Published:Updated:

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!
பிரீமியம் ஸ்டோரி
மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

Published:Updated:
மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!
பிரீமியம் ஸ்டோரி
மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

தினெட்டு ஆண்டுகளுக்குமுன் மதுரையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் இன்று ஆசிய நாடுகளைத் தாண்டி, சர்வதேச அளவில் செயல்படத் தொடங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வளர்ச்சி. மதுரையில் இருந்துகொண்டு ஒரு கே.பி.ஓ (Knowledge process outsourcing) வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கிருஷ்ணன். இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது என்று அவரிடமே கேட்டோம். கடந்த 18 ஆண்டுகளான தனது தொழில் வாழ்க்கையை நம்மிடம் சொன்னார்  45 வயதான நாகராஜ்.

   அபராஜிதாவின் தொடக்கம்...

‘‘நான் மதுரை மண்ணின் மைந்தன். அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தபின், முதுகலைப்படிப்பாக சோஷியல் வொர்க் படித்தேன். தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ படித்தேன். படித்துமுடித்தவுடன் மதுரை டி.வி.எஸ் அண்டு சன்ஸ் நிறுவனத்தில் பெர்ஷனேல் ஆபீஸராக வேலை கிடைத்தது. நான்கு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தபின், அபராஜிதா நிறுவனத்தை     2000-ம் ஆண்டில் தொடங்கினோம்.             2003 முதல் அபராஜிதா முழுவேகத்தில் செயல்படத் தொடங்கிவிட்டது.

   என்னை வளர்த்தெடுத்த பரத்...

வேலைக்குச் சேர்ந்தவுடனே தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் எனக்கு வந்துவிட வில்லை. என்னைத் தொழில் செய்யத் தூண்டியது எங்கள் நிறுவனத்தின் தலைவர் பரத்கிருஷ்ண சங்கர்தான். டி.வி.எஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர் பிரிவில் நான் வேலை பார்த்தபோது, மனிதவளம் தொடர்பான பல்வேறு சட்டங்களை நடைமுறைப் படுத்தும் (Labour law compliance) வேலையைச் செய்யவேண்டியிருந்தது. அந்த வேலையை எல்லா நிறுவனங்களும் தனித்தனியாக செய்துவந்தன. இந்த வேலையை எல்லா நிறுவனங் களுக்குச்் செய்துதரும் பணியை நாம் செய்தால் என்ன என்கிற கேள்வி எனக்குள் பிறந்தது.

இந்த ஐடியாவை பரத்திடம் சொன்னபோது,  அதை முழுமையானதொரு தொழிலாக வளர்த்தெடுக்க அவர் எனக்கு வழிகாட்டினார். ஆக, என்னை ஒரு பிசினஸ்மேனாக மாற்றியது அவர்தான். என்னுடைய தொழில் பார்ட்ன ராகவும், பிசினஸ் மென்டாராகவும் அவர் எனக்கு இருந்தது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

   கம்ப்ளையன்ஸ் என்றால்...

இந்த இடத்தில் ‘கம்ப்ளையன்ஸ்’ என்றால் என்ன என்று சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு நிறுவனம் தொழில் செய்யத் தொடங்கும்போது, அரசாங்கங்களிடமிருந்து பலவகையான அனுமதிகளைப் பெறவேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனம் சூப்பர் மார்க்கெட் ஒன்றை அமைக்கவேண்டுமெனில், தொழிலாளர் மற்றும் தொழில் துறை தொடர்பான (Labour and Industrial laws) 52 வகையான அனுமதிகளை அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும். இந்த அனுமதி தொடர்பான சட்ட விதிமுறைகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறும். இந்த சட்ட அனுமதிகளை வாங்குவதுடன், குறித்த காலத்துக்கு ஒருமுறை அவசியம் புதுப்பிக்கவேண்டும். இதில் ஏதாவது ஒரு அனுமதி பெறாமல்போனால், அது சட்டப் பிரச்னையாக மாறி, அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்தமுடியாத நிலை ஏற்படும். 

நம் நாட்டில் 1990-க்குமுன் பெரிய நிறுவனங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை எனக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்பட்டு வந்தன. ஆனால், 1990-க்குப்பிறகு உள்நாட்டு நிறுவனங்கள் நாடு முழுக்க தங்கள் கிளைகளைத் திறக்கத் தொடங்கின. பல வெளிநாட்டு நிறுவனங் களும் இந்தியாவில் தொழில் தொடங்கின. இந்த நிறுவனங்களுக்குத் தொழிலாளர் மற்றும் தொழில் துறை தொடர்பான சட்ட விதிமுறை களை நடைமுறைப்படுத்தும் பணியை ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் என்று செய்து தந்தார்.  இதனால் நிறுவனங்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திணறின. இந்த வேலையை யாராவது செய்துதந்தால், நாம் பிசினஸில் கவனம் செலுத்தலாமே எனப் பல நிறுவனங்கள் நினைக்கத் தொடங்கிய நேரத்தில், அது ஒரு புதிய தொழில் வாய்ப்பாக நாங்கள் கண்டுபிடித்து, அதற்கான தீர்வைத் தர ஆரம்பித்தோம். அதாவது, தொழில் நடத்துபவர்களுக்கு அவர்கள் நடத்தும் தொழில் தொடர்பான பல்வேறு அனுமதிகளை வாங்கித் தந்து, அதை உரிய காலத்தில் புதுப்பித்துத் தருவதினால், அவர்கள் அதுபற்றிய கவலையும் இல்லாமல் முழுக் கவனத்துடன் தொழில் செய்யும் நிலை உருவானது. 

   655 கார்ப்பரேட் நிறுவனங்கள்

அபராஜிதா நிறுவனத்தை 2000-ம் ஆண்டில் ஆரம்பித்தபோது தொழிலாளர் தொடர்பான சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பணியை நாங்கள் செய்தோம். எங்களுடைய முதல் வாடிக்கையாளர், டி.வி.எஸ் மற்றும்       டி.வி.எஸ் குரூப்தான். நாங்கள் தொழில் உலகில்  காலடி எடுத்துவைக்க உதவியது இந்த நிறுவனங்கள் தான். இதன்பிறகு, அனில் அம்பானியின் தலைமையிலான இன்ஷூரன்ஸ் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளராக மாறி நாங்கள் வடஇந்தியாவுக்குச் சென்றோம். பிறகு, ஐ.டி.சி நிறுவனமும் எங்கள் வாடிக்கையாளராக மாறியதால், கிழக்கு இந்தியாவுக்குச் சென்றோம். இன்றைக்கு எங்கள் நிறுவனத்துக்கு இந்தியா முழுக்க 655 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. 1064 நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளன. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை, குஜராத் தொடங்கி அருணாசலப்பிரதேசம் வரை எல்லா நகரங்களிலும் எங்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

   மதுரைதான் எங்கள் மையம்

இந்த வளர்ச்சியை நாங்கள் சுலபமாக எட்டி விடவில்லை. 2000-ல் மதுரையில்தான் எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது, வடநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களை அணுகினால், எங்களை நம்பிக்கை இல்லாமல் பார்ப்பார்கள். எனவே, சென்னையில் தலைமை  அலுவலகத்தைத் தொடங்கி, நாங்கள் சென்னை யிலிருந்து செயல்படும் நிறுவனம் என்று காட்டிக்கொண்டோம். 2003-ல் ரிலையன்ஸ், ஐ.டி.சி எனப் பெரிய நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளராக மாறியபின், எங்களது மொத்த நிறுவனத்தையும் சென்னைக்கு மாற்றலாமா என்று யோசித்தோம். மதுரையில் பிறந்து வளர்ந்த நாங்களே இப்படிச் செய்தால், யார்தான் மதுரையில் தொழில் தொடங்குவார்கள் என்று நினைத்து, அந்த முடிவை எடுக்காமல் விட்டுவிட்டோம். எங்கள் தலைமை மற்றும் மார்க்கெட்டிங் அலுவலகம் சென்னையில் இருந்தாலும், கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பேக் ஆபீஸை மதுரையிலேயே வைத்திருக்கிறோம். அன்று நாங்கள் எடுத்தது உணர்வுபூர்வமான முடிவுதான். என்றாலும், அந்த முடிவு எங்களுக்கு வெற்றியைத் தந்தது.

   திறமைசாலிகள் நிறைய...

நாங்கள் மதுரையிலிருந்து செயல்படுவதில் எங்களுக்குப் பல வசதிகள் கிடைத்தன. உதாரணமாக, மதுரையில் ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய அலுவலகத்தை எளிதில் சென்றுவரக்கூடிய இடத்தில் அமைத்திருக்கிறோம். சென்னையில் இதேமாதிரி ஓர் அலுவலகத்தை அமைக்கவேண்டும் என்றால், நிறைய செலவு செய்திருக்க வேண்டும். அல்லது நகருக்கு வெளியே வெகுதொலைவில் அமைத்திருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமான விஷயம், மதுரை உள்பட தென் தமிழ்நாட்டில் பல நல்ல இன்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படித்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்தான் இன்று சென்னையிலும், பெங்களூரிலும், நொய்டாவிலும் உள்ள ஐ.டி அலுவலகங்களிலும், வேறு அலுவலகங்களிலும் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால், மதுரையிலேயே இருந்து மகிழ்ச்சியாக வேலை பார்ப்பார்கள் என்று நினைத்தோம். இன்று 400 பேருக்கு மதுரையில் வேலை தந்திருக்கிறோம். 600 பேர் வேலை செய்கிறமாதிரி புதிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது; இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும். இந்தியா முழுக்க ஆயிரம் ஊழியர்கள் சேகரித்துத் தரும் தகவல்களை ஒன்று திரட்டி, ஆராய்ந்து, அதைச் சீர்ப்படுத்தும் வேலையை மதுரையிலிருந்து தான்  செய்கிறோம்.

   மதுரை டு சர்வதேசம்...

நம் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்கள் எங்கள் வாடிக்கை யாளராக ஏற்கெனவே உள்ள நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர், கெய்ர்ன், சீமென்ஸ், நோக்கியா போன்ற சர்வதேச நிறுவனங் களும் எங்கள் வாடிக்கையாளராக உள்ளன. இந்தியாவைத் தாண்டி, வங்காள தேசம், பூட்டான், நேபாளம் ஆகிய வெளிநாடு களிலும் செயல்படத் தொடங்கியிருக்கிறோம். கூடியவிரைவில் ஆஸ்திரேலியா உள்பட பல வெளிநாடுகளிலும் உள்ள நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளராக மாறவிருக்கின்றன. வாடிக்கையாளர் சேவை தொடர்பான தொழில்நுட்பத்தைத் தருவதில் உலக அளவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அமெரிக்காவின் ‘சேல்ஸ்போர்ஸ்.காம்’ போல, கம்ப்ளையன்ஸ் சர்வீஸ் தருவதில் பேர்சொல்லும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என்று பேசி முடித்தார் நாகராஜ் கிருஷ்ணன்.

தெளிவான தொழில் பார்வை கொண்டிருக்கும்  நாகராஜ், அபராஜிதா நிறுவனத்தைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வார்! 

- ஏ.ஆர்.குமார்,  படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிங்!

ந்தியாவில் வளர்ந்துவரும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிங் செய்துள்ள எவர்ஸ்டோன் கேப்பிட்டல் நிறுவனம், அபராஜிதா நிறுவனத்தில் 2014-ல் முதலீடு செய்துள்ளது. தென்மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒரு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் முதலீடு செய்தது இதுவே முதல்முறை.

ஐ.டி வரைபடத்தில் மதுரை!

சி
.ஐ.ஐ அமைப்பின் மதுரை மண்டலத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் நாகராஜ். மதுரையில் இன்னும் அதிகமான ஐ.டி நிறுவனங்கள் வரவேண்டும் என்பதற்கான முயற்சியைச் செய்துவருகிறார். ‘‘மதுரையில் தற்போது 120 ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. சென்னை, கோவைக்கு அடுத்து மதுரையில் அதிகமான ஐ.டி நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மதுரையில் ஐ.டி நிறுவனங்களை நடத்துபவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் செயல்பட்டால், இன்னும் பல ஆயிரம் பேருக்கு இங்கேயே வேலை தரலாம்’’ என்றார் நாகராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism