Published:Updated:

இந்தியாவில் எளிதாக வியாபாரம் செய்ய முடியுமா... உலக வங்கி சொல்வது என்ன?

இந்தியா, தான் மேற்கொண்ட நான்கு வியாபாரச் சீர்திருத்தங்களால், முன்னேறிவரும் முதல் பத்து நாடுகளில், மூன்றாவது முறையாக இடம் பிடித்துள்ளது.

உலக வங்கி
உலக வங்கி

எளிதாக வியாபாரம் செய்யும் சூழ்நிலை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்தத் தர வரிசைப்பட்டியலில், சென்ற ஆண்டு 77-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்தாண்டு 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், 50-வது இடத்திற்குள் வரவேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்து இருந்தது.

உலக வங்கி
உலக வங்கி

இத்தரவரிசைப் பட்டியல், ஒரு நாட்டில் வியாபாரம் ஆரம்பிக்க எதிர்கொள்ள வேண்டிய சட்டத் திட்டங்களின் எண்ணிக்கை, கட்டடம் கட்ட மற்றும் மின்சார வசதிக்கு அனுமதி பெறுதல், சொத்துகளைப் பதிவு செய்தல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், வரி கட்டுதல், எல்லை தாண்டி வியாபாரம் செய்தல், கடன் பெறுதல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல், வியாபாரத்தில் திவாலானதற்கான மனுவை விரைந்து முடிவெடுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வியாபாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால், எளிதாக வியாபாரம் செய்யும் சூழ்நிலை கொண்ட நாடு என இந்த ஆண்டு 63–வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்தியா, தான் மேற்கொண்ட நான்கு வியாபாரச் சீர்திருத்தங்களால், முன்னேறிவரும் முதல் பத்து நாடுகளில், மூன்றாவது முறையாக இடம் பிடித்துள்ளது.
நீடித்த முன்னேற்றம் இருந்தாலும் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதில் 163-வது இடத்திலும், சொத்துப் பதிவதில் 154-வது இடத்திலும் உள்ளது இந்தியா.

சொத்துகளைப் பதிவதற்கு ஆகும் காலம் 58 நாள்கள். சொத்தைப் பதிவு செய்யும் செலவு சொத்தின் மதிப்பில் 7.8 சதவிகிதமாகவும், வியாபாரச் சர்ச்சைகளை முடிப்பதற்கு 1,445 நாள்களாகவும் இருப்பது, OECD அமைப்பில் உள்ள  நாடுகளைவிட அதிகமாக உள்ளது. இத்தகைய காரணங்கள் இந்தியாவிற்குப் பின்னடைவைத் தருவதாகக் கருதப்படுகிறது.

சவுதி அரேபியா 62-வது இடத்திலும், ஜோர்டான் 75-வது இடத்திலும், டோகா 97-வது இடத்திலும், பக்ரைன் 43-வது இடத்திலும், தஸிகிஸ்தான் 106-வது இடத்திலும், பாகிஸ்தான் 108-வது இடத்திலும், குவைத் 83-வது இடத்திலும், சீனா 31-வது இடத்திலும், இந்தியா 63-வது இடத்திலும், நைஜீரியா 13 ம் இடத்திலும் உள்ளன. இந்தப் பத்து நாடுகளும் எளிதாக வியாபாரம் செய்யும் சூழ்நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

இந்தத் தரவரிசைப் பட்டியலில் கடந்த சில வருடங்களாக இந்தியா முன்னேறி வருவது மிகப்பெரிய சாதனை. மத்திய, மாநிலத் தலைவர்களின் ஈடுபாடும், தொடர் முயற்சியும் இந்தியாவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முன்னேற்றம் அடையச் செய்துள்ளது. இந்த முயற்சியைக் காப்பாற்றி, மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்று இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமத் கூறியுள்ளார்.

உலக வங்கி
உலக வங்கி
`நீர் மாசுபாட்டால் பொருளாதார வளர்ச்சி குறையும்!' - உலக வங்கி
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் விரைந்து செயல்படக்கூடிய நாடாக இந்தியா தொடர்ந்து நான்காம் முறையாக இடம் பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் இந்தியா 68-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்றுமதி-இறக்குமதி போக்குவரத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரமும் குறைந்துள்ளது.
உலக வங்கி

தெற்காசிய நாடுகளில், OECD (Organization of economic co operation and development) என்ற அமைப்பில் இடம் பெற்றுள்ள, அதிக வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி அளவை விட இந்தியா மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தரவரிசைப்பட்டியலில் 50-வது இடத்திற்குள் வர இன்னும் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்த சில வருடங்கள் ஆகும்.

இந்தப் பட்டியலில், எளிதாக வியாபாரம் செய்யும் சூழ்நிலை கொண்ட நாடுகளில் நியூசிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங்  முதல் மூன்று இடங்களைப்  பிடித்துள்ளன.