Published:Updated:

மாதச் சம்பளம் ரூ.89 லட்சம்! - முதலிடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவர்

தெ.சு.கவுதமன்

கடந்த 2018-19 நிதியாண்டில் இவரது அடிப்படை மாதச் சம்பளம் 89 லட்சம் ரூபாய். இது, இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆக்சிஸ் வங்கித் தலைவரைவிட மூன்று மடங்கு அதிகம்.

ஆதித்யா பூரி
ஆதித்யா பூரி

இந்தியாவிலுள்ள வங்கிகளின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களில், ஹெச்டிஎஃப்.சி வங்கியின் சி.இ.ஓ ஆதித்யா பூரி அதிகமாக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளார். இவர், 25 ஆண்டுகளுக்கு முன், அதாவது ஹெச்.டி.எஃப்.சி தொடங்கியதிலிருந்தே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்துவருகிறார். கடந்த 2018-19 நிதியாண்டில் அவரது அடிப்படை மாதச்சம்பளம் 89 லட்சம் ரூபாய். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி தலைவரைவிட மூன்று மடங்கு சம்பளம் அதிகம் பெறுகிறார் ஆதித்யா.

ஆதித்யா பூரி
ஆதித்யா பூரி

ஆக்சிஸ் வங்கியின் சி.இ.ஓ அமிதாப் சவுத்ரியின் மாத அடிப்படைச் சம்பளம் 30 லட்சம் ரூபாய். மூன்றாவது இடத்தில் இருக்கும் கோட்டக் மஹிந்திரா வங்கியின் சி.இ.ஓ உதய் கோட்டக், மாதச் சம்பளமாக 27 லட்சம் ரூபாய் பெறுகிறார்.

அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாரின் மாதச்சம்பளம் 26 லட்சம் ரூபாயாக இருந்தது. அவர் பணி விலகிய பின் சி.இ.ஓ பொறுப்புக்கு வந்த சந்தீப் பக்‌ஷி மாதச் சம்பளமாக 22 லட்சம் ரூபாய் பெறுகிறார். இண்டஸ்இண்ட் வங்கியின் தலைவர் ரொமேஷ் சொப்தியின் மாத அடிப்படைச் சம்பளம் 16 லட்சம் ரூபாய்.

ஹெச்டிஎஃப்.சி வங்கி
ஹெச்டிஎஃப்.சி வங்கி
vikatan

நிறுவனத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடலில் நிறுவனத் தலைவர்களின் பங்களிப்பை வைத்து, அவர்களுக்கான மாத அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சி.இ.ஓ-க்களின் இழப்பீடு, போனஸ் போன்றவற்றை அந்த நிறுவனத்தின் லாபகரமான செயல்பாடு மற்றும் வாராக்கடன் மதிப்பீடு போன்றவற்றின்மூலம் நிர்ணயிக்கிறார்கள். சில நேரம் ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் சி.இ.ஓ இழப்பீடு நிறுத்தப்படுவதும் உண்டு.