Published:Updated:

தனியார் வங்கிகள் சிக்கலில் தத்தளிப்பதன் பின்னணி என்ன?

தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டியிருக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

வங்கிகள்
வங்கிகள்

இந்தியப் பொருளாதாரத்தை உலுக்கிவரும் வாராக்கடன் பிரச்னை, பொதுத்துறை வங்கிகள் மட்டுமே சம்பந்தப்பட்டது போலவும் வாராக்கடன் பிரச்னைக்கு ஒரே தீர்வு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பதுபோலவும் அண்மைக்காலம் வரை பலரும் பேசிவந்தனர். ஆனால், தனியார் துறை வங்கிகளில் சமீபகாலமாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, வங்கி தனியார்மயத்தைத் தூக்கிப்பிடித்தவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2ol6FuT

தவிர, தனியார் வங்கிகளின் கடன் மேலாண்மை குறித்துப் பல கேள்விகளையும் எழுப்பி, இதற்கெல்லாம் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவருவது எப்போது என்று பலரும் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம், தனியார் வங்கிகளில் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் முறைகேடுகளால், அவற்றில் முதலீடு செய்துள்ள பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, அந்த வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டியிருக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

'ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிகவும் பலவீனமாக இருக்கின்றன இந்திய வங்கிகள்' என்று எச்சரித்திருக்கிறது மூடீஸ் நிறுவனம்.

லஷ்மி விலாஸ் பேங்க்: 2018-19-ம் ஆண்டிற்கான லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து மத்திய வங்கி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கடந்த 27.09.2019-ம் தேதி, அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்திற்குள் (Prompt Corrective Action) கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு வணிக வங்கியின் மூலதன விகிதாச்சாரம் (Capital to Risk-weighted Assets Ratio), வாராக்கடன் மற்றும் லாப விகிதம் ஆகிய முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகள், அபாய கட்டத்தைத் தாண்டும்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கியானது தனது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரும்.

தற்போதைய உத்தரவின்படி, லஷ்மி விலாஸ் பேங்கின் அன்றாட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. என்றாலும், மேற்சொன்ன முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வரை, அந்த வங்கியால் பெரும் கடன்கள் எதையும் வழங்க முடியாது. மேலும், குறிப்பிட்ட துறைகளில் அதிகப்படி யாக வழங்கப்பட்டுள்ள கடன்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புதிய கிளைகளைத் துவக்கு வதற்கும் டிவிடெண்ட் வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெற வேண்டியிருக்கும்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தந்த அதிர்ச்சி விலகுவதற்குள், மற்றொரு திருப்ப மாக, டெல்லி காவல்துறையின் பொருளா தாரக் குற்றத் தடுப்புப்பிரிவு, லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தின் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

வங்கிகள்
வங்கிகள்

இதனிடையே, பி.எம்.சி வங்கி வீழ்ச்சியின் பின்னணித் தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. பல போலியான கணக்குகளின் வாயிலாக சுமார் ரூ.4,355 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில், 'ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிகவும் பலவீனமாக இருக்கின்றன இந்திய வங்கிகள்' என்று எச்சரித்திருக்கிறது மூடீஸ் நிறுவனம்.

> தனியார் வங்கிகளின் பணப் பரிவர்த்தனையில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து சந்தையில் வதந்திகள் பரவிட, யெஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், ஆர்.பி.எல் பேங்க் போன்ற தனியார் வங்கிகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சியடையத் தொடங்கின. இது தொடர்பான பின்னணி, ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள், நம்பிக்கையை எப்படி மீட்டெடுக்க முடியும் என்பது குறித்து விரிவாக அலசும் நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரை > லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்... தத்தளிக்கும் தனியார் வங்கிகள்! https://www.vikatan.com/news/general-news/private-banks-like-lakshmi-vilas-bank-and-yes-bank-are-in-trouble

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |