Published:Updated:

ரெப்போ / ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்கள் உங்கள் வங்கிக் கடன்களை எவ்வாறு பாதிக்கும்?

Loan ( Image by F1 Digitals from Pixabay )

ரெப்போ வட்டி குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும்.

ரெப்போ / ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்கள் உங்கள் வங்கிக் கடன்களை எவ்வாறு பாதிக்கும்?

ரெப்போ வட்டி குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும்.

Published:Updated:
Loan ( Image by F1 Digitals from Pixabay )
இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ஆளுநர் சக்திகாந்த தாஸ், ``ரெப்போ மற்றும் ரிசர்வ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே இருக்கும் 4% மற்றும் 3.75% வட்டி விகிதங்களே தொடரும்" என அறிவித்திருக்கிறார். வீட்டுக்கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பற்றித் தெரியும். அது என்ன ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்?

ரெப்போ வட்டி விகிதம் என்றால்... 

வங்கிகளிடம் போதிய பணம் இல்லாதபோது, அவை தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியிடம் வைத்து, குறுகிய கால (Short Term Loan) மற்றும் நீண்ட காலக் கடன்களைப் (Long Term Loan) பெறுகின்றன. இந்தக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி, ஒரு குறிப்பிட்ட வட்டியை (Interest) வங்கிகளுக்கு விதிக்கிறது. குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே, ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் என்ன பயன்?

ரெப்போ வட்டி குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும். குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பதால், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டை வங்கியிலிருந்து கடனாகப் பெற வாய்ப்பு உருவாகும்.

இதேபோல் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை (உதாரணமாக, கார், வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரானிக் பொருள்கள், சிமென்ட் போன்றவை) வாங்குவார்கள். இதனால் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்து, வேலைவாய்ப்பு உருவாகும். இதனால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

RBI
RBI

உதாரணத்துக்கு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4% என நிர்ணயித்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்கு 4% வட்டியைச் செலுத்த வேண்டும். ரெப்போ விகிதம் உயரும்போது, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி விகிதமும் உயரும். இதனால் வங்கிகள் மக்களுக்குக் கொடுக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதமும் உயரும். ரெப்போ விகிதம் குறையும்போது, வங்கிகள் மக்களுக்குக் கொடுக்கும் வாகனக் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் எனப் பெரும்பாலான கடன்களின் வட்டி விகிதமும் குறையும். இதுதான் ரிசர்வ் வங்கியின் விதிமுறை.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

டெபாசிட்தாரர்கள் தங்களிடம் வைத்திருக்கும் பணத்தில் கடனாகக் கொடுத்தது போக மீதமுள்ள பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் தந்து வைத்திருக்கும். அப்படி வைத்திருக்கும் பணத்துக்கு ரிசர்வ் வங்கி வட்டி தரும். அந்த வட்டி விகிதம்தான் `ரிவர்ஸ் ரெப்போ ரேட்' (Reverse Repo Rate) ஆகும்.

``ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருந்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து அதிகமான பணத்தை இருப்பு வைத்திருக்கும். அதனால் மக்களுக்குக் கொடுக்கப்படும் கடன் அளவு குறைய வாய்ப்பு உருவாகும். இதனால் வங்கிகள் கடன் தருவது குறைந்து, வங்கிகளின் வருமானம் குறையும். இதனால் அதிக வட்டிக்கு தொழில் துறையினர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஆர்.கணேசன்
ஆர்.கணேசன்
vikatan

இன்றைய நிலையில், தொழில் இல்லை, வருமானம் இல்லை என்பதால் மக்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி முற்றிலுமாகக் குறைந்திருக்கிறது. அதனால் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள அதிக அளவில் இருப்பு வைக்கவே முனைப்பு காட்டி வருகின்றன. இருப்பு வைப்பதைவிட, மக்களுக்குக் கடன் மூலமாகப் பணம் போய்ச் சேர வேண்டியது முக்கியம் என ரிசர்வ் வங்கி நினைப்பதால், வங்கிகளை அதிகமாகக் கடன் கொடுக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி மறைமுகமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

`ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைப்பதன் மூலம், மக்களுக்குக் கடன் கொடுத்து அதன் மூலமாக, அதிக வருமானத்தை ஈட்ட வங்கிகள் முனைப்பு காட்டும். அதனால் மக்கள் கையிலும் நாட்டிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி நினைக்கிறது" என்றார் வங்கித்துறை சார்ந்த அதிகாரியான ஆர்.கணேஷன்.

கடந்த திங்கள்கிழமை அன்று பட்ஜெட்டில் மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அரசுக்குத் தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்பதை ஆர்.பி.ஐ மனதில்கொண்டு வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவராமல் விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.