Published:Updated:

இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புத்தாண்டுப் பரிசு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ( vikatan )

புதிதாக வீடு வாங்குவோருக்கான வீட்டுக்கடன் வட்டி விகிதம் இனிமேல் ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த 8.15 சதவிகிதத்திலிருந்து 0.25% குறைக்கப்பட்டுள்ளது.

இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புத்தாண்டுப் பரிசு!

புதிதாக வீடு வாங்குவோருக்கான வீட்டுக்கடன் வட்டி விகிதம் இனிமேல் ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த 8.15 சதவிகிதத்திலிருந்து 0.25% குறைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ( vikatan )

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி விகிதம் 0.25% குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8.05% என்ற வட்டி விகிதம் 7.8% ஆகக் குறைகிறது. இந்த வட்டி விகிதக்குறைப்பு, நாளை புத்தாண்டு தினம் முதலாகச் செயல்பாட்டுக்கு வருகிறது.

வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்
vikatan

இந்த வரி குறைப்பின் பலன், வீட்டுக்கடன் வாங்கியோர் மற்றும் மைக்ரோ, சிறு, குறு தொழில்களுக்காக வங்கிக்கடன் பெற்றவர்களுக்குச் சென்று சேரக் கூடும். அவர்களுக்கு தற்போதுள்ள வங்கிக்கடன் வட்டியானது 0.25% குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிதாக வீடு வாங்குவோருக்கான வீட்டுக்கடன் வட்டி விகிதம் இனிமேல் ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த 8.15 சதவிகிதத்திலிருந்து 0.25% குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் உள்ளிட்டவைகளைப்பொறுத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வங்கிகளின் வட்டி விகிதத்தில் தேவைப்படும் மாறுதல்கள் செய்யப்படுவது வழக்கம்.

வீட்டுக்கடன்
வீட்டுக்கடன்
vikatan

தற்போது ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக உள்ளது. இந்த விகிதத்திலிருந்து தற்போது 2.65% அதிகரிக்கப்பட்டு 7.8 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியாக உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அதன் துணை வங்கிகள் இணைப்புக்குப்பிறகு தற்போது ஓரளவு நல்ல நிலைக்குத் திரும்பிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism