Published:Updated:

தேவை உடனடி மாற்றங்கள்!

தேவை உடனடி மாற்றங்கள்!

தேவை உடனடி மாற்றங்கள்!

தேவை உடனடி மாற்றங்கள்!

Published:Updated:

பொது பட்ஜெட்டுக்கு கட்டியம் கூறும்விதமாக அமைவதுதான் ரயில்வே பட்ஜெட். கடந்த வாரத்தில் தாக்கலான ரயில்வே பட்ஜெட்டின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை அலசுகிறார் லாஜிஸ்டிக் துறை நிபுணரான வி.சஞ்சீவி.

''ஒவ்வொரு ஆண்டு நிதித் தாக்கல் செய்யும்போதும் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது ரயில்வே அமைச்சகம். இப்படி அறிவிக்கும் திட்டங்களுக்கு எந்தக் குறிக்கோள்களும் இல்லை. எத்தனை வருடங்களில் முடியும் என்கிற இலக்கும் இல்லை. 1974-75-ல் தொடங்கப்பட்ட திட்டங்கள்  இன்றும் முடிக்கப்படாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட 359 திட்டங்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் இருப்பதால், மக்கள் வரிப் பணம் 1.24 லட்சம் கோடி ரூபாய் அநியாயமாக வீணடிக்கப்பட்டு இருக்கிறது.  

தேவை உடனடி மாற்றங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவை உடனடி மாற்றங்கள்!

2.5 லட்சம் திறனில்லா (அன்ஸ்கில்டு) பணியாளர்கள், பராமரிப்புப் பணிகளில்கூட வீணாக்குவதை குறைப்பது, சரக்கு வேகன்களை அதிக சுழற்சியுடன் பயன்படுத்துவது, ரயில்வே துறைக்குச் சொந்தமாக இருக்கும் இடங்களை இன்னும் திறமையாகப் பயன்படுத்துவது போன்ற சீர்திருத்தங்களை செய்யத் தயங்காத நிர்வாகம் வேண்டும். குறிப்பாக, சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் காலதாமதத்தைக் கணிசமாக குறைக்க வேண்டும். பயணிகள் ரயில் கட்டணத்தை சேவைக்கு ஏற்ப உயர்த்தவேண்டும்.  

இப்போது ஒரு நிமிடத்திற்கு 2,000 ஆக இருக்கும் எஸ்.எம்.எஸ். சேவையை 7,000 ஆக மாற்றப் போகிறார்கள். ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பேர் பார்ப்பதுபோல இணையதள சேவை மேம்பாடு போன்ற மின்னணு மாற்றங்கள் கொண்டுவரப் போகின்றனர். ஆனால், பணியாளர் சீர்திருத்தமோ அல்லது மனித உழைப்பை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களோ இல்லை.

ரயில்வே துறையில் பல புதிய மாற்றங்களைகொண்டு வருவதன் மூலம் வருமானத்தைப் பெருக்க முடியும். இதற்கு சமரசமில்லாத நிர்வாகம், தொலைநோக்குகொண்ட ஆட்சியாளர்கள் வேண்டும். நம் துரதிர்ஷ்டம் இரண்டுமே நமக்குச் சரியாக அமையவில்லை என்பதே!'' என நச்சென முடித்தார் சஞ்சீவி.

- நீரை.மகேந்திரன்,

படங்கள்: எம்.உசேன், பா.கார்த்திக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism