Published:Updated:

வார்த்தைகள் மாறலாம்; வாராக்கடன் வசூல் ஆகுமா?

கடன் தள்ளுபடி
பிரீமியம் ஸ்டோரி
கடன் தள்ளுபடி

இம்முறை வழங்கப்பட்டுள்ள தள்ளுபடியில் தொழிலதிபர்களுக்கு சலுகைகாட்டும் நோக்கில் மிகப்பெரிய அளவில் செய்திருப்பதாகத் தெரிகிறது.

வார்த்தைகள் மாறலாம்; வாராக்கடன் வசூல் ஆகுமா?

இம்முறை வழங்கப்பட்டுள்ள தள்ளுபடியில் தொழிலதிபர்களுக்கு சலுகைகாட்டும் நோக்கில் மிகப்பெரிய அளவில் செய்திருப்பதாகத் தெரிகிறது.

Published:Updated:
கடன் தள்ளுபடி
பிரீமியம் ஸ்டோரி
கடன் தள்ளுபடி
‘மொத்தம் 68,607 கோடி ரூபாய்... நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 பெரும்பணக்காரர்களின் கடன் தள்ளுபடி’ - கொரோனாவைத் தாண்டியும் சென்ற வாரம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் அலசப்பட்ட தலைப்புச் செய்தி இதுதான்.

‘யார் சொன்னது கடன் தள்ளுபடி என்று, அது கடன் ஒத்திவைப்பு தான்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி ட்விட்டரில் தாமரைக் கனவு காணும் சாதாரண காவித்தொண்டன் வரை எதிர்ப்பாட்டு, எசப்பாட்டு பாடினார்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என்று இருவரை அணுகினேன்.

தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ஆவேசத்துடன் ஆரம்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“முதலில் இது தள்ளுபடியே அல்ல. ரைட் ஆஃப் (write off) என்பது தள்ளிவைப்பு, வேவிங் ஆஃப் (waiving off) என்பதுதான் தள்ளுபடி. ரைட் ஆஃப் என்பதிலும் புருடன்ஷியல் ரைட் ஆஃப், ஆக்டிவ் ரைட் ஆஃப் மற்றும் ஒன் டைம் செட்டில்மென்ட் என மூன்று வகை இருக்கிறது. தற்போது 68,607 கோடி ரூபாய் கடன்களில் செய்யப்பட்டிருப்பது புருடன்ஷியல் ரைட் ஆஃப் என்று ரிசர்வ் வங்கியே குறிப்பிட்டுள்ளது. இப்போது செய்யப்பட்டுள்ள கடன் தள்ளிவைப்பில், இவர்களின் கடன்களுக்குச் சமமான சொத்துகள் இருக்கின்றன. அவை மீட்கப்படும். இதில் காங்கிரஸ் குறிப்பிடும் முக்கிய நபர்களான நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி ஆகிய மூவரின் 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன. அவர்களை லண்டனிலிருந்து கொண்டுவருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் நடந்துகொண்டி ருக்கின்றன. மோடியின் ஆட்சியில்தான் வங்கி மோசடியைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வாராக்கடன்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2019, மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் மட்டும், மொத்தம் 1,17,000 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ள வாராக்கடன்களும் ஒரு பைசா பாக்கியில்லாமல் வசூலிக்கப்படும். இவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸும், ராகுல் காந்தியும் வேண்டுமென்றே அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

வார்த்தைகள் மாறலாம்; வாராக்கடன் வசூல் ஆகுமா?

ஆனால் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ, கே.டி.ராகவன் கருத்தில் இருந்து முற்றிலும் முரண்படுகிறார்.

“ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய தள்ளுபடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை வழங்கப்பட்டுள்ள தள்ளுபடியில் தொழிலதிபர்களுக்கு சலுகைகாட்டும் நோக்கில் மிகப்பெரிய அளவில் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏன் இவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. உதாரணத்துக்கு, ருச்சி சோயா நிறுவனத்தை பதஞ்சலி நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் பதஞ்சலி வாங்குவதற்கு முன்பாகவே ருச்சி சோயாவின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதில் பதஞ்சலி நிறுவனத்துக்கு சலுகை காட்டியிருப்பதாகவே கருத முடிகிறது. இம்மாதிரியான தள்ளுபடிகளில் மீட்கப்பட்ட தொகையின் சதவிகிதம், மிகக்குறைவு. கடந்த 2014 ஏப்ரல் முதல் 2017 டிசம்பர்வரை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ள தொகை ரூ.2,72,558 கோடி. ஆனால் வசூலிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.29,343 கோடி மட்டுமே. இதுவும்கூட, கல்விக்கடன், விவசாயக்கடன் எனச் சிறிய அளவிலான கடன்களைப் பெற்றவர்களிடமிருந்தே பெரிதும் வசூலாகியுள்ளன.

அதேபோல, பெரிய நிறுவனங்களின் வாராக்கடன்களை வசூலிக்க, சட்டதிட்டங் களைக் கடுமையாக்க வேண்டுமென்று வங்கியாளர்கள் தொடர்ந்து அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 2016 பிப்ரவரியில், நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு அளித்த பரிந்துரையில், வாராக்கடன் மீட்பு நடவடிக்கையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், கடன் கொடுத்த வங்கியின் நிர்வாக இயக்குநர், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதுகுறித்து இப்போதுவரை அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. சட்டம் கடுமையானால்தான் இத்தகைய வாராக்கடன் களைக் குறைக்க முடியும். அதேபோல, வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி வெளிப்படையாக அறிவித்தால்தான் அந்த நிறுவனங்கள், வேறெந்த வங்கியிலும் மீண்டும் கடன் வாங்கி மோசடி செய்யமுடியாமல் தடுக்க முடியும். தற்போது. ‘வில்ஃபுல் டீஃபால்ட்டர்’ எனப்படும், வேண்டுமென்றே கடனைச்செலுத்தாமல் இருப்பவர்களில், வாராக்கடன் தள்ளுபடியானவர்களின் விவரங்களை மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்மூலம் பெற முடிந்திருக்கிறது. இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதால் வாராக்கடன் வைத்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்” என்றார்.

தள்ளுபடி, ஒத்திவைப்பு என்று வண்ணவண்ண வாய்ஜாலம் காட்டினாலும் பெரும் பணக்காரர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது, சாதாரண மனிதர்களின் வங்கிச்சேமிப்பே. நமது ரத்தத்தில் பணமுதலைகள் நீச்சல்குளம் அமைப்பதை நிச்சயம் தடுக்க வேண்டும்.