Published:Updated:

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கட்டண விகிதங்களில் மாற்றம்!

வங்கியில் போதிய பணமில்லாததால் பரிவர்த்தனை கேன்சல் செய்யப்பட்டால், 20 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

SBI ATM
SBI ATM

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சேவைக் கட்டண விகிதங்களில் அக்டோபர் 1 முதல் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் சராசரி மாதாந்தரத் தொகையின் அடிப்படையில், இலவச ஏடிஎம் பயன்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாதம் சராசரி இருப்புத்தொகை ரூ.25,000 வரை இருப்பவர்களுக்கு, எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் மாதத்துக்கு 5 முறையும், மெட்ரோ நகரங்களில் மற்ற வங்கி ஏடிஎம்-களில் 3 முறையும், பிற நகரங்களில் மற்ற வங்கி ஏடிஎம் -களில் 5 முறையும் இலவசமாக எடுக்க அனுமதிக்கப்படும்.

ATM
ATM

மாதம் சராசரி இருப்புத்தொகை 25,000 ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக எஸ்.பி.ஐ ஏடிஎம்மைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் இலவச ஏடிஎம் பயன்பாட்டு எண்ணிக்கை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் 3 பரிவர்த்தனைகள்வரை இலவசம். மற்ற நகரங்களில் 5 பரிவர்த்தனைகள்வரை இலவசம் என்ற விதிமுறை அப்படியே தொடர்கிறது.

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-மில் இருந்து வந்த கள்ள நோட்டுகள்!- மிரண்ட மின்வாரிய ஊழியர்

ஏடிஎம் கார்டுலெஸ் பரிமாற்றத்துக்கு சேவைக்கட்டணம் ரூ.22 + ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாயைவிடக் குறைவாக இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம்-களைப் பயன்படுத்தினால் ரூ.5 + ஜிஎஸ்டி. முதல் ரூ.20 + ஜிஎஸ்டி வரை அபராதமாக வசூலிக்கப்படும். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம் -களைப் பயன்படுத்தினால், ரூ.50 + ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.

ATM
ATM

அபராதத் தொகை

மாத சராசரி இருப்புத்தொகையை (AMB) பராமரிக்காதவர்களுக்கான அபராதத்தொகையை, சதவிகித அடிப்படையில் வகுத்துள்ளார்கள். மெட்ரோ & நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு, மாத சராசரி இருப்புத்தொகையை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, ரூ.10 + ஜிஎஸ்டி, 50 - 75 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, ரூ.12 + ஜிஎஸ்டி, 75 சதவிகிதத்துக்கு மேல் குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, ரூ.15 + ஜிஎஸ்டி அபராதமாக விதிக்கப்படும்.

வங்கியில் போதிய பணமில்லாததால் பரிவர்த்தனை கேன்சல் செய்யப்பட்டால், 20 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். சிறிய நகர்ப்புறங்களுக்கு மாத சராசரி இருப்புத்தொகை 2,000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு ரூ.7.50 + ஜிஎஸ்டி, 50 - 75 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, 10 ரூபாய் + ஜிஎஸ்டி, 75 சதவிகிதத்துக்கு மேல் குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு,12 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதமாக விதிக்கப்படும்.

SBI
SBI
`இனி டெபிட் கார்டு கிடையாது... டிஜிட்டல் மயமாகும் பணப்பரிவர்த்தனை!’ - எஸ்.பி.ஐ அதிரடி

கிராமப்புறங்களுக்கு மாத சராசரி இருப்புத்தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, 5 ரூபாய் + ஜிஎஸ்டி, 50 - 75 சதவிகிதம்வரை குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, 7.50 ரூபாய் + ஜிஎஸ்டி, 75 சதவிகிதத்துக்கும்மேல் குறைவாக மெயின்டெய்ன் செய்பவர்களுக்கு, 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதமாக விதிக்கப்படும். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் 1 லட்சம்வரை இருப்பவர்களுக்கு, 15 இலவச ஏடிஎம் பரிமாற்றம் அனுமதிக்கப்படும். அதற்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, சேவைக்கட்டணமாக 50 ரூபாய் + ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சராசரி இருப்புத்தொகை உள்ளவர்களுக்கு, முழுமையாக இலவச பரிவர்த்தனை அனுமதிக்கப்படும்.