Published:Updated:

வரும் ஜனவரியில் 12 நாள்கள் வங்கிகள் விடுமுறை; பிளான் பண்ணிக்கோங்க மக்களே!

Bank (Representational Image)
News
Bank (Representational Image) ( Photo: Vikatan / Ashokkumar.D )

பண்டிகை தினங்களுக்கான விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை என அனைத்தும் சேர்த்து 16 நாள்கள் வரை ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 12 நாள்கள் விடுமுறை.

இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த 2022 ஜனவரி மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, 2022 ஜனவரியில் மொத்தம் 16 நாள்களுக்கு வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினங்களுக்கான விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை என அனைத்தும் சேர்த்து 16 நாள்கள் வரை ஜனவரி மாதத்தில் விடுமுறை விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் 16 நாள்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்காது. சில விடுமுறை நாள்கள் சிறப்பு பண்டிகைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

விடுமுறைப் பட்டியல்:

ஜனவரி 1 : ஆங்கிலப் புத்தாண்டு (நாடு முழுவதும்)

ஜனவரி 2 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 4: லோசூங் (சிக்கிம்)

ஜனவரி 8: இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 9 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 11: மிஷனரி தினம் (மிசோரம்)

ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் (கொல்கத்தா)

ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல் (பல மாநிலங்கள்)

ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு)

ஜனவரி 16 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 18: தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22: நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 23 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 26: குடியரசு தினம் (நாடு முழுவதும்)

ஜனவரி 30 : ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 31: மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம்)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனவரி 2022-ல் இரண்டு தேசிய விடுமுறைகளான புத்தாண்டு தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜனவரி 2, ஜனவரி 9, ஜனவரி 16, ஜனவரி 23 மற்றும் ஜனவரி 30 ஆகிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை இருக்கும்.

மேலும், ஜனவரி 8, ஜனவரி 22 மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

Bank (Representational Image)
Bank (Representational Image)

மற்ற விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை விடப்படும். அந்த தினங்களில் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் வங்கிகள் செயல்படாது.

தமிழகத்தில் மட்டும் பொது விடுமுறை நாள்களோடு சேர்த்து பொங்கல், தைப்பூசம் விடுமுறைகள் சேர்த்து 12 நாள்கள் விடுமுறையாக இருக்கும்.

வங்கி விடுமுறைத் தேதியை முன்கூட்டியே தெரிந்து, திட்டமிட்டு செயல்பட்டால், பணத்துக்குப் பிரச்னை இல்லாமல் இருக்குமே!