Published:Updated:

வங்கி லாக்கர் பிரச்னை... வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு!

வங்கி லாக்கர்
பிரீமியம் ஸ்டோரி
வங்கி லாக்கர்

வங்கி லாக்கர்

வங்கி லாக்கர் பிரச்னை... வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு!

வங்கி லாக்கர்

Published:Updated:
வங்கி லாக்கர்
பிரீமியம் ஸ்டோரி
வங்கி லாக்கர்

''தாமதமாகும் நீதி மறுக்கப் பட்ட நீதிக்குச் சமம்” (Justice delayed is justice denied) என்பார்கள். ஆனால், நம் உச்ச நீதிமன்றம் அதைப் பொய் யாக்கியுள்ளது. 1994-ம் வருடம் ஆரம்பித்து, 27 வருடங்களாகத் தொடர்ந்த பிரச்னையை இந்த வருடம் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களின் மற்ற பல பிரச்னைகளுக்கும் ஓரளவு தீர்வு கிடைக்கத் தற்போது வந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழிவகுத்துள்ளது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

27.5.1995 அன்று யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கொல்கத்தா கிளைக்குத் தனது லாக்கரைத் திறந்து பார்க்கச் சென்ற அமிதாப்தாஸ் குப்தாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! 1994-ம் ஆண்டில் லாக்கர் வாடகையை அவர் கட்டவில்லை என்ற தவறான தகவலின் பேரில் அவருடைய லாக்கர் உடைக்கப் பட்டிருந்தது. அவர் அதில் வைத்திருந்த ஏழு நகைகளுக்குப் பதிலாக, இரண்டு நகைகள் தரப்பட்டன. அவை இரண்டுமே அவருடையதில்லை!

இதை எதிர்த்து மாவட்ட நுகர்வோர் அமைப்பில் அவர் வழக்கு தொடுத்தார். இழப்பீடாக ரூ.3 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ.50,000 தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். “ஒருவரின் லாக்கரில் உள்ள பொருள்கள் பற்றிய விவரம் வங்கிகளுக்குத் தெரிய நியாயமில்லை; அதனால் அந்தப் பொருள்களுக்கு வங்கியைப் பொறுப்பாக்க முடியாது” என்னும் வாதத்தால் அந்தப் புகார், முடிவை எட்டாமல் வெவ்வேறு நீதிமன்றங் களில் நிலுவகையில் இருந்தது.

இறுதியாக, இந்த வருடம் பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம், அமிதாப் தாஸ்குப்தாவின் பக்கம் உள்ள நியாயத்தை ஏற்று, அவருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ.1 லட்சமும் வழங்குமாறு தீர்ப்பளித்தது; அந்த ரூ.5 லட்சத்தையும் தவறு செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வசூல் செய்யுமாறும் பணித்தது.

லாக்கர் வாடிக்கையாளர்களின் மற்ற துன்பங்களையும் கணக்கில் கொண்ட நீதிபதிகள், “வீட்டில் விலையுயர்ந்த பொருள்களை வைக்க பயந்து, வங்கி லாக்கர்களை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு மனநிம்மதி தரும் வகையில் வங்கிகளின் செயல்பாடுகள் அமைவது அவசியம். லாக்கர்கள் கணினிமயமாக்கப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் பாடு இன்னும் திண்டாட்டமாகி விடும். ஏனெனில், தற்போதுள்ள இரண்டு சாவி முறைகளில் இருக்கும் பாதுகாப்புகூட பாஸ்வேர்டு/ ஏ.டி.எம் பின்நம்பர் போன்ற முறைகளைப் பின்பற்றும்போது வாடிக்கையாளர் களுக்கு இருக்காது. லாக்கரில் இருக்கும் பொருள்கள் பற்றிய விவரம் தெரியாது என்ற ஒரே காரணத்தைக் கூறி வங்கிகள் லாக்கர் தொடர்பான பிரச்னைகளைக் கைகழுவ முடியாது. இது போன்ற பல பிரச்னைகளுக்கும் ஆறு மாத காலத்தில் தீர்வு காண வேண்டும்” என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது.

வங்கி லாக்கர் பிரச்னை... 
வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு!

லாக்கர் குறித்து வாடிக்கையாளர்களுக்குப் பல புகார்கள் உள்ளன. அவற்றில் சில...

 லாக்கர் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

 லட்சக்கணக்கில் வைப்பு நிதி, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி போன்றவைகளைத் தருபவர்களுக்கு லாக்கர் வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது.

 லாக்கர் ஒப்பந்த படிவங்களின்படி, லாக்கரை உடைத்துத் திறக்க நேரும்போது, வங்கிக்கு சம்பந்தமில்லாத ஒரு தனி நபர் முன்னிலையில் திறந்து உள்ளே இருக்கும் பொருள்கள் பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும். இதைச் சரி வர வங்கிகள் பின்பற்றுவதில்லை.

 பல வங்கிகள் லாக்கருக்கு நாமினேஷன் பெறுவதிலும், லாக்கர் உரிமையாளர் இறந்துவிட்டால், நாமினிக்கு லாக்கரில் உள்ள உடைமைகளைத் தருவதிலும் சுணக்கம் காட்டுகின்றன.

இவை அனைத்தையும் சரி செய்யவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவும் போன வாரம் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குப் பல வழிகாட்டல் களை அறிவுறுத்தியுள்ளது. அவற்றில் முக்கியமானவை...

1. வங்கி லாக்கருக்கு விண்ணப்பிப்பவர்கள் வங்கி வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2. ஒருவர் வங்கி லாக்கருக்கு விண்ணப்பிக்கும்போது அதற்கு காத்திருப்பு எண் (Waiting number) ஒன்று தரப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு வங்கிக் கிளையும் தன்னிடம் காலியாக உள்ள லாக்கர் விவரங்களையும், அதற்காகக் காத்திருக்கும் வாடிக் கையாளர்களின் காத்திருப்பு எண்ணையும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் பதிவிட வேண்டும்.

4. மூன்று வருட வாடகை மற்றும் அவசியம் ஏற்பட்டால் லாக்கரை உடைக்கும் செலவு ஆகியவற்றுக்காக ஒரு குறிப் பிட்ட தொகையை வைப்புநிதி யாக லாக்கர் வாடிக்கையாளர் களிடம் பெறலாம்.

5. வங்கியின் கவனக் குறைவாலோ, வங்கி ஊழியர் களின் முறைகேடாலோ வாடிக்கையாளர் பாதிப் படைந்தால், லாக்கர் வாடகை போல நூறு மடங்குஇழப்பீடாகத் தரப்பட வேண்டும்.

6. லாக்கர் ரெஜிஸ்டர், கீ ரெஜிஸ்டர் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

7. லாக்கரை உபயோகித்த விவரம் அன்றே எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

8. லாக்கர் ரூமின் வாசல்களைக் கண்காணிக்க சிசிடிவி பொருத்த வேண்டும்; அதன் ஆறுமாத ரெக்கார்டு பதிவு, வங்கியில் வைத்திருக்கப் பட வேண்டும்.

9. லாக்கரை ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு மாற்றும்போது முந்தைய உரிமை யாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

10. லாக்கர் ஒப்பந்தத்தில் ஏற்கெனவே உள்ள ஷரத்துக்களோடு “சட்டத்துக்குப் புறம்பான எதையும் லாக்கரில் வைக்கக் கூடாது; அது பற்றி வங்கிக்கு சந்தேகம் வரும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வங்கிக்கு உரிமை உள்ளது” என்னும் ஷரத்தையும் சேர்க்க வேண்டும்.

11. உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ஐ.பி.ஏ (Indian Banking Association) ஒரு மாடல் ஒப்பந்தம் தயாரிக்க வேண்டும்; வங்கிகள் கூடியவரை அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

12. நாமினேஷன்கள் முறையாகப் பெறப் பட வேண்டும். வாடிக்கையாளரின் இறப்பு சான்றிதழுடனும், நாமினியின் அடையாளச் சான்றிதழுடனும் சமர்ப்பிக்கப்பட்ட க்ளெய்ம் செட்டில்மென்ட் விண்ணப்பத்துக்கு, 15 நாள் களுக்குள்ளாகத் தீர்வு காண வேண்டும்.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள மேற்கண்ட வழிகாட்டல்கள் 1.1.2022 முதல் அமலுக்கு வரும். ஏற்கெனவே லாக்கர் வைத்திருப்பவர்கள் 1.1.2023-க்குள் புது ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

இனியாவது வங்கி லாக்கர் விஷயத்தில் வாடிக்கையாளர்களின் நலன் பேணப்பட்டு, குறைகள் விரைவில் தீர்க்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தாராளமாக நாம் ஒரு ஜே போடலாம்.