Published:Updated:

பேசிக் மொபைல் மூலமாகவும் பணம் அனுப்பலாம்!

மொபைல் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல் பேங்க்

மொபைல் பேங்க்

பேசிக் மொபைல் மூலமாகவும் பணம் அனுப்பலாம்!

மொபைல் பேங்க்

Published:Updated:
மொபைல் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல் பேங்க்

யு.பி.ஐ (UPI) எனச் சுருக்கமாக அழைக்கப் படும் யுனைடெட் பேமென்ட் இன்டர் ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்தும் முறை தற்போது இந்தியாவில் அதிவேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. நம் நாட்டில் ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டு மானாலும் யு.பி.ஐ மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

ஆனால், நம் நாட்டில் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில், கீபேட் போன்களைப் பயன் படுத்தும் மக்களும் யு.பி.ஐ பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது நமது மத்திய ரிசர்வ் வங்கி.

பேசிக் மொபைல் மூலமாகவும் 
பணம் அனுப்பலாம்!

கீபேட் போன் வாடிக்கையாளர்கள் பயன் படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் கொண்ட தனித்துவமான `123PAY’ யு.பி.ஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் இந்தியாவில் கீபேட் போன் உபயோகிக்கும் 40 கோடி நபர்களால் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இதன்மூலம் ஒரு பில்லியன் சில்லறை பணப் பரிவர்த்தனை களைக் கூடுதலாகச் செயல்படுத்த இந்தத் தொழிநுட்பம் உதவும். வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் குறிப்பாக, கிராமப்புற மக்கள் இப்போது யு.பி.ஐ சேவைகளை அணுக முடியும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

இது குறித்த விவரங்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பயனர்கள் www.digisaathi.info என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வை இடலாம் அல்லது டிஜிட்டல் பணம் செலுத்துவது தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி கீபேட் போன் வைத்திருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்பது மிகப்பெரிய முன்னேற்றம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism