐ வழங்கியிருந்த காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆட்டோ டெபிட் புதிய விதிமுறை... கடன் இ.எம்.ஐ & எஸ்.ஐ.பி-க்கு பொருந்துமா?

``ஒரு சேவை முடிவடையப்போகிறது என்றால், ஐந்து நாள்கள் முன்னதாக வாடிக்கை யாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்ப வேண்டும். அதன் மூலம் வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்தில்தான் அந்தப் பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த வேண்டும். ரூ.5,000-க்கு மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) அனுப்பப்படும். வாடிக்கையாளர் அதற்கு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில்தான் அந்தப் பரிவர்த்தனை முழுமையடைய வேண்டும்” என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விதிமுறை கடன் இ.எம்.ஐ மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி திட்டங்களுக்குப் பொருந்தாது. இவற்றுக்கு வழக்கம்போல ஆட்டோ டெபிட் முறை அமலில் இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், கடனுக்கான இ.எம்.ஐ-யை சரியான தவணைத் தேதியில் செலுத்தாமல் போனால், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-க்கான தொகையை சரியான தேதியில் செலுத்தாமல் போனாலும், முதலீட்டாளர்களுக்கு சிக்கல் உருவாகும். மேலும், செக் பவுன்ஸ் கட்டணத்தையும் முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இதைக் கருத்தில்கொண்டு, இந்த ஆட்டோ டெபிட் முறைக்கான புதிய விதிமுறைகள் இவ்விரு சேவைகளுக்கும் பொருந்தாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு