Published:Updated:

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

Published:Updated:
எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!
##~##

ரொம்பவுமே எதிர்பார்ப்புடன் நான் இந்த வருஷம் பட்ஜெட்டை டிவியில பார்த்தேங்க. ஏன்னா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கொஞ்சநாளாவே காய்ஞ்சுபோய் இருக்கோம். விலைவாசி, வாடகை, பஸ், கரன்ட், பெட்ரோல், டீசல், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு எல்லா கெட்ட விஷயங்களுமே அதிகரிச்சு பல கெட்ட விஷயங்களையே வாசிச்சுகிட்டும், சுவாசிச்சுக்கிட்டும் இருந்ததாலே பட்ஜெட் வர்றதுக்கு முன்னாடி கேள்விப்பட்ட பல விஷயங்கள் என்னோட எதிர்பார்ப்பை ரொம்பவுமே தூண்டிவிட்டிருச்சு.

வரப்போகுதுடா நல்லதொரு எதிர்காலம். நம்ம ஆளு போடுவாரு பாரு ஒரு சூப்பர் பட்ஜெட். ஏழைப் பங்காளன், மிடில்கிளாஸின் சூப்பர் ஸ்டார் அப்படி இப்படின்னெல்லாம் நினைச்சுட்டு டிவி முன்னாடி உட்கார்ந்திருந்தேங்க. அவரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் போடப்போற பட்ஜெட். 1997-ல போட்டாரே ஒரு போடு! அந்த மாதிரியா ஒரு ட்ரீம் பட்ஜெட்டை போட்டுடுவாரு. தேனும் பாலும் நாட்டுல ஓடப்போகுதுன்னு கனவு கண்டுகிட்டு இருந்தேங்க.

ஏன்னா 2008-ல அவர் போட்ட பட்ஜெட்டிற்கு பின்னாடி நடந்த கெட்ட விஷயங்கள்

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

பலப்பல.  எதிர்பார்த்தது எதுவுமே நடக்கலை. ஜி.டி.பி. வளர்ச்சி குறைஞ்சுடுச்சு, கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்ப்ளேஷன் டபுள் டிஜிட்டிலேயே இருக்குது, ஃபிஸ்கல் டெபிசிட்டும், கரன்ட் அக்கவுன்ட் டெபிசிட்டும் சொல்லிக்கிற மாதிரி வேற இல்லே. அதனாலயே ஜனங்க நிலைமை நஞ்சுபிஞ்சு போயிருக்குது. ஏதாவது சூப்பராச் செஞ்சு எல்லோரையும் காப்பத்திடுவாருன்னு நினைச்சு மனப்பால் குடிச்சேங்க.

ஐயா பட்ஜெட் படிக்க ஆரம்பிச்சாரு. என்னா ஒரு அழுத்தம் திருத்தம். சொல்லச் சொல்ல தேன் வந்து பாய ஆரம்பிச்சுதுங்க காதுல. என்ன ஏகாம்பரம் கிண்டலா? வயித்தெரிச்சலைக் கொட்டாதேங்கிறீங்களா?

நெசந்தாங்க, காலையில அம்மா செஞ்ச பொங்கலை ஒரு கட்டு கட்டீட்டு ஆபீஸுக்குப் போனதால வந்த வினை. டிவி முன்னாடி உட்கார்ந்து கண்ணசந்துட்டேன். தலை

சாய்ஞ்சவுடனே சுதாரிச்சு முழிச்சுப் பார்த்தா, நம்ம ஐயா வாசிக்க ஆரம்பிச்சிருந்தாரு. கனவுல கண்ட மாதிரியே என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு, அழுத்தம்திருத்தம். படிச்சாரு படிச்சாரு படிச்சு முடிச்சேபுட்டாரு. ஆனா, என்ன சொன்னாருன்னு திரும்ப யோசிச்சா, எதுவும் சொல்லத் தோணலை.

சம்பளக்காரன் ரொம்பவும் கஷ்டத்துல இருக்குறானே! அவனுக்கு ஒரு நல்ல ரிலீப் தருவோம். நாம பண்ணாட்டி யார் அவனுக்குப் பண்ணுவான்னுல அவரு யோசிச்சிருக்கணும். எதுவும் பண்ணலியே. சம்பளம் வாங்குறேல்ல! கட்டு டாக்ஸைன்னு கராறா சொல்லீட்டுப் போயிட்டாரு. இரண்டாயிரம் ரூபாய் சலுகை இருக்குதாம். எங்கே போயி முட்டிக்கிறது நாமெல்லாம். மாசச் சம்பளக்காரன் பட்ஜெட்டுல பெரிய துண்டு விழ ஆரம்பிச்சு நாலு வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சு. அந்தத் துண்டை சரி பண்றதுக்கு ஒரு ஸ்கூல் போற பிள்ளையோட கர்ச்சீப்பை கொடுத்த மாதிரி சலுகை கொடுத்திருக்காராம். கேட்டா, நாடு சரியில்லை; உலகம் சரியில்லைன்னு சொல்றாரு. ஏங்க நாடும் உலகமும் சரியில்லாமத்தான் இருக்கும். எப்பப் பார்த்தாலும் அதைக் காரணம் காட்டிக்கிட்டு இருக்கப்படாது. பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் திறமையா மேனேஜ் பண்ணுவீங்கன்னுதானே உங்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து ஜனங்க அனுப்பியிருக்காங்க; அது தெரியாதா உங்களுக்கு?

பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவா இருக்குது. நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது பொருளாதாரம். ஆனா, இடையில கொஞ்சம் அப்படி இப்படி லஞ்ச ஊழல் பிரச்னை பிரவாகமெடுத்து ஆடுனப்ப, நீங்க பாட்டுக்கு அதைக் கவனிச்சுட்டு நின்னுக்கிட்டு இருந்திட்டீங்க. பொருளாதாரம் அது போற போக்கில போயி சுவத்துல முட்டி நின்னுக்கிடுச்சு. இப்பவும் அதை எப்படி திருப்பி வளர்ச்சிப் பாதையில திருப்பி விடுறதுன்னு யோசிக்காம கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க! கொஞ்சம் அனுசரியுங்கன்னு திரும்பத் திரும்பச் சொல்றீங்களே இது நியாயமா?

அரசாங்கம் பண்ற பல்வேறு வித செலவுகளிலே பல்வேறு சைஸில லீக்கேஜ் இருக்குதுன்னு சொல்றாங்க. அந்த ஓட்டைகளை அடைக்க ஏதாவது வழி சொல்லியிருக்கீங்களான்னு பார்த்தா, இல்லை. தொழில் அதிபருங்களுக்குப் பல்வேறு விதமான சிக்கல்கள். அதையெல்லாம் களையறதுக்கு ஏதாவது வழியிருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. தொழிலாளர் சட்டம் முதல் ஏகப்பட்ட துறையில ஏகப்பட்ட மாறுதல்கள் செய்யவேண்டியிருக்குது. அதுக்கு ஏதாவது சொல்லியிருக்கீங்களான்னு பார்த்தா அதுவும் இல்லை.

நீங்க முன்னாடி போட்ட ட்ரீம் பட்ஜெட்டுக்கப்புறம் நாடு கண்ட வளர்ச்சியில பலவிதமான மாறுதல்கள் வந்துடுச்சு. ஆனா, சட்டங்களோ துருப்பிடுச்சு பீஸ்பீஸா ஆகிப் போனதா இருக்குது. அதை நடப்புக்கு ஏத்த மாதிரி சரிபண்ண ஏதாவது முயற்சி இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. இன்ப்ளேஷனை குறைக்கறதுக்கு ஏதாவது வழி சொல்லியிருக்கீங்களான்னு பார்த்தா அதுவும் இல்லை.

எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!

சரி, இதுவரைக்கும் நான் சொன்னதைச் செய்யறதுக்காவது நிறைய தைரியம் வேணும். எலெக்ஷன் வேற வருது. கொஞ்சம் நெளிவுசுளிவா இருக்காலமுன்னு நினைச்சுட்டீங்கன்னு வச்சுக்குவோம். அது என்னங்க இன்கம்டாக்ஸில ஒரு கஞ்சத்தனம். கொஞ்சம் லிமிட்டை தாராளமா உயர்த்துனாத்தான் என்ன? சம்பளக்காரன் கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? சிக்கிட்டாண்டா அடிமைன்னு சம்பளக்காரனையே போட்டு நொங்கெடுக்கிறீங்களே! புதுசா டாக்ஸ் அசெசியைக் கொண்டுவர்றதுக்கு ஏதாவது திட்டம் சொன்னீங்களா? என்னைச் சுத்தி இருக்கற பாதிப்பேரு கேஷ் பேசிஸில வியாபாரம் பண்ணிக்கிட்டு என்னைய மாதிரி பத்து மடங்கு சம்பாதிச்சிட்டு இன்னிக்கு வரைக்கும் சவடாலா சுத்திவரான். அவனை டாக்ஸ் கட்ட வைக்குற எண்ணமே உங்களுக்கு இருக்கற மாதிரித் தெரியலையே. இன்னமும் பழைய ஆளுங்களையே வாட்டி வசூல் பண்ற முயற்சியில இருக்கீங்களே தவிர, புதுசா ஆள் சேர்க்கிற எண்ணமே இல்லாமப் போயிடுச்சே.

எந்த ஆங்கிளிலே பார்த்தாலும் பட்ஜெட் சும்மா காமா சோமான்னுதான் இருக்கே தவிர, ஒரு தைரியமான பட்ஜெட்டாத் தெரியலையே. நமக்கெதுக்கு வம்புன்னு நினைச்சுக்கிட்டே போட்ட மாதிரியில்ல இருக்குது. இப்படி ஒரு பிசுபிசுத்த பட்ஜெட்ட ட்ரீம் பட்ஜெட்ட போட்ட பி.சி.தான் போட்டாருன்னு வரலாற்றில உங்க பேரு நின்னுடாதா? சாமான்யனோட கவலைகள் உங்களுக்குத் தெரியலையா, இல்லை தெரியாத மாதிரியே காண்பிச்சுக்கிறீங்களா?

ஒண்ணு மட்டும் நிச்சயங்க. நீங்க பட்ஜெட்டை வாசிக்க வாசிக்க மேடம் டேபிளை தட்டி ஆர்ப்பரிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, நீங்க வாசிச்ச பட்ஜெட் பாஸாகி நடைமுறைக்கு வந்து பெரிசா சாதிக்க முடியாதுன்னு தெரியறப்ப மிடில்கிளாஸுங்கல்லாம் கண்ணு சிவந்து போயிடுவாங்க. மனசுக்குள்ள உங்களை ஃபெயில் போட்டிட்டாங்க. எதுக்கும் கவனமா இருந்துக்குங்க, சாமியோவ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism