Published:Updated:

ரயில்வே பட்ஜெட்: இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

ரயில்வே பட்ஜெட்: இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

ரயில்வே பட்ஜெட்: இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

ரயில்வே பட்ஜெட்: இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

Published:Updated:
##~##

கடந்த நான்கு வாரங்களாக மத்திய அரசின் பட்ஜெட் பற்றி பல்வேறு விஷயங்களை எப்படி புரிந்துகொள்வது என்று பார்த்தோம். இனி, வருகிற 28-ம் தேதி காலை 11.00 மணிக்கு பட்ஜெட் உரையைக் கேட்கத் தயாராவோம்.

அதற்கு முன்பு பொது பட்ஜெட்டை போல பலவகையிலும் முக்கியத்துவம்கொண்ட ரயில்வே பட்ஜெட் பற்றி இந்த வாரம் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். காரணம், பொது பட்ஜெட் ஹீரோ என்றால், ரயில்வே பட்ஜெட்டை இரண்டாம் ஹீரோ என்று சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகத்தில் நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்களில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. 12.28 லட்சம் ஊழியர்களைக்கொண்டு 64,459 கி.மீ ரயில் பாதைகளில் தினந்தோறும் 2.3 கோடி பயணிகளையும், 2.78 லட்சம் டன் சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. மேலும், இந்திய ரயில்வேயின் பயணி, சரக்கு கட்டணங்களின் வருவாய் 2010-11-ல் ரூ.94,525.46 கோடி. இது இந்திய அரசின் வரி வருவாயான ரூ.5,69,869 கோடியில் 16.5% ஆகும். எனவே, இந்திய அரசின் வருவாயில் ஆறில் ஒரு பங்குக்கு மேல் வருவாய் பெறும் இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு தனியாக பட்ஜெட் சமர்ப்பிப்பது நல்லதுதான்.

ரயில்வே பட்ஜெட்:  இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

1858-ல் துவங்கப்பட்ட முதல் இந்திய ரயில் பாதை, ஒரு முழு பெரிய இந்திய ரயில்வேயாக உருபெற்று, 1924-ல்தான் முதன்முதலாக தனி ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய ரயில்வே நாட்டின் அடிப்படை போக்குவரத்துக் கட்டமைப்பு என்ற விதத்திலும், பொருளாதார முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 அன்று ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பிரச்னைப் பட்டியல் !

இந்திய ரயில்வே துறையில் உள்ள பிரச்னைகள்தான் என்ன?

மிகத் துரிதமான, குறைந்த விலையில், வசதியான போக்குவரத்து வசதியை பயணிகளுக்குச் செய்து தரவேண்டிய கடமை ரயில்வே துறைக்கு உண்டு. எனவே, ரயில் கட்டணங்களை, குறிப்பாக இரண்டாம் வகுப்பு கட்டணங்களையும், நகர்ப்புற ரயில் கட்டணங்களையும் குறைவாக வைத்துக்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்து வந்திருக்கிறது.

ரயில்வே பட்ஜெட்:  இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

இரண்டு, சரக்குப் போக்குவரத்துக்கு, குறிப்பாக பெரிய, எடை அதிகமுள்ள நிலக்கரி, கனிமங்கள், உரம், பெட்ரோல் இயந்திரங்கள், உணவு தானியங்கள் ஆகியவற்றின் போக்குவரத்துக்கு ரயில்வே அவசியமாகிறது. ஆனால், பயணிகள் கட்டணத்தில் ஏற்படும் குறைபாட்டை சரி செய்ய சரக்கு கட்டணங்களை அவ்வப்போது அதிகமாகவே உயர்த்தி வருவதால், சரக்குப் போக்குவரத்து, ரயில்வேயிலிருந்து சாலைப் போக்குவரத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இதனால், ஒவ்வொரு வருடமும், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தைவிட, ரயில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே போகிறது. இதனால் சரக்குக் கட்டண வருவாய்களும் அதிக அளவில் உயர்வதில்லை.

ரயில்வே பட்ஜெட்:  இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

மூன்று, இந்தியன் ரயில்வே யில் ஆபரேட்டிங் ரேஷியோ (Operating Ratio)வருடந்தோறும் உயர்ந்துவருவது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆபரேட்டிங் ரேஷியோ, அதாவது ஓ.ஆர். என்றால் என்ன? பயணிகள், சரக்குகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்குக் கிடைக்கும் வரவுக்கும் - செலவுக்கும் உள்ள விகிதமாகும். உதாரணமாக, ஓ.ஆர். 95% என்றால், கட்டணங்கள் மூலம் பெறப்படும் 100-ல் ரூ.95 போக்குவரத்து செலவான எரிசக்தி, ஊழியர் சம்பளம், பராமரிப்பு ஆகியவற்றுக்குச் செலவாகிறது. மீதமுள்ள ரூ.5-ல்தான் முதலீட்டு பொருட்களின் தேய்மானம், பாதுகாப்பு, புதிய முதலீடுகள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்குச் செலவு செய்யவேண்டும் எனவே, ஓ.ஆர். எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு புதிய முதலீட்டிற்கும் மற்ற செலவுகளுக்கும் போதுமான பணம் ரயில்வேயிடம் கையிருப்பு இருக்கும்.

நான்கு, அண்மைக்காலங்களில் ரயிவேயில் பாதுகாப்பு குறைந்து, விபத்துகள் அதிகமாகி யுள்ளன.

பிரச்னைகளுக்கான பரிந்துரைகள் !

ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆராய டாக்டர் அனில் ககோட்கர் தலைமையில் குழு அமைத்து, பிரச்னைகள் ஆராயப்பட்டன. இக்குழு 2012-ல் அறிக்கை சமர்ப்பித்தது. இதில்...

* 2012-17-ல், ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில், ரயில்வே பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.

* ரயில் கட்டண வருவாய் குறைவாக இருப்ப தால், பாதுகாப்பு செலவுகள் தேவையைவிட மிகக் குறைவாக உள்ளது.

* ரயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தனி ஆணையம் உருவாக்கி கட்டாயமாகப் பாதுகாப்பு செலவுகள் செய்யப்படவேண்டும்.

* தானியங்கி லெவல் கிராஸிங் (Automatic Level Crossing),, பாதுகாப்பான ரயில் இயந்திரங்கள், ஆராய்ச்சிக்கான தனித் துறை என பல பரிந்துரைகளை இக்குழு செய்துள்ளது.

ரயில்வே பட்ஜெட்:  இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

இதேபோல், இந்திய ரயில்வேயை நவீனப்படுத்த சாம் பிரிட்ரோடா குழு அமைக்கப்பட்டு, அக்குழுவுக்கு 12-ம் ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ரூ.3.96 லட்சம் கோடி முதலீட்டில் நவீனமயமாக்க பல திட்டங்களை பரிந்துரை செய்துள்ளது. எனவே, 2012-17-ல் ரூ.5 லட்சம் கோடி முதலீடு இருந்தால் மட்டுமே இந்திய ரயில்வே நிமிர்ந்து நிற்க முடியும் என்ற நிலை உள்ளது.

முதலீட்டுக்கு வழி !

இந்த முதலீட்டினை நான்கு வழிகளில் பெறலாம்.

1. மத்திய அரசு, தனது பட்ஜெட் மூலமாகக் கொடையாக அளிக்கிறது; இன்றைய நிதிச் சிக்கலில் மத்திய அரசு இதனை செய்ய முடியாது.

2. நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவது; இதனால் வருங்காலத்தில் வட்டி செலவு உயரும். இதனை எதிர்கொள்ளும் வகையில் ரயில் கட்டணங்கள் உயரவேண்டும் இது சாத்தியமா?

3. ரயில்வேயிடம் உள்ள உபரி நிலங்களை விற்பது; தனியார் துறையின் ஒத்துழைப்புடன் புதிய திட்டங்களை அமல்படுத்துவது. நாட்டில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் உபரி நில விற்பனையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. பொதுவாக, அரசுத் துறையில் தனியார் நுழைவதை ஊழியர்கள் முதல் பயணிகள் வரை எல்லோரும் எதிர்ப்பதால், இதுவும் சாத்திய மில்லை.

4. ரயில்வே தன் சொந்த நிதியை உயர்த்துவது; இதற்கு ரயில் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணங்கள் உயரவேண்டும். இது ஓரளவிற்கே சாத்தியம்.

கட்டுப்படியாகாத கட்டணம் !

சென்ற வருடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில் கட்டணங்களை உயர்த்தியதால், மம்தா பானர்ஜி அவரை பதவி விலகச் செய்தார். பின்பு திரிணாமுல் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய பின் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

இப்போது, டீசல் விலை படிப்படியாக உயர்ந்து, ரயில்வேக்குக் கூடுதலாக லிட்டருக்கு 10.48 வசூலிப்பதும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. தவிர, மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்வதும் ரயில் செலவை கடுமையாக அதிகரித்திருக்கிறது. டீசல் விலை உயர்வினால், இவ்வருடம் இந்திய ரயில்வேக்கு ரூ.10,000 கோடி வரை கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது ரயில் பணிகள், சரக்குக் கட்டணங்களை சரியாக நிர்ணயித்து, செயல்படுத்துவற்கு தனியான 'ரயில் கட்டணம் ஒழுங்குமுறை ஆணையம்’ நிறுவப்பட்டுள்ளது. இது செயல்படும்போது, ரயில் கட்டணங்கள் உயர்வது வழக்கமாகிவிடும்.

மேலும், டீசல் விலை படிப்படியாகத் தொடர்ந்து உயரப்போவதால், அதற்கு ஏற்ப ரயில் கட்டணத்தில் ஒரு பகுதி 'டீசல் கட்டணம்’ என்று குறிப்பிட்டு அப்பகுதி மட்டும், டீசல் உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துகொண்டே போவது போன்ற ஒருமுறையை விரைவில் கொண்டுவரலாம். இந்த முறை

ரயில்வே பட்ஜெட்:  இரண்டாம் ஹீரோவின் ஜாதகம்!

இப்போது விமானக் கட்டணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

என்னதான் தீர்வு ?

சரக்குக் கட்டணங்கள் ஏற்கெனவே உச்சாணியில் இருப்பதால், அதனைத் தொடர்ந்து உயர்த்துவது சாத்தியமில்லை. மேலும், ரயில் சரக்குப் போக்குவரத்தை இன்னும் சிறப்பாக்கி, செயல்திறனை பெருக்கி, சரக்கு கட்டண வருவாயை உயர்த்தவேண்டும். இது இந்தியப் பொருளாதாரத்தின் உற்பத்தி உயர்வுக்கு உதவுவது போல, ரயில் கட்டண வருவாய் உயர்வுக்கும் உதவி செய்யும்.

மேலும், இந்திய ரயில்வேயின் ஆபரேட்டிங் ரேஷியோ (OR) தற்போதுள்ள 95 சதவிகிதத்தில் இருந்து 70-75% வரை குறையவேண்டும். இதற்கு ஒருபுறம் கட்டணங்கள் உயர்வும், மற்றொருபுறம் ரயில்வே செயல்திறன் உயர்வும், அதனால் செலவுகள் குறையவும் வேண்டும். செயல்திறன் உயரவேண்டுமெனில், உபரி ஊழியர்கள் குறைப்பு, நவீனமயமாக்கல், பாதுகாப்பை உயர்த்துதல் போன்றவை நடைபெறவேண்டும். இவற்றுக்கு கூடுதல் முதலீடு வேண்டும்.

ஆகவே, 2013-14 ரயில்வே பட்ஜெட் பயணிகள் கட்டண உயர்வு, கூடுதல் முதலீடு பெறும் வழிவகை காண்பது ஆகிய இரண்டு அம்சங்களை மையமாகக்கொண்டதாக அமையும்.

(முன்னோட்டம் முடிந்தது)

 பட்ஜெட் உரை

வருடந்தோறும் பிப்ரவரி கடைசி வேலை நாள் அன்று காலை 11.00 மணிக்கு நிதி அமைச்சர் சம்பிரதாய பட்ஜெட் உரை நிகழ்த்துவார். இந்த பட்ஜெட் உரை பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இருக்கும். 1982, அப்போதைய நிதி அமைச்சரும், இன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி ஒரு மணி 35 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரை நிகழ்த்தினார். இதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, இந்தியாவின் மிகக் குள்ளமான நிதி அமைச்சர், மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்று நகைச்சுவையாக கூறினார்.

1991-ல் அப்போதைய நிதி அமைச்சரும் இப்போதைய பிரதமருமான மன்மோகன் சிங் 2 மணி நேரத்திற்கு பட்ஜெட் உரை நிகழ்த்தினார். 2003-ல் நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங் 2 மணி நேரத்திற்கு மேல் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். பொதுவாக, எல்லா நிதி அமைச்சர்களும், பட்ஜெட் உரையின்போது இலக்கியத்திலிருந்து வாசகங்களை எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத் துவது வழக்கமாகிவிட்டது. ப.சிதம்பரம் ஒவ்வொரு பட்ஜெட் உரையிலும் திருக்குறள் கூறுவது வழக்கமாகிவிட்டது.  இப்படி பல சுவாரஸ்யங்கள் உள்ள பட்ஜெட் உரையை எப்படி புரிந்து கொள்வது?

ஒரு பொது முன்னுரையுடன் ஆரம்பமாகும் பட்ஜெட் உரையின் துவக்கத்தில் தற்போதுள்ள பொருளாதாரப் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கான அரசுக் கொள்கை எவ்வாறு இருக்கும் என்று நிதி அமைச்சர் சற்று நீண்ட விளக்கமளிப்பார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் இரண்டு பிரிவுகளாக இருக்கும் பகுதி ஏ-வில் அரசின் செலவுகள் என்னென்ன எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு செலவுகள் செய்யப்படும் புதிய திட்டங்கள் என்னென்ன என்ற விளக்கங்கள் இருக்கும். பகுதி ஏ-வின் முடிவில் நிதிப் பற்றாக்குறை பற்றிய விளக்கங்களும் இருக்கும். பகுதி பி-ல் அரசின் வரி விதிப்பு முறை விளக்கப்படும். இதில் புதிய வரிகள், வரி விகித மாற்றங்கள், வரிச் சலுகைகள், வரிச் சட்ட மாற்றங்கள் எல்லாம் விளக்கப்படும்.

பட்ஜெட் என்பது அரசின் வரவு-செலவு பற்றியது என்பது நன்கு தெரியும். இருந்தாலும் அரசின் கொள்கைகளும் சட்டங்களும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, பட்ஜெட் உரையில் பல இடங்களில் கொள்கை விளக்கங்களும் இருக்கும். ஆகவே, அரசின் வரவு-செலவை பாதிக்கும் அறிவிப்புகள் என்னென்ன என்றும், அவற்றை வெறும் கொள்கை விளக்கங்களிலிருந்து பிரித்துப் பார்ப்பது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism