Published:Updated:

ஜீரோ பர்சன்ட் லோன் என்பது உண்மையில் நமக்கு லாபம்தானா? #LoanVenumaSir - 15

#LoanVenumaSir

இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், ஜீரோ வட்டி என்பது நிஜமாகவே ஜீரோ வட்டி கிடையாது.

ஜீரோ பர்சன்ட் லோன் என்பது உண்மையில் நமக்கு லாபம்தானா? #LoanVenumaSir - 15

இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், ஜீரோ வட்டி என்பது நிஜமாகவே ஜீரோ வட்டி கிடையாது.

Published:Updated:
#LoanVenumaSir

நுகர்வோர் சாதனங்கள் கடன் என்பது தற்போதைய அதிநவீன வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால், தற்போது பெருகிவரும் மின்னணு சாதனங்கள் பலவும் மிகவும் அதிக விலை கொண்டதாக இருக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. விலை அதிகமாக இருப்பதால் பலரும் கடன் வாங்கித்தான் அதை வாங்க வேண்டியுள்ளது. அதற்கு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உதவி செய்கின்றன. இந்த நுகர்வு கலாசாரம் சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் நாம் போக வேண்டாம். இந்தக் கடனை வேண்டும் என்கிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடன்
கடன்

ஜீரோ வட்டியில் கடன் சாத்தியமா?

இருக்கும் கடன் வகைகளிலேயே மிகவும் துரிதமாகத் தரப்படும் கடன்களில் ஒன்றாக நுகர்வு சாதனக் கடன் உள்ளது. இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், ஜீரோ வட்டி என்பது நிஜமாகவே ஜீரோ வட்டி கிடையாது. நீங்கள் வாங்கும் நுகர்வோர் சாதனங்களுக்கு அளிக்கப்படும் தள்ளுபடியை, வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகையில் கணக்கிட்டுக் கொண்டு, அதையே வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ வட்டி என்ற கடன் திட்டமாக அளிக்கிறார்கள்.

நீங்கள் ஜீரோ வட்டி கடன் திட்டத்தில் நுகர்வு சாதனம் வாங்கும்போது கடைக்காரர்கள் தள்ளுபடி எதையும் தரமாட்டார்கள். மேலும், இதில் கடன் பரிசீலனைக் கட்டணம் என்ற பெயரில் மறைமுகமாகவும் உங்களிடமிருந்து வட்டியை வசூலித்துவிடுவார்கள். இதை ஒரு சிறு உதாரணத்துடன் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீங்கள் ரூ.15,000 மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை வாங்குகிறீர்கள். கடைக்காரர் 15% தள்ளுபடி தருகிறார். இப்போது நீங்கள் வாங்க ஆசைப்பட்ட மொபைல் போனின் விலை தள்ளுபடி போக ரூ.12,750. இப்போது நீங்கள் மொத்தப் பணம் கொடுத்து வாங்கினால் ரூ.12,750-க்கு மொபைல் போனை வாங்கிவிடலாம். இதுவே நீங்கள் கடன் மூலம் வாங்கும் பட்சத்தில், மூன்று மாத தவணைக்கு 15 சதவிகித வட்டி என்று கணக்கிட்டு கடன் வாங்கினால் வட்டி தொகை ரூ.2,250 என்று வருகிறது. இதை மொபைல் போனின் நிகர தொகையான ரூ.12,750-டன் கூட்டினால் மீண்டும் மொபைல் போனின் முழுத் தொகையான ரூ.15,000 வந்துவிடும். அதாவது, உங்களுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடியை வங்கி எடுத்துக் கொண்டுவிடும். இப்போது தாங்கள் மாதம் ரூ.5,000 என்று மூன்று மாதத்திற்கு ரூ.15,000 கட்ட வேண்டும். ஆனால், நாம் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தால், இது உண்மை அல்ல என்பது புரியும்!

 Smartphone
Smartphone

இதில் இரண்டாவது விதமான ஒரு கணக்கும் இருக்கிறது. மொபைல் போனுக்கு எந்தவிதமான தள்ளுபடியும் இல்லை என்றால், மொபைல் போனில் அசல் முழு தொகையான ரூ.15,000-த்தில் வட்டி தொகையான ரூ.2,250 சேர்த்துவிடுவார்கள். இப்போது மொபைல் போனின் விலையை ரூ.17,250 என்று கூறுவார்கள். அதற்கு மூன்று மாதத் தவணையாக ரூ.5,750 செலுத்தவேண்டும். இப்போதும் நீங்கள் மொபைல் போனின் விலையை மட்டும்தானே கொடுக்கிறோம் என்று நினைத்துக்கொள்வீர்கள். ஆனால், அது உண்மையல்ல.

இந்தக் கடன் வாங்க என்ன தகுதி?

நான் ஏற்கெனவே கூறியபடி, இந்த நுகர்வோர் சாதனக் கடனுக்கும் உங்களின் வயது, வேலை, வேலை செய்யும் நிறுவனம், பதவி, மொத்த சம்பளம், நிகர சம்பளம், போன்றவற்றைக் கணக்கில் கொண்டே கடன் தொகையை நிர்ணயம் செய்வார்கள். மேலும், தாங்கள் வாங்கும் நுகர்வு சாதன பொருளின் விலையில் குறிப்பிட்ட % மட்டுமே கடன் தொகையாக வழங்குவார்கள். அதாவது, நீங்கள் வாங்கும் நுகர்வு சாதனப் பொருளின் விலை ரூ.1 லட்சமாக இருந்தால், அதில் ரூ.60,000 - ரூ.80,000 வரை கடன் தொகையாக வழங்குவார்கள். மீதமுள்ள ரூ.20,000 நீங்கள் மார்ஜின் மணியாக உங்கள் கையிலிருக்கும் தொகையைக் கடைக்காரரிடம் தரவேண்டும்.

ஜீரோ பர்சன்ட்
ஜீரோ பர்சன்ட்
pixabay

கடனை முன்கூட்டியே கட்டினால்...?

இந்த நுகர்வோர் சாதனக் கடன்கள் குறைந்த காலத்தில் திருப்பிக் கொடுக்கும்படியாக தரப்படுகின்றன. அதாவது, ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக மூன்று வருடம் வரை கொடுக்கப்படுகின்றன. இந்தக் கடனுக்கு எந்தவிதமான வரிச் சலுகைகளும் கிடையாது.

இந்த வகை கடன்களை முன்கூட்டியே கடன் செலுத்தும் காலத்திற்குள் திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கட்டணம் (Foreclosure Charges) வசூலிக்கப்படும். இது கடன் நிலுவைத் தொகையில் 3% - 5 % வரை வசூலிக்கப்படும்.

வாங்கலாமா, கூடாதா?

இந்தக் கடனுக்கும் வழக்கமான அறிவுரைதான்; உங்களுக்கு அந்த நுகர்வு சாதனம் தேவை என்றால், மட்டுமே வாங்குங்கள். நண்பர்கள் உறவினர்கள் அந்த சாதனத்தை வாங்கி இருக்கிறார்கள் என்பதற்காக வாங்க வேண்டாம்.

- (வாங்குவோம்)