Published:Updated:

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

Published:Updated:
வெறும் 2,000 ரூபாய் போதுமா?
##~##

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் இது. அதனால் சாதாரண மக்களுக்கு அதிக வருமான வரிச் சலுகையை வாரி வழங்குவார் நிதி அமைச்சர் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வரியைக் குறைப்பதற்கு பதில், வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 வரிச் சலுகை இல்லை..!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அடிப்படை வருமான வரி வரம்பான

ரூ.2 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை. பிறகு என்னதான் சலுகை என்கிறீர்களா?

ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு ரூ. 2,060 வரி தள்ளுபடிதான் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, அடிப்படை வரம்பு ரூ. 2 லட்சம் என்பதை

ரூ. 2.2 லட்சம் ரூபாயாக அதிகரித்தால், அனைத்து வரிதாரர்களுக்கும் 2,060 ரூபாய் வரி மிச்சமாகும். இதைத் தவிர்க்கும்பொருட்டு 5 லட்சம் ரூபாய் என்கிற உச்சவரம்பை புத்திசாலித்தனமாக நிதி அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

வீட்டுக் கடனுக்கு சலுகை..!

வங்கி அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குவோருக்குக் கூடுதலாக ரூ. 1 லட்சம் வரிக் கழிவு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.

ஏப்ரல் 1- 2013லிருந்து 2014, மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ. 25 லட்சத் துக்குள் கடன் பெற்று ஒருவர் வீடு வாங்கும் முதல் வீட்டுக்கு, அவர் செலுத்தும் வட்டிக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் வரை வரிக் கழிவைப் பெறலாம். ஒருவேளை மேற்கண்ட காலகட்டத்தில், இந்த வரிக் கழிவை முழுமையாகப் பெற முடியாவிட்டால், மீதி வரிக் கழிவை 2015-2016-ல் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகையுடன், கூடுதலாக இந்த ரூ. 1 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும் என்பது அடுத்த நிபந்தனை. இந்தக் கூடுதல் வரிச் சலுகை 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். 40 லட்சம் ரூபாய்க்குள் பெருநகரங்களில் வீடு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில், இச்சலுகை சிறு நகரங்கள் மற்றும் புறநகர்களில் வீடு வாங்குபவருக்கு மட்டுமே பயன்படும்.

ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்..!

ராஜீவ்காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான,

10 லட்சம் ரூபாய் வருமான வரம்பு  

ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையிலான தொகைக்கு 50% சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப 2,500 முதல் 7,500 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 50,000 முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டிலும் வருமானத்திலிருந்து ரூ.25,000த்தை கழித்துக்கொள்ளலாம்.

- சி.சரவணன்.

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

 ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்;

பெரும் மாற்றம்..!

- சங்கரன் நரேன், தலைமை முதலீட்டு அதிகாரி, ஐ.சி.ஐ.சிஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்.

''ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தில் (ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்.) அனைத்து வருமானப் பிரிவினரும் முதலீடு செய்யும்படி இ.எல்.எஸ்.எஸ்.போல் எளிமையாக மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது. கடன் ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 12.5 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு வருமானம் குறையும். மற்றபடி நல்ல பட்ஜெட், பணக்காரர்களுக்கு 10% கூடுதல் வரி போட்டிருப்பது மூலம் மட்டுமே 10,000 கோடி ரூபாய் அதிக வரி கிடைக்கிறது. அரசின் வரி வருமானம் அதிகரிக்கும்போது, நிதியாண்டு பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறையும். இதனால், வட்டி விகிதம் குறைந்து நாட்டின் வளர்ச்சி மேம்படும். அந்த வகையில் இது வளர்ச்சிக்கான பட்ஜெட்''.

வெறும் 2,000 ரூபாய் போதுமா?

 காற்றாலைக்கும் நன்மை!

 - ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை.

''காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை மீண்டும் கொண்டுவந்துள்ளது தளர்ந்து போயிருக்கும் இத்தொழிலுக்கு ஊக்குவிப்பு தருவதாக அமையும். காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 50 பைசா அதிகமாக கிடைக்கும். துரித தேய்மானம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை மட்டும் தரப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) நல அமைச்சகத்துக்கு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism