Published:Updated:

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அதைக் குறைப்பதால் யாருக்கு லாபம்?

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!

மக்களிடம் பணப்புழக்கம் குறையும்போதும், தொழிற்துறையில் சுணக்கம் ஏற்படும்போதும் ரெப்போ வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் குறைக்கப்படும்.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அதைக் குறைப்பதால் யாருக்கு லாபம்?

மக்களிடம் பணப்புழக்கம் குறையும்போதும், தொழிற்துறையில் சுணக்கம் ஏற்படும்போதும் ரெப்போ வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் குறைக்கப்படும்.

Published:Updated:
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!
ஒரே ஆண்டில் 5-வது முறை!
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ஏன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை அடிக்கடி குறைக்க வேண்டும், ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதால் சாமானிய மக்களுக்கு என்ன பயன் என்பதை இங்கே பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதம்

Reserve Bank of India
Reserve Bank of India

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுப்பதற்கான பணத்தை இன்னொரு வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்பு நிதியாகப் (Deposits) பெறுகின்றன. அதற்கு அந்த வாடிக்கையாளருக்கு வட்டி (Interest) வழங்குகின்றன. ஆனால், கடன் வழங்குவதற்கு இந்த வைப்புநிதிகளின் (Deposits) மூலம் பெறப்பட்ட பணம் மட்டும் போதாது. அதனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால (Short Term Loan) மற்றும் நீண்ட காலக் கடன்களை (Long Term Loan) பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை (Interest) வங்கிகளுக்கு விதிக்கின்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே, ரெப்போ ரேட் (Repo Rate) ஆகும். அதே போல் நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி, பேங்க் ரேட் (Bank Rate) எனப்படும். உதாரணத்துக்கு, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 5 சதவிகிதம் என நிர்ணயித்தால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்கு 5 சதவிகிதம் வட்டியைச் செலுத்த வேண்டும்.

கடந்த பிப்ரவரி 2019-லிருந்து ரெப்போ வட்டி விகிதத்தை 1.10 சதவிகிதம் குறைத்திருக்கிறது. புதிய நடைமுறைகள் அறிமுகமான அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 5-வது முறையாக மீண்டும் 0.25 சதவிகிதம் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. அதனால் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைந்து 5.15 சதவிகிதமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் குறைக்க வேண்டும்?

மக்களிடம் பணப்புழக்கம் குறையும்போதும், தொழிற்துறையில் (Industry) சுணக்கம் ஏற்படும்போதும் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்து வெளியிடும். ரெப்போ ரேட் குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும். குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பதால் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டினை வங்கியிலிருந்து கடனாகப் பெறுவார்கள். இதேபோல் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, அவர்கள் அதிக அளவில் தொழில்துறை சார்ந்த பொருள்களை (Car, Cement, Steel, Electrical & Electronics & etc) வாங்குவார்கள். இதனால் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்கும், மக்களிடம் பணப்புழக்கம் கூடும்.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம்

எம்.சி.எல்.ஆர் Vs ரெப்போ ரேட்

தற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது, தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன.

ரிசர்வ் வங்கி தன்னிடம் கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டியைக் குறைக்கும்போது, அதனால் பலன் பெறும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டிகளைக் குறைக்க வேண்டியது அவசியம். ஆனால், ரெப்போ வட்டி விகிதத்தைக் கடந்த பிப்ரவரி 2019-லிருந்து 1.10% குறைத்தும், வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருந்தன.

இனி எம்.சி.எல்.ஆர் முறையில் இல்லாமல் ரெப்போ ரேட் அடிப்படையில்தான் தனிநபர் கடன் மற்றும் சிறு கடன்களுக்கான வட்டி (வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் முதலானவை), சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவை கணக்கிடப்பட வேண்டும். இந்த நடைமுறையை அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அனைத்து வங்கிகளும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
சக்திகாந்த தாஸ், ஆளுநர், ரிசர்வ் வங்கி.

அதனால், இனி ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவிகிதத்தைக் குறைத்தால், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் குறைக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் கடனுக்கான வட்டியும் உயரும்.

சாமானியர்களுக்கு என்ன பயன்?

ஒரு வருட எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்பட்டால், வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்படும். ஆனால், பொது அளவுகோளின்படி வட்டி நிர்ணயம் செய்யும் முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், கடனுக்காகக் கட்டும் மாத தவணையிலும் மாற்றங்கள் இருக்கும்.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம்

வழக்கமான எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் மாத தவணை நிலையாக இருக்கும். ஏனெனில், வங்கிகள் மாத தவணையில் மாற்றங்கள் செய்யாமல், கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. நீங்கள் கோரிக்கை செய்தால் மட்டுமே அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகித முறையில் ஒவ்வொரு மாதத்துக்கான வட்டியும் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism