Published:Updated:

டெபிட், கிரெடிட் கார்டுகளில் மோசடிகளைத் தவிர்க்க உதவும் புதிய விதிமுறைகள்!

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

சமீப காலங்களில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் நடப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்காகவே இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டெபிட், கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் குறித்து நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் பேசினோம்.

``டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் அனைத்தும் பாதுகாப்பை முன்னிறுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சமீப காலங்களில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் நடப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்காகவே இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

இனி டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும் என்றொரு புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், இனி வெளிநாட்டுக்குச் செல்லும்போது நம்மூர் டெபிட், கிரெடிட் கார்டுகளை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது.

டெபிட், கிரெடிட் கார்டுகள் தொலைந்தோ, திருடு போகும் பட்சத்தில் அவற்றை இந்தியாவுக்குள்ளேயே வேறு ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். நம் கார்டையும், இழந்த பணத்தையும் மீட்டுவிடலாம். அதுவே திருடுபோன டெபிட், கிரெடிட் கார்டுகளை ஒருவர் வெளிநாட்டில் பயன்படுத்தி வந்தால், அவர் மீது வழக்கு பதிவது எளிதல்ல. அதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதி உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான விஷயங்களைக் கடந்தாக வேண்டும். இந்தச் சிக்கல்களைத் தவிர்க்கவே ரிசர்வ் வங்கி இந்த முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது.

`டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனையின் வரம்பை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்' என்ற மற்றொரு விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு மாதத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் வழியே பரிவர்த்தனை செய்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் பரிவர்த்தனை செய்யும் தொகை வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாக இருக்கும் பட்சத்தில், உங்களின் பணப் பரிவர்த்தனை வரம்பை நீங்களே குறைத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்துக்கு உங்கள் கார்டுகளின் வழியே ரூ.50,000 எடுக்க முடியும் என்ற வரம்பை நிர்ணயித்துக்கொண்டீர்கள் என்றால், ஒருவேளை உங்கள் கார்டு தொலைந்து போனாலோ, ஆன்லைன் மோசடிக்கு உள்ளானாலோ அதிலிருக்கும் பணத்தை முழுவதுமாக யாராலும் எடுக்க முடியாது. உங்கள் பணம் காப்பாற்றப்படும்" என்றார்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

- நாம் மேற்கொள்ளும் டெபிட், கிரெடிட் கார்டு பணப் பரிவர்த்தனைகளில் தினமும் பல்வேறு குளறுபடிகள் நடந்தவண்ணம் உள்ளன.

ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

இவற்றைக் கவனத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் கடந்த அக்டோபர்-1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றின் 10 அம்சங்களைத் தெளிவாக நாணயம் விகடன் இதழில் அறிய > டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு... புதிய விதிமுறைகள் ஏன்? - அனைவரும் அறிய வேண்டியவை https://bit.ly/3nHmV3f

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு