ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வேகமெடுக்க ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டங்களில் பெருவாரியான மக்கள் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் எனப் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளார்கள். மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழந்துவிடாமல் இருக்க பின் வரும் அம்சங்களை எப்போதும் மனதில்கொண்டு செயல்படுவது அவசியம்.

1. எந்தொரு வங்கியும் வாடிக்கையாளர்களை கே.ஒய்.சி அல்லது உங்களது வங்கி தொடர்பான தகவல்களைத் தொலைபேசி வாயிலாக அல்லது குறுஞ்செய்தி மூலமாகக் கேட்காது.
2. எந்தவொரு வலைதளத்தையும் பயன்படுத்தும் முன் https:// என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு பயன்படுத்த வேண்டும்.
3. யாராவது உங்களைத் தொடர்புகொண்டு உங்களின் வங்கிக் கணக்கு விவரம் அல்லதுஓ.டி.பி கேட்டால் கண்டிப்பாகப் பகிர வேண்டாம்.
4. உங்களின் இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றவும்.
5. ஒரே பாஸ்வேர்டுகளை மற்ற சில வலைதளங் களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
6. சைபர் க்ரைம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை 155260 இலவச எண்ணில் உடனடியாகப் புகார் அளிக்கவும்.