ஆயுள் காப்பீடு என்றாலே நம்முடைய நினைவுகளுக்கு வருவது எல்.ஐ.சிதான். ஆனால், எல்.ஐ.சி-யைப் பின்னுக்குத் தள்ளி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதை எழுதும்போது, எல்.ஐ.சி-யின் சந்தை மூலதனத்தின் மதிப்பு 4,36,519.72 கோடி. ஆனால், எஸ்.பி.ஐ-யின் சந்தை மூலதன மதிப்பு முறையே 4,56,984.74 கோடி…
பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எஸ்.பி.ஐ ஏழாவது மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்நிலையில், முன்னிலையில் இருந்த எல்.ஐ.சி சற்று சரிந்து தற்போது எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
மே 17-ம் தேதி இப்பட்டியலிடப்பட்டதில் இருந்து, எஸ்.பி.ஐ-யின் சந்தை மூலதனம் சுமார் 36,367 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதே கால அளவில் எல்.ஐ.சி-யின் சந்தை மதிப்பு 1.15 டிரில்லியன் குறைந்துள்ளது. இத்தரவுகளின் அடிப்படையில், எல்.ஐ.சி-யின் பங்குகள் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், எஸ்.பி.ஐ-யின் பங்குகள் 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் ஏமாற்றத்தைக் கொடுத்ததையடுத்து, இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஆரம்ப பொது வழங்கல் எனப்படும் ஐ.பி.ஓ பட்டியல் விலையில் இருந்து சுமார் 20 சதவிகிதம் குறைந்தது. இதற்கு மாறாக எஸ்.பி.ஐ-யின் பங்கு விலையானது இந்தாண்டு 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எஸ்.பி.ஐ-யின் வளர்ச்சி வங்கி துறையில் ஒரு மாற்றமே!