Published:Updated:

`தனிப்பட்ட நட்பு வேறு... வணிக உறவு வேறு' - HDFC தப்பிய ரெண்டு சம்பவங்கள்!

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி

இந்த வங்கியின் 25-ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகத்தின் பெயர் `ஹெச்.டி.எஃப்.சி 2.0 ஃப்ரம் டான் டு டிஜிட்டல்'

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுக்காலமாக ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரத்தில் எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளர்ந்துவரும் வங்கி... ஹெச்.டி.எஃப்.சி (HDFC).

இந்த வங்கியைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பு, உலக அளவில் ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுக்காலம் இருக்கும் பெருமைக்குரியவர் இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரி. தனது 70-ம் ஆண்டில் நுழையவிருக்கும் இவர் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். இவருக்குப் பிறகு இந்த வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு யார் வருவார் என்பது வங்கித் துறையினரிடையே ஒரு பேசு பொருளாக இருந்துவருகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னெடுப்புகளை இந்த வங்கி இன்றும் செய்துவருகிறது. ''கூடிய விரைவில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்தியாவின் `அலிபாபா' ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்று ஆதித்யா கூறுகிறார்.

ஆரம்பத்தில் கார்ப்பரேட் சேவைகளை மட்டும் வழங்கிவந்த இந்த வங்கி, நாளடைவில் ரீடெயில் சேவைகளையும் வழங்க ஆரம்பித்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்க ஆரம்பித்தது. எந்தவொரு கட்டத்திலும் விதிகளையும் நிபந்தனைகளையும் இந்த வங்கி மீறியதில்லை.

ஒருமுறை ஆதித்யாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் `அரசராக' இருந்தவர், கடனுக்காக இந்த வங்கியை அணுக, குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பது சிரமம் எனத் தெரிவிக்க, `அரசர்' அதை விரும்பவில்லை.

உடனே ஆதித்யாவைப் பார்த்து, '`ஆதித்யா, நீங்கள் ஒரு நல்ல வங்கியாளர் என்று நான் நினைத்தேன். ஆனால், நீங்கள் இன்னும் அது குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும்போல் தெரிகிறது'' எனக் கூறியிருக்கிறார். அதற்கு ஆதித்யா, '`யாருக்கு வங்கிகளின் செயல்பாடு தெரியும், யாருக்குத் தெரியாது என்பதைக் காலம் பதில் சொல்லும்” என்று அமைதியாகக் கூறி, கடன் கொடுக்க மறுத்துவிட்டார்.

இன்னொரு சம்பவம், பிரபல வைர வியாபாரி, மிகவும் நயமாகப் பேசக்கூடியவர்; 2018-ம் ஆண்டு நாட்டை விட்டு ஓடிச் சென்றவர். அவர் 2017-ம் ஆண்டு ஆதித்யாவை அணுகி, வங்கியுடன் இணைந்து வைர வியாபாரம் செய்யக் கூட்டாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாம் என யோசனை சொல்ல, அதற்கு ஆதித்யா, ''எங்களுக்கு வங்கி நடத்தத் தெரியும். ஆனால், `வைர' வியாபாரம் தெரியாது'' என்று `கழற்றி' விட்டதால் இன்றைக்கு இந்த வங்கி பெரும் மோசடியிலிருந்தும் தப்பித்தது.

ஆதித்யாவைப் பொறுத்தவரை, 'தனிப்பட்ட நட்பு என்பது வேறு... வணிக உறவு என்பது வேறு.' இதில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் தெளிவாக இருந்துவருகிறார்.

- இந்த வங்கியின் 25-ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகத்தின் பெயர் `ஹெச்.டி.எஃப்.சி 2.0 ஃப்ரம் டான் டு டிஜிட்டல்' (HDFC 2.0 From Dawn To Digitial). இதை எழுதியிருப்பவர் பிரபல பத்திரிகையாளர் தமால் பந்தோபாத்யாய் (Tamal Bandyopadhyay).

'ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அதிரடி செயல்பாடுகளின் பின்னணி', 'ஆதித்யா பூரி எப்படிப்பட்டவர்?' என்பன உள்ளிட்ட அம்சங்களை விவரிக்கும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க https://bit.ly/2OgYOb6 > தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

தனியார் வங்கிகளில் தலைசிறந்த வங்கி! - ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வளர்ச்சிப் பாதை!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு