Published:Updated:

`மூன்று ஆண்டுகள்; உலக அளவில் 35,000 பணியிடங்கள் குறைப்பு!' - கலங்கும் ஹெச்.எஸ்.பி.சி ஊழியர்கள்

HSBC Bank
HSBC Bank

"அடுத்த மூன்று ஆண்டுகளில், வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கையை 2,35,000-லிருந்து 2,00,000 நபர்களாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகளைக் கொண்டிருக்கும் ஹெச்.எஸ்.பி.சி (HSBC Holdings) ஹோல்டிங்ஸ், 2018-ம் ஆண்டில், உலகின் ஏழாவது பெரிய வங்கி என்ற பட்டியலில் இடம்பெற்றது. ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனமான இதன் மொத்த சொத்துகள் 2.558 டிரில்லியன் அமெரிக்க டாலர். இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது. இதன் தலைமையிடம் லண்டனில் உள்ளது. இந்த வங்கி, கடந்த செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தனது 100 பில்லியன் டாலர் சொத்துகளைக் குறைத்தும் முதலீட்டு வங்கியின் அளவைக் குறைத்தும், தனது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வணிகங்களை மறுசீரமைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மூன்று ஆண்டுகளில் 35,000 வேலைகள் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

HSBC Bank
HSBC Bank

ஏற்கெனவே, அதன் முக்கிய சந்தைகளில் வளர்ச்சி குறைந்து வருவது, கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது ஆகியவை இந்த 35,000 நபர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாகி நோயல் க்வின் ராய்ட்டர்ஸ், "அடுத்த மூன்று ஆண்டுகளில், வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கையை 2,35,000-லிருந்து 2,00,000 நபர்களாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

BANK Fraud Calls: ஏமாந்த பணத்தை மீட்க வழி என்ன?

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான இது, ஆசியாவிலும் கோலோச்சுகிறது. ஆசியாவில் இதன் வருவாய் பெருமளவில் இருந்துவந்தது. ஆனால், 2019-ம் ஆண்டில் இதன் லாபம் 13.35 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கணக்கிடப்பட்ட 20.03 பில்லியன் டாலரைவிட மிகக்குறைவு. செயல்படாத வங்கிகளை மீண்டும் செயல்படுத்த இது முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் ஹெச்.எஸ்.பி.சி வருவாயை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எனவே, அதன் 224 கிளைகளில் மூன்றில் ஒரு பகுதியை மூடிவிட்டு, சர்வதேச மற்றும் செல்வந்த வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HSBC Bank
HSBC Bank

இந்த வங்கியின் வருவாய், 2022 -ம் ஆண்டில் 10-12 சதவிகித வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 8.4 சதவிகிதமாக வருவாய் விகிதத்தை அறிவித்தது. இது, 2018ல் 8.6 சதவிகிதமாக இருந்தது. வரும் காலங்களில், வங்கியின் வருவாய் வீரியத்தை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஹெச்.எஸ்.பி.சி. ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய், வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் கணிசமாகப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு வங்கியின் வருவாயைக் குறைத்து, விநியோகத்தைப் பாதிப்படையச் செய்வதால், மோசமான கடன்கள் உயர வாய்ப்புள்ளதாக க்வின் பேசும்போது தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு